காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் முத்தீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் முத்தீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:முத்தீஸ்வரர்.

காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேற்கு நோக்கிய சந்நிதியான இது; சித்திரப்பிரதிட்டை, பாதுகை பிரதிட்டையுடையதாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்[தொகு]

தல வரலாறு[தொகு]

கயிலையில் சிவபெருமான் வாமதேவ முனிவருக்கு கொடுத்தருளிய சிவலிங்கத்தை வாமதேவர் காஞ்சியில் பிரதிட்டை செய்து வழிபட்டார். வாமதேவ முனிவர் இறைவன் திருவருளினால் கயிலை அடைந்து, இறைவனை வணங்கி அவ்விறைவன் கொடுத்த ஓர் லிங்கத்தைப் பெற்று மீளவுங் காஞ்சியை அடைந்து பிறவாத்தானத்திற்கு மேற்கில் முக்தீசுவரர் என்னும் பெயரால் தாபித்து போற்றினார் என்பது வரலாறு.[2]

தல பதிகம்[தொகு]

  • பாடல்: (முத்தீச்சரம்)
மேன்மை சான்ற பிறவாத் தான மேற்றிசை
ஞான வாவி ஞாங்கர் முத்தீச் சரனென
மான முத்தித் தளியின் நிறுவி வாழ்த்தினான்
ஏன வெண்கோட் டணியார்க் கினிதாம் அன்னதே.
  • பொழிப்புரை:
மேன்மை அமைந்த பிறவாத் தானம் எனும் தலத்திற்கு மேற்குத்
திசையில் ஞானதீர்த்தத்திற்கு அயலில் முத்தீச்சரப்பிரானெனப் பெருமை
யுடைய முத்தீச்சரர் திருக்கோயிலில் நிறுவிப் போற்றினார். அத்தலம் பன்றிக்
கோட்டினை அணிந்த பிரானார்க்கு இனியதாகும்.[3]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரத்தின் வடக்கு பகுதியான கம்மாளத் தெருவிலுள்ள காஞ்சி பிறவாதீசுவரர் கோயில் வளாகத்தில் மேற்கிலும், காஞ்சி இறவாதீசுவரர் கோயில் கிழக்கிலும் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி மகாலிங்கேசுவரர் கோயிலின் வடமேற்கில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 48. பிறவாத்தானப் படலம் (1651-1660) | 1660 முத்தீச்சரம்.
  2. "palsuvai.net காஞ்சி சிவத்தலங்கள் | 36. முக்திஸ்வரர்". 2016-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-03-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | பிறவாத்தானப் படலம் | பாடல் 10| பக்கம்: 490
  4. "shaivam.org | முத்தீசம் முத்தீஸ்வரர் திருக்கோவில்". 2018-02-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-03-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

புற இணைப்புகள்[தொகு]