காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் ரோமசரேசம். | |
---|---|
பெயர் | |
பெயர்: | காஞ்சிபுரம் ரோமசரேசம். |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ரோமசரேஸ்வரர். |
காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் (ரோமசரேசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மிகவும் பழமையான திருக்கோயிலாக அறியப்பட்ட இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
இறைவர், வழிபட்டோர்
[தொகு]- இறைவர்: ரோமசரேஸ்வரர்.
- வழிபட்டோர்: ரோமச முனிவர்
தல வரலாறு
[தொகு]முற்காலத்தில் இது பெரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும்; தற்போது மூலவர் - ரோமசரேசுவரர் மட்டுமே சிவலிங்க மூர்த்தமாக உள்ளார்.[2]
அமைவிடம்
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரத்தின் கிழக்கு பகுதியான மாமல்லன்நகர், சத்யா நகர் - பெரியார் நகர் இவைகளைக் கடந்து, தொடர்வண்டி பாதையை கடந்து சென்று இக்கோயிலை அடையலாம். மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்கிழக்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருக்கச்சிநெறிக்காரைக்காடு கோயிலுக்கு செல்லும் பாதையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "shaivam.org | ரோமசரேசம் | (ரோமசேசம்) | ரோமசரேஸ்வரர்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-29.
- ↑ "shaivam.org | ரோமசரேசம் (ரோமசேசம்)". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-29.
- ↑ "shaivam.org | (ரோமசேசம்)". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-29.