பஞ்ச குரோச தலங்கள்
Appearance
பஞ்ச குரோச தலங்கள் என்பவை சிவபெருமானது தலங்களில் காசிக்கு சமமானதாக வகைப்படுத்தப்பட்ட தலங்களாகும். குரோச என்பதற்கு காசிக்கு நிகரான என்று பொருள்தரப்படுகிறது. காசியிலும், கும்பகோணத்திலும் பஞ்ச குரோச தலங்கள் உள்ளன.[1]
தொன்மம்
[தொகு]அமுதக் குடத்தினை சிவபெருமான் சிதைத்தார். அதனால் பல்வேறு இடங்களிலும் அமுதம் சிந்தியது. ஐந்து குரோசம் வரையில் இந்த அமுதம் பரவி ஐந்து தலங்களை உண்டாக்கியதால் பஞ்ச குரோச தலங்கள் எனப்படுகின்றன.[2]
ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும். குறைவான நேரத்தில் சென்றடையக் கூடிய இடமாக உள்ளதால், இந்த தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி இறைவனை தரிசனம் செய்து வருகின்றனர். மகாமக காலங்களில் இந்தக் கோயில்களை தரிசனம் செய்ய காலங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி தரிசனம் செய்கின்றனர்.
தலங்கள்
[தொகு]- சிவசைலம் - சிவசைலம் சிவசைலப்பர் கோயில்
- ஆழ்வார்குறிச்சி - ஆழ்வார்குறிச்சி வன்னீஸ்வரர் கோயில்
- கடையம் - கடையம் வில்வவனநாதர் கோயில்
- திருப்புடைமருதூர் - திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்
- பாபநாசம் - பாபநாசம் பாபநாசர் கோயில்