காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அனந்த பத்மநாபேசர்.

காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் (அனந்த பத்மநாபேசம்) என விளங்கும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்[தொகு]

  • இறைவர்: அனந்த பத்மநாபேசர்.
  • வழிபட்டோர்: திருமால்.

தல வரலாறு[தொகு]

கயிலாயத்தில் இறைவனும் இறைவியும் ஏதேனும் ஓர் விளையாட்டை விளையாடலாம் என்றெண்ணி ஓர் விளையாட்டை விளையாடினர். அப்போது அங்கிருந்த திருமாலை அவ்விளையாட்டிற்குரிய நடுவராக நியமித்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தனர். விளையாட்டின் இறுதியில் அம்பிகையே வெற்றி பெற்றாள். ஆனால் தான் தான் வெற்றி பெற்றதாக இறைவன் கூறினார். நடுவராக இருந்த திருமாலோ இருவருடைய மாறுபாடான நிலைமையைக் கண்டு, தன் நடுநிலைமை மாறி இறைவனே வெற்றி பெற்றதாக கூறினார். அம்பிகை சினங்கொண்டு திருமாலை "பாம்பாகப் போவக்கடவாய்" என்று சபித்தார். நடுக்கமுற்று பிழையுணர்ந்து திருமால் வேண்ட, மனம் இரங்கிய அம்பிகை காஞ்சியில் சென்று சிவலிங்கம் தாபனம் செய்து வழிபாடாற்றுமாறு பணித்தாள். திருமாலும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து 'அனந்த பத்மநாபன்' என்னும் திருநாமத்தில் பெருமானை பிரதிட்டை செய்து வழிபட்டுச் சாப விமோசனம் பெற்றார் என்பது இத்தல வரலாறு.[2]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் நடுப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) லிங்கப்பையர் தெருவில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வழியாக காஞ்சி சங்கர மடம் கடந்து சற்று சென்றால் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Project Madurai, 1998-2008 | காஞ்சிப் புராணம் | 58. அனந்த பற்பநாேபசப் படலம் 1869-1878
  2. "shaivam.org | (அனந்த பத்மநாபேசம்) அனந்த பத்மநாபேசர்". Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  3. "shaivam.org | அனந்த பத்மநாபேசம்". Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.

புற இணைப்புகள்[தொகு]