சப்த கைலாய தலங்கள்
சப்த கைலாய தலங்கள் எனப்படுவது உமாதேவியார் இறைவன் சிவனுடன் கலந்து அவருடைய இடப்பாகம் பெறுவதற்காக அருணாச்சலேசுவரம் நோக்கிச் செல்லும் பயணத்தில் ஏழு இடங்களில் இலிங்கங்களை வைத்துப் பிரதிட்டை செய்து வழிபட்ட இடங்களைக் குறிக்கும்.
இந்த எழு தலங்களும் சேயாற்றின் தென் கரையில் அமைந்துள்ளன.[1] அவை:
- மண்டகொளத்தூர்[2]
- கரைப்பூண்டி
- தென்பள்ளிப்பட்டு
- பழங்கோயில்
- நார்த்தாம்பூண்டி
- தாமரைப்பாக்கம்
- வாசுதேவம்பட்டு