முக்தி தரவல்ல சிவத்தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முக்தி தரவல்ல சிவத்தலங்கள் என்பவை உயிர்களின் ஆத்மாவிற்கு வீடுபேறு கிடைக்க செய்யும் சிவத்தலங்களாகும். இந்து சமயத்தில் முக்தி தரவல்லவர்களாக மும்மூர்த்திகள் உள்ளார்கள். இவர்களில் திருமாலும், பிரம்மாவும் ஆன்மாக்களின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப முக்தி தருபவர்களாகவும், சிவபெருமான் அனைவருக்கும் முக்தி தருபவராகவும் இருக்கிறார். ஏழு பிரளயங்களில் மகா பிரளயத்தின் பொழுது சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடி அண்ட சராசரங்களையும் தனக்குள் ஒடுக்குகிறார். அப்பொழுது அனைத்து உயிர்களுக்கும் கட்டாய முக்தியை சிவபெருமான் அளிக்கிறார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்[தொகு]

இந்தியாவில் உள்ள நான்கு சிவத்தலங்கள் முக்தி தரவல்லதில் முக்கியமானவையாக எடுத்துரைக்கப்படுகின்றன. அவையாவன,.

  1. திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
  2. சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
  3. திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
  4. அவினாசி- கேட்க முக்தி தருவது
  5. காசி-இறக்க முக்தி தருவது

மேற்கோள்கள்[தொகு]