வாரணாசி
வாரணாசி
वाराणसी | |
---|---|
காசி புனித நகரம் | |
![]() கடிகாரச்சுற்றுபடி: அகல்யா படித்துறை, புது காசி விசுவநாதர் கோயில், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையம், திபெத்தியக் கோயில் (சாரநாத்), பனாரசு இந்து பல்கலைக்கழகம், காசி விஸ்வநாதர் கோயில் | |
அடைபெயர்(கள்): இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப்பிரதேசம் |
மாவட்டம் | வாரணாசி மாவட்டம் |
அரசு | |
• மேயர் | ராம் கோபால் மொலே பி.ஜே.பி |
• எம். பி | நரேந்திர மோடி பி.ஜே.பி |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 3,131 km2 (1,209 sq mi) |
ஏற்றம் | 80.71 m (264.80 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி | 12,01,815 |
• தரவரிசை | 30வது இடம் |
• அடர்த்தி | 380/km2 (990/sq mi) |
• பெருநகர் | 14,35,113 |
மொழிகள் | |
• அலுவலக மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலக சுட்டு எண் | 221 001 to** (** area code) |
தொலைபேசிக் குறியீடு | 0542 |
வாகனப் பதிவு | UP 65 |
ஆண்-பெண் பாலின விகிதம் | 0.926 (2011) ♂/♀ |
எழுத்தறிவு (2011) | 80.12%[3] |
இணையதளம் | varanasi |
காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி (Varanasi) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
பெயர்க் காரணம் அல்லது சொற்பிறப்பு
[தொகு]வாரணாசி என்ற பெயர் இந்நகருக்கு சூட்ட காரணமாக வருணா ஆறும், அசி ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரில் கங்கை ஆற்றில் ஒன்று கூடுவதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.
ரிக் வேதத்தில் இந்நகரை அறிவு தரத்தக்க, ஒளி பொருந்திய நகரம் என்ற பொருளில் காசி என குறிப்பிட்டுள்ளது.[5] ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில், மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது என சிவபெருமான் காசியின் பெருமையை கூறுகிறார்.[6]
சமசுகிருத மொழியில் காசி எனில் ஒளி பொருந்திய நகர் என மொழிபெயர்ப்பு செய்யலாம்.[7]
வரலாறு
[தொகு]கங்கைச் சமவெளியில் அமைந்த வாரணாசி நகரம் இந்துக்களின் வேதங்கள் மற்றும் வேதாந்தம் ஆகியவற்றுக்கு 11-வது நூற்றாண்டு முதல் இருப்பிடமாக அமைந்துள்ளது.[8] வாரணாசி நகரில் மக்கள் வேதகாலத்திலிருந்து தொடர்ந்து பல்லாண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதை வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா (Aktha) மற்றும் ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் பொ.ஊ.மு. 1800-ஆம் ஆண்டிலிருந்தே வாழ்ந்து வந்ததை உறுதிப்படுத்துகின்றனர்.[9]
சமண சமயத்தவர்களுக்கும் வாரணாசி நகரம் புனித இடமாகும். பொ.ஊ.மு. எட்டாம் நூற்றாண்டில் பிறந்த சமண சமய 23-வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதர் பிறந்த ஊர் வாரணாசியாகும்.[10][11][12]
மஸ்லின் பருத்தி துணிகள், பட்டுத் துணிகள், வாசனை திரவியங்கள், யானையின் தந்த சிற்பங்கள், சிற்பக்கலை ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற நகராகும் வாரணாசி.[13]
காசி நாட்டின் தலைநகராக விளங்கிய வாரணாசியில் கௌதம புத்தர் பல ஆண்டுகள் கடும் தவமியற்றி, பின் ஞானம் அடைந்த பின், வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் தன் சீடர்களுக்கு தர்மத்தை போதித்தார்.[14][15]
பொ.ஊ.மு. 635-இல் வாரணாசி வந்த சீன யாத்திரிகரும் வரலாற்று அறிஞருமான யுவான் சுவாங், கங்கைக் கரையில் 5 கி.மீ. நீளத்தில் இருந்த வாரணாசியில் செழித்திருந்த சமயம் மற்றும் கலைநயங்கள் குறித்து பெருமையுடன் தனது பயண நூலில் குறித்துள்ளார்.[13][16]
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் வாரணாசியில் சிவவழிபாட்டை நிலைநாட்டினார்.[17]

மகதப் பேரரசு காலத்தில் வாரணாசி நகரம் தட்சசீலத்திற்கும் பாடலிபுத்திர நகருக்கும் சாலை வழி போக்குவரத்தாக இருந்தது.
1194ஆம் ஆண்டில் துருக்கிய இசுலாமிய ஆட்சியாளர், வாரணாசி நகரத்திலிருந்த ஆயிரக்கணக்கான கோயில்களை இடிக்க ஆணையிட்டார்.[18][19]
இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் வாரணாசி நகரம் மூன்று நூற்றாண்டுகளாக பொழிவிழந்து காணப்பட்டது.[16] இந்தியாவை ஆப்கானியர்கள் ஊடுருவிய காலத்தில் வாரணாசியில் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் எழுப்பப்பட்டன.[17]
1376-இல் பெரோஸ் ஷா என்ற இசுலாமிய மன்னர் வாரணாசியில் உள்ள கோயில்களை மீண்டும் இடிக்க ஆணையிட்டார். 1496-இல் ஆப்கானிய ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி வாரணாசியில் உள்ள இந்துக்களை ஒடுக்கவும், கோயில்களை இடிக்கவும் ஆணையிட்டார்.[18] இருப்பினும் வாரணாசி தொடர்ந்து இந்துக்களின் ஆன்மிகம் மற்றும் கலைகளின் தாயகமாகவே விளங்கியது.
கபீர்தாசரும், 15-ஆம் நூற்றாண்டின் கவிஞர் சமூக சீர்திருத்தவாதி சாது ரவி தாஸும் வாரணாசியில் பிறந்து வளர்ந்தவர்கள். சீக்கிய மத நிறுவனர் குருநானக் 1507-இல் வாரணாசியில் சிவராத்திரி விழாவினைக் காண வந்தார்.[20] இராமாயணம் இயற்றிய துளசிதாசர் இங்கு வாழ்ந்தவர்.

மொகலாய மன்னர் அக்பர், வாரணாசியில் சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு இரண்டு கோயில்களை எழுப்பினார்.[16][18] புனே மன்னர் அன்னபூரணி கோயிலையும், அக்பரி பாலத்தையும் கட்டித்தந்தார்.[21] இந்நகருக்கு புனித பயணம் மேற்கொள்வோரின் (யாத்திரீகர்களின்) வருகை 16-ஆம் நூற்றாண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[22]
1656-ஆம் ஆண்டில் அவுரங்கசீப் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பல கோயில்களையும் இடிக்க உத்தரவிட்டார்.[சான்று தேவை] ஔரங்கசீப், இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும் கங்கையில் நீராடுவதற்கும் ஜிஸியா என்ற வரி விதித்தார்.[சான்று தேவை] ஒளரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’ வரியை அதிகமாகப் பெறுவதற்காக, கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’ வரி கட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.[23]
ஔரங்கசீப் மறைவிற்குப்பின், வாரணாசியில் மராத்திய மன்னர்கள், 18-ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதிய கோயில்களைக் கட்டினர்.[24] மொகலாயர்கள் 1737 முதல் காசி நாட்டை அலுவலக முறையில் அங்கீகாரம் அளித்தனர். பிரித்தானிய இந்திய அரசும் அவ்வங்கீகாரத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டது.

நகர வளர்ச்சியின் பொருட்டு 1867-இல் வாரணாசி நகராட்சி மன்றம் துவங்கியது.
காசி விஸ்வநாதர் கோயில்
[தொகு]
தச அஷ்வமேத படித்துறை அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிசேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். இக்கோயிலில் உள்ள அன்னபூரணி சன்னிதானம் சிறப்பு பெற்றது. இக்கோயில் 1785-இல் இந்தோர் இராச்சியத்தின் ராணி அகல்யாபாயினால் புதிதாக கட்டப்பட்டது. இக்கோயிலின் உயரம் 51 அடியாகும்.1835-ஆம் ஆண்டில் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்த 1000 கிலோ தங்கத்தினை அளித்திருக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் புகழ் பெற்றது. சிவலிங்கத்திற்கு காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் அபிசேகத்துடன் பூசைகள் நடத்தப்பெறுகின்றன.
காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறம் அன்னபூர்ணா கோயில் அமைந்துள்ளது.
சப்த மோட்ச புரிகளில் வாரணாசி
[தொகு]மோட்சம் தரும் எழு புனித நகரங்களில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, அரித்வார், காஞ்சி, உச்சையினி(அவந்தி), துவாரகை --- என கருட புராணம் XVI 1 இல் கூறப்பட்டுள்ளது.[25][26]
காசியின் புகழுக்குக் காரணம்
[தொகு]சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.
கங்கா ஆர்த்தி
[தொகு]காசியின் கங்கைக்கரையில், தினமும் சூரியன் மறைவுக்குப்பின் கங்கைக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வை கங்கா ஆரத்தி என்கின்றனர்.
படித்துறைகள்
[தொகு]வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் 87க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருந்த போதும், பார்க்க வேண்டிய முக்கிய மூன்று படித்துறைகள்;
போக்குவரத்து வசதிகள்
[தொகு]இரயில்கள் பல முக்கிய இந்திய நகரங்களை வாரணாசி நகரம் இணைக்கிறது.[27] சென்னையிலிருந்து ஆறு இரயில்கள் வாரணாசிக்கு செல்கிறது.[28] வாரணாசியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள முக்கிய இரயில் நிலையமான முகல்சராய் வழியாக வாரணாசிக்கு கூடுதலான இரயில்கள் செல்கிறது.
விமான சேவை
[தொகு]வாரணாசியிலிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள பாபத்பூர் (Babatpur) விமான நிலையம் , இந்தியாவின் முக்கிய நகரங்களான தில்லி, சென்னை, பெங்களூரு, கொச்சி, கோவா, கோழிக்கோடு, கோயம்புத்தூர், லக்னோ, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், புனே, இந்தூர், ஜெய்ப்பூர், நாக்பூர், ஜம்மு,கௌஹாத்தியை வான் வழியாக இணைக்கிறது.[29]
தரைவழிப் போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை எண் 7, மற்றும் எண் 56 மற்றும் 29 கன்னியாகுமரி, லக்னோ மற்றும் கோரக்பூர் நகரங்களுடன் இணைக்கிறது.[30][31][32][33]
உள்ளூர் போக்குவரத்து வசதிகள்
[தொகு]வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பேரூந்துகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாடகை கார்கள், ஆட்டோ ரிக்சா மற்றும் கைரிக்ஷாக்கள் உள்ளூர் போக்குவரத்திற்கு எளிதாக கிடைக்கிறது.
அரசியல் & நிர்வாகம்
[தொகு]வாரணாசி நகர நிர்வாகம் வாரணாசி மாநகராட்சி மற்றும் வாரணாசி வளர்ச்சி ஆணையத்தின் கீழ் உள்ளது. வாரணாசி நாடாளுமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வானிலை
[தொகு]வாரணாசியில் கோடைக் காலத்தில் கடுமையான் வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், வாரணாசி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 19.4 (67) |
24.4 (76) |
30.6 (87) |
36.7 (98) |
37.8 (100) |
36.1 (97) |
32.2 (90) |
31.1 (88) |
31.1 (88) |
30.6 (87) |
27.2 (81) |
21.7 (71) |
29.91 (85.8) |
தாழ் சராசரி °C (°F) | 8.3 (47) |
12.2 (54) |
16.7 (62) |
22.2 (72) |
25 (77) |
26.7 (80) |
25.6 (78) |
25.6 (78) |
24.4 (76) |
21.1 (70) |
15 (59) |
10.6 (51) |
19.44 (67) |
பொழிவு mm (inches) | 19.3 (0.76) |
13.5 (0.531) |
10.4 (0.409) |
5.4 (0.213) |
9.0 (0.354) |
100 (3.94) |
320.6 (12.622) |
260.4 (10.252) |
231.6 (9.118) |
38.3 (1.508) |
12.9 (0.508) |
4 (0.16) |
1,025.4 (40.37) |
ஆதாரம்: [34][35] |
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வாரணாசி மக்கள் தொகை 1,435,113 ஆகும். அதில் ஆண்கள் 761,060 மற்றும் பெண்கள் 674,053 ஆகும்.[36] 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் என்ற அளவில் பாலினவிகிதம் உள்ளது. எழுத்தறிவு விகிதம் 77%ஆக உள்ளது. வாரணாசியில் இந்துக்கள், இசுலாமியர்கள், சமணர்கள் அதிகம் வாழ்கின்றனர்.
படக்காட்சியகம்
[தொகு]-
மணிகர்ணிகா படித்துறையில் எரிக்கப்படும் சடலங்கள்
-
காசி விசுவநாதர் கோயில் நுழைவாயில்
-
காசி விஸ்வநாதர் கோயில் கோபுர தங்க விமானங்கள்
-
18ஆம் நூற்றாண்டு துர்கை கோயில்
-
கங்கை ஆற்றாங்கரையில் உள்ள கோயில்களின் காட்சி
-
அஷ்சி படித்துறை
-
முன்சி படித்துறையில் தர்பங்கா அரண்மனை
-
காசி விஸ்வநாதர் கோயிலின் கோபுர தங்க விமானங்கள்
-
மாலையில் நடக்கும் கங்கா ஆரத்தி, தச அஷ்வமேத படித்துறை, வாரணாசி.
-
வாரணாசி, 1883.
-
ஔரங்கசீப் மசூதி
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Varanasi: About the city". Official website of Uttar Pradesh Tourism. Archived from the original on 8 July 2013. Retrieved 23 May 2013.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 12 May 2014.
- ↑ "Varanasi City Census 2011 data". census2011.co.in. Retrieved 11 April 2014.
- ↑ "Cities having population 1 lakh and above" (PDF). Government of India. Retrieved 12 May 2014.
- ↑ Talageri, Shrikant G. "The Geography of the Rigveda". Archived from the original on 10 ஆகஸ்ட் 2011. Retrieved 4 February 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Ministry of Tourism, Government of India(March 2007). "Varanasi – Explore India Millennium Year". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 5 March 2007.
- ↑ Eck 1982, ப. 10, 58, refers to "Banares — which Hindus call Kashi, the City of Light" (p. 10) and "Hindus call it Kashi, the luminous City of Light" (p. 58)..
- ↑ "Important Archaeological Discoveries by the Banaras Hindu University". Banaras Hindu University. Retrieved 23 May 2013.
- ↑ "Banaras (Inde): new archaeological excavations are going on to determine the age of Varanasi". Retrieved 22 May 2014.
- ↑ Banks & Morphy 1999, ப. 225.
- ↑ Partridge 2005, ப. 165.
- ↑ Shackley 2001, ப. 121.
- ↑ 13.0 13.1 Pletcher 2010, ப. 159–160.
- ↑ Herman 1999, ப. 153.
- ↑ Melton & Baumann 2010, ப. 2536.
- ↑ 16.0 16.1 16.2 Berwick 1986, ப. 121.
- ↑ 17.0 17.1 Bindloss, Brown & Elliott 2007, ப. 278.
- ↑ 18.0 18.1 18.2 Sahai 2010, ப. 21.
- ↑ Singh 2009, ப. 453.
- ↑ Gandhi 2007, ப. 90.
- ↑ Mitra 2002, ப. 182.
- ↑ Prakash 1981, ப. 170.
- ↑ குமுதம் ஜோதிடம்; 11. சனவரி 2013 (ஆதாரம்: 1. Fight For the Indian Empire; Dr.Majumdhaar; 2.Ancient and Medieval History of India; Dr.Sathiyanatha Iyer.)
- ↑ Schreitmüller 2012, ப. 284.
- ↑ கருட புராணம்
- ↑ Morgan, Kenneth W; D S Sarma (1987). The Religion of the Hindus. Motilal Banarsidass Publ. pp. 188–191. ISBN 9788120803879. Retrieved 2009-08-09.
{{cite book}}
:|work=
ignored (help); Unknown parameter|nopp=
ignored (help) - ↑ http://indiarailinfo.com/departures/varanasi-junction-bsb/334
- ↑ http://indiarailinfo.com/search/chennai-central-mas-to-varanasi-bsb/35/0/334
- ↑ http://www.expedia.co.in/vc/cheap-flights/varanasi-airport-vns/
- ↑ http://www.mapsofindia.com/driving-directions-maps/nh7-driving-directions-map.html
- ↑ http://wikimapia.org/street/711084/National-Highway-56-Lucknow-Varanasi
- ↑ http://wikimapia.org/street/994129/National-Highway-No-29-Varanasi-Gorakhpur
- ↑ http://timesofindia.indiatimes.com/city/varanasi/Work-on-4-lane-highway-to-start-by-Januray/articleshow/12359124.cms
- ↑ "Seasonal Weather Averages". Weather Underground. December 2010. Archived from the original on 10 ஆகஸ்ட் 2011. Retrieved 22 December 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help), temperature data from Weather Underground - ↑ "Varanasi". Indian Meteorology Department. Archived from the original on 9 ஜூலை 2012. Retrieved 22 December 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help), precipitation data from Indian Meteorology Department - ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. Retrieved 7 July 2012.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Banks, Marcus; Morphy, Howard (1999). Rethinking Visual Anthropology. Yale University Press. ISBN 978-0-300-07854-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Berwick, Dennison (1986). A Walk Along The Ganges. Dennison Berwick. ISBN 978-0-7137-1968-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bansal, Sunita Pant (2008). Hindu Pilgrimage. Pustak Mahal. pp. 6–9, 34–35. ISBN 9788122309973.
{{cite book}}
:|work=
ignored (help); Invalid|ref=harv
(help) - Bhargava, Gopal K.; Bhatt, Shankarlal C. (2005). Land and people of Indian states and union territories. 28. Uttar Pradesh. Gyan Publishing House. ISBN 978-81-7835-384-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bindloss, Joe; Brown, Lindsay; Elliott, Mark (2007). Northeast India. Lonely Planet. ISBN 978-1-74179-095-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Bruyn, Pippa de; Bain, Keith; Allardice, David (18 February 2010). Frommer's India. John Wiley & Sons. ISBN 978-0-470-64580-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - City Development Plan for Varanasi (PDF). ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டம். 2006. Archived from the original (PDF) on 2014-02-23. Retrieved 2015-02-18.
- Callewaert, Winand M. (2000). Banaras: vision of a living ancient tradition. Hemkunt Press. p. 90. ISBN 81-7010-302-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Cunningham, Alexander; Sastri, Surendranath Majumdar (2002) [1924]. Ancient Geography of India. Munshiram Manoharlal. ISBN 81-215-1064-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Das, G. N. (1991). Couplets from Kabīr. Motilal Banarsidass Publ. ISBN 978-81-208-0935-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Eck, Diana L. (1982). Banaras, City of Light. Columbia University Press. ISBN 978-0-231-11447-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Gandhi, Surjit Singh (2007). History of Sikh Gurus Retold: 1469–1606 C.E. Atlantic Publishers & Dist. ISBN 978-81-269-0857-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Gupta, Amita (2006). Early Childhood Education, Postcolonial Theory, and Teaching Practices in India: Balancing Vygotsky and the Veda. Macmillan. ISBN 978-1-4039-7114-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Gupta, Shobhna (2003). Monuments Of India. Har-Anand Publications. p. 11. ISBN 978-81-241-0926-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Herman, A. L. (1999). Community, Violence, and Peace: Aldo Leopold, Mohandas K. Gandhi, Martin Luther King, Jr., and Gautama the Buddha in the Twenty-First Century. SUNY Press. p. 153. ISBN 978-0-7914-3983-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jayaswal, Vidula (2009). Ancient Varanasi: an archaeological perspective (excavations at Aktha). Aryan Books International. ISBN 978-81-7305-355-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kasbekar, Asha (2006). Pop Culture India!: Media, Arts, And Lifestyle. ABC-CLIO. ISBN 978-1-85109-636-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kramrisch, Stella (1946). The Hindu Temple. Motilal Banarsidass Publ. ISBN 978-81-208-0223-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Medhasananda (2002). Varanasi at the crossroads: a panoramic view of early modern Varanasi and the story of its transition. Ramakrishna Mission, Institute of Culture. ISBN 978-81-87332-18-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Mellor, Ronald; Podany, Amanda H. (2005). The World in Ancient Times: Primary Sources and Reference Volume. Oxford University Press. ISBN 978-0-19-522220-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Melton, J. Gordon (1 January 2007). The Encyclopedia of Religious Phenomena. Visible Ink Press. ISBN 978-1-57859-209-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Melton, J. Gordon; Baumann, Martin (2010). Religions of the World, Second Edition: A Comprehensive Encyclopedia of Beliefs and Practices. ABC-CLIO. ISBN 978-1-59884-204-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Merriam-Webster (1999). Merriam-Webster's Encyclopedia of World Religions. Merriam-Webster. ISBN 978-0-87779-044-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Misra, Jaishree (2007). Rani. Penguin Books India. ISBN 978-0-14-310210-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Mitra, Swati (2002). Good Earth Varanasi City Guide. Eicher Goodearth Limited. ISBN 978-81-87780-04-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Mohanty, Bidyut (1993). Urbanisation in Developing Countries: Basic Services and Community Participation. Concept Publishing Company. ISBN 978-81-7022-475-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Pandey, K. N. (1989). Adoption of Agricultural Innovations: A Study of Small and Marginal Farmers of Varanasi, U.P. Northern Book Centre. ISBN 978-81-85119-68-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Partridge, Christopher Hugh (2005). Introduction to World Religions. Fortress Press. ISBN 978-0-8006-3714-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Pintchman, Tracy (2005). Guests at God's Wedding: Celebrating Kartik among the Women of Benares. SUNY Press. ISBN 978-0-7914-8256-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Pletcher, Kenneth (2010). The Geography of India: Sacred and Historic Places. The Rosen Publishing Group. ISBN 978-1-61530-142-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Prakash, Satya (1981). Cultural Contours of India: Dr. Satya Prakash Felicitation Volume. Abhinav Publications. ISBN 978-0-391-02358-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Ray, Satyajit (2003). Adventures Of Feluda : Mystery Of The El. Penguin Books India. ISBN 978-0-14-333574-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sahai, Shashi Bhushan (2010). The Hindu Civilisation: A Miracle of History. Gyan Publishing House. ISBN 978-81-212-1041-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Schreitmüller, Karen (2012). Baedeker India. Baedeker. ISBN 978-3-8297-6622-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Shackley, Myra (2001). Managing Sacred Sites: Service Provision and Visitor Experience. Cengage Learning EMEA. ISBN 978-1-84480-107-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sharma, Urmila; Sharma, S.K. (2001). Indian Political Thought. Atlantic Publishers & Dist. ISBN 978-81-7156-678-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sharma, Virendra Nath (1995). Sawai Jai Singh And His Astronomy. Motilal Banarsidass Publ. ISBN 978-81-208-1256-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Singh, Ram Bali (1975). Rajput Clan-settlements in Varanasi District. National Geographical Society of India. OCLC 4702795.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Singh; Rana, Pravin S. (2002). Banaras region: a spiritual & cultural guide. Indica Books. ISBN 9788186569245.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Singh, Sarina (2009). India. Lonely Planet. ISBN 978-1-74179-151-8.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - The Small Hands of Slavery: Bonded Child Labor in India. மனித உரிமைகள் கண்காணிப்பகம். 1996. ISBN 978-1-56432-172-5.
- Tiwari, Reena (2010). Space-Body-Ritual: Performativity in the City. Lexington Books. ISBN 978-0-7391-2857-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Twain, Mark (1897). "L". Following the Equator: A journey around the world. Hartford, Connecticut, American Pub. Co. ISBN 0-404-01577-8. OCLC 577051.
{{cite book}}
: Invalid|ref=harv
(help); Unknown parameter|chapterurl=
ignored (help) - Vera, Zak (2010). Invisible River: Sir Richard's Last Mission. AuthorHouse. ISBN 978-1-4389-0020-9.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wilder-Smith, Annelies; Shaw, Marc; Schwartz, Eli (2012). Travel Medicine: Tales Behind the Science. Routledge. ISBN 978-0-08-045359-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wood, Jolie M.F. (2011). "Contentious politics and civil society in Varanasi". Re-framing Democracy and Agency at India: Interrogating Political Society. Ed. Ajay Gudavarthy. Anthem Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85728-350-4.
மேலும் படிக்க
[தொகு]- Kara, Siddharth (2010). Sex Trafficking: Inside the Business of Modern Slavery. Columbia University Press. ISBN 978-0-231-13961-8.
- Mukherjee, Neela (2002). Alternative Perspectives on Livelihood, Agriculture and Air Pollution. Concept Publishing Company. ISBN 978-81-7022-986-5.
- Singh (2007). Longman Panorama History 7. Pearson Education India. ISBN 978-81-317-1175-0.
- Trayler, Richard (2010). Life Is Short...Compared to Eternity. Xulon Press. ISBN 978-1-61215-343-8.