ரஞ்சித் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஞ்சித் சிங் மன்னன்

ரஞ்சித் சிங் (Ranjit Singh; பஞ்சாபி: ਮਹਾਰਾਜਾ ਰਣਜੀਤ ਸਿੰਘ); 1780-1839) பஞ்சாபி மக்களின் சீக்கிய பேரரசின் மன்னர். பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர். இவரது சமாதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ளது.

கோகினூர் வைரத்தை ரஞ்சித் சிங் பிரித்தானியா அரசுக்கு அன்பளிப்பாக வழங்கினார் என இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதி மொழி அளித்துள்ளது. [1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ராஜா ரஞ்சித் சிங்

ரஞ்சித் சிங் பஞ்சாபிகளின் இனத்தவர். குஜ்ரன்வாலா (தற்போது பாகிஸ்தானில்) என்ற இடத்தில் 1780 இல் பிறந்தார்[2]. அக்காலத்தில் பஞ்சாப் முழுவதும் சீக்கியரினால் ஆளப்பட்டு வந்தது. ரஞ்சித் சிங்கின் தந்தை "மகா சிங்" மேற்கு பஞ்சாபின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

ரஞ்சித் சிங் தனது 12வது அகவையில் தந்தையின் மறைவிற்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். பல ஆண்டுகளின் பின்னர் இவர் சீக்கியர்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். சீக்கிய இனத்தின் ஆளுகைக்குட்பட்ட பல பகுதிகளை இவர் ஒன்றிணைத்தார்.

மகாராஜா[தொகு]

ஏப்ரல் 12, 1801 இல் ரஞ்சித் சிங் மகாராஜா என்ற பதவிப் பெயரைப் பெற்றார்[3]. 1799 முதல் லாகூர் நகரம் இவரது தலைநகராக விளங்கியது. 1802 இல் புனித நகரான அம்ரித்சர் நகரையும் கைப்பற்றினார்.

பாகிஸ்தான், லாகூரில் ரஞ்சித் சிங்கின் சமாதி

அடுத்தடுத்த ஆண்டுகளில் மேற்கு பஞ்சாபில் இருந்து ஆப்கானிய மக்களைத் துரத்தும் பணியில் ஈடுபட்டார். பெஷாவர் உட்படப் பல பகுதிகளைக் கைப்பற்றினார்.

1839 இல் மகாராஜா ரஞ்சித் சிங் இறந்த பின்னர் அவரது மூத்த மகன் கராக் சிங் மகாராஜா பொறுப்பை ஏற்றான். இவனது ஆட்சியில் சீக் பேரரசு உடைய ஆரம்பித்தது. ரஞ்சித் சிங் இறந்து ஐந்தாண்டுகளில் டுலீப் சிங் என்பவனைத் தவிர அவரது அனைத்துப் பிள்ளைகளும் இறந்தனர்.

1845 இல் இரண்டாம் ஆங்கில-சீக்கிய போரைக்கு அடுத்து பஞ்சாப் அரசு பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மகாராஜாவின் படையினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. 1849 இல் இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போரின் முடிவில் பஞ்சாப் பிரித்தானியாவுடன் இணைக்கப்பட்டது.

இளவரசர் டுலீப் சிங்கை பிரித்தானியர் இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று அங்கு அரசின் நேரடிக் கண்காணிப்பில் வைக்கப்பட்டான். கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றப்பட்டான். எனினும் அவன் தனது கடைசிக் காலத்தில் சீக்கியத்துக்கு மதம் மாறினான்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_சிங்&oldid=2245623" இருந்து மீள்விக்கப்பட்டது