ஞானவாபி பள்ளிவாசல் வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் பிரின்ஸ்செப் வரைந்த வாரணாசியின் ஞானவாபி பள்ளிவாசல் சுவரை ஒட்டிய, சிதிலமடைந்த பழைய காசி விஸ்வநாதர் கோயிலின் பகுதி, ஆண்டு 1822
இந்து கட்டிடக் கலைநயத்தில் ஞானவாபி பள்ளிவாசலின் மேற்குச் சுவர்
ஞான வாபி பள்ளிவாசலுக்கும், பழைய காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த புனித ஞான வாபி எனும் அறிவுக் கிணறு மண்டபத்தில் உள்ள பிள்ளையாருக்கு நீர் அபிசேகம் செய்யும் பக்தர்

ஞானவாபி பள்ளிவாசல் வழக்கு, இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் வாரணாசி நகரத்தில் அமைந்த காசி விஸ்வநாதர் கோயிலின் ஆதி சுயம்பு ஜோதிர்லிங்கம் ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஞானவாபி நீர்நிலையில் இருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். 1664-ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் உத்தரவால் காசி விஸ்வநாதர் கோயில் 2 செப்டம்பர் 1669 அன்று இடிக்கப்பட்ட இடத்தில் ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த வளாகத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாராய்ச்சி செய்ய இந்துக்கள் விரும்புகிறார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் கோயில் இல்லை என மறுக்கின்றனர். இந்துக்களின் முக்கியமான கோயில் பகுதியும், ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. மேலும் பள்ளிவாசல் வளாகத்தை கள ஆய்வு செய்யவும், ரேடார் ஆய்வு செய்யவும், வீடியோ பதிவு செய்யவும் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வளாகத்தை மீண்டும் இந்து தெய்வங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கில் கோரப்பட்டது. 1991-ஆம் ஆண்டில் இந்துக்கள் 3 முக்கிய கோரிக்கைளுடன் வாராணாசி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கோரிக்கைகள் பின்வருமாறு:

1 ஞான்வாபி நிலம் கோயிலின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும்.
2. ஞானவாபி பள்ளிவாசலின் தற்போதைய கட்டமைப்பு இடிக்கப்பட்டு இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
3. ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் சுயம்புவாக உள்ள சிவலிங்கம் உள்ள இடத்தில் புதிய கோயிலை புனரமைக்க அனுமதிக்க வேண்டும். இதனை முஸ்லிம்கள் அதை தடுக்கக்கூடாது.

25 செப்டம்பர் 1998 அன்று, ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தின் எந்த மதத்திற்கு சொந்தமாக இருந்தது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின்படி, அயோத்தியை தவிர, பிற வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் 15 ஆகஸ்டு 1947 அன்று இருந்த நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், சர்ச்சைக்குரிய இடமான ஞான வாபி கிணறு அல்லது பள்ளிவாசல், காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியாக இருந்ததா என்பதை முதலில் தீர்மானிக்க நடவடிக்கை வேண்டும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்தது. காசிவிஸ்வநாத் கோயிலுக்கு ஒரு பழங்கால வரலாறு இருப்பதாகவும், அது மக்களின் இந்து மத உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும் நீதிமன்றம் நம்பியது. எனவே இந்த சர்ச்சையை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

இந்த சர்ச்சைக்கு தீர்வு காண 2018-ஆம் ஆண்டில், ஞானவாபி பள்ளிவாசல் வளாகம் முழுவதையும் இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்து தரப்பு கோரியது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில், காசி விஸ்வநாதர் கோயிலின் பகுதி இல்லை என மறுக்கின்றனர். வாரணாசி மாவட்ட நீதிமன்றம சர்சச்சைகுரிய இடத்தில் அகழாய்வு செய்ய தீர்ப்பு வழங்கியது. ஞான வாபி பள்ளிவாசலில் அகழாய்வு செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டில் மீண்டும் விசாரணை தொடங்கியது. ஆனால் முஸ்லீம் தரப்பு மீண்டும் தடை உத்தரவை பெற்றது.

ஞானவாபி பள்ளிவாசலின் மேற்கு சுவரில் இந்து தெய்வங்களில் சிற்பங்கள், இந்து கட்டிட அமைப்புகள் இருப்பதை இந்துக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் தரப்பினர்[தொகு]

ஞான வாபி பள்ளிவாசல் அறிவுக் கிணற்று வளாகம் குறிதது வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கில் மூன்று தரப்பினர் உள்ளனர். முதல் தரப்பு ஜோதிர்லிங்கமாக உள்ள சிவபெருமானின் நண்பராக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி, காசி விஸ்வநாதர் சார்பாக வாதிடுகிறார். ஞானவாபி பள்ளிவாசல் தரப்பில் உத்தரப் பிரதேச மாநில சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் அஞ்சுமான் இந்தே ஜாமியா மஸ்ஜித் குழு வாதிடுகிறது. 16ஆம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் இங்கு மசூதி கட்டப்பட்டது என்று கூறி உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வழக்கு[தொகு]

18 ஆகஸ்டு 2021 அன்று தில்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள்[1] ராக்கி சிங் என்பவர் தலைமையில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தின் மண்டபத்தில் உள்ள சிருங்கார கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஸ்வநாதர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர். மேலும் பள்ளிவாசலில் உள்ள இந்து தெய்வச் சிலைகளை உடைப்பது, இடிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர்.

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் கோயில் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குழு 14 மே 2022 அன்று (சனிக்கிழமை) முதல் நாள் கள ஆய்வுக்காக அங்கு சென்ற பிறகு இந்த விவகாரம் சர்ச்சையானது.

வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்தியத் தொல்லியல் துறைக்கு ஏப்ரல் 2021 ஆண்டில் உத்தரவிட்டது.

மே 6 மற்றும் 7ம் தேதிகளில் ஞானவாபி பள்ளிவாசலில் வீடியோ மூலம் கள ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இசுலாமியர்கள் களப்பணி செய்வதை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் களப்பணி செய்யப்படவில்லை.[2]

ஞானவாபி மசூதியில் நடைபெறும் ஆய்வுப்பணிகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும் இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதாக, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது.[3]

பின்னர் 2022, மே மாதம் 14, 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் ஞானவாபி பள்ளிவாசல் வளாகம் முழுவதும் வீடியோ மூலம் களப்பணி செய்யப்பட்டது.

20 மே 2022 - இந்திய உச்ச நீதிமன்றம் ஞானவாபி பள்ளிவாசல் வழக்கை, வாரணாசி கீழமை நீதிமன்றம் விசாரணை செய்வதற்கு பதிலாக வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.[4]

12 செப்டம்பர் 2022 - வாரணாசி மாவட்ட நீதிமன்றம், 5 இந்துப் பெண்கள் தொடுத்த ஞானவாபி பள்ளிவாசல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனத் தீர்ப்பு வழங்கியது. [5][6]

14 அக்டோபர் - ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தை ஆய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட பொருள் சிவலிங்கமா அல்லது நீரூற்றா என்பதை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு முறையில் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[7][8][9]

11 நவம்பர் 2022 - இந்திய உச்ச நீதிமன்றம் ஞானவாபி பள்ளிவாசலுக்கு மே 2022 வரை அளிக்கப்பட்ட பாதுகாப்பு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்தது.[10]

ஞானவாபி பள்ளிவாசலில் தொழுகைக்கு முன்பு கை, கால்களை கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி மூடி முத்திரைப்பட்டதால், பள்ளிவாசல் நிர்வாகம் மாற்று வசதியை ஏற்படுத்தி தர ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு குறித்து 21 ஏப்ரல் 2023 அன்று உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.[11][12]

12 மே 2023 - அலகாபாத் உயர் நீதிமன்றம், ஞானவாபி பள்ளிவாசலில் சிவலிங்கம் அமைப்பு இருப்பதாக கருதப்படும் அமைப்பை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்து அறிக்கை அனுப்ப இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு உத்தரவிட்டது.[13] [14]

18 மே 2023 - இந்திய உச்ச நீதிமன்றம் ஞானவாபி பள்ளிவாசலில் கிடைத்த சிவலிங்கம் போன்ற பொருளை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்வதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கை 19 மே 2023 தேதிக்கு ஒத்தி வைத்தது.[15][16]

31 மே 2023- ஞானவாபி பள்ளிவாசலின் மேற்கு சுவரில் உள்ள சிருங்கார கௌரி உள்ளிட்ட தெய்வத் திருமேனிகளை இந்துக்கள் அன்றாடம் வழிபட அனுமதி கோரிய வழக்கில், முஸ்லிம் தரப்பின் ஆட்சேப மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[17]

கள ஆய்வு[தொகு]

காசி விஸ்வநாதர் கோயில் சுவரை ஒட்டி அமைந்த ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள இந்துக்கள் வணங்கும் சிவ லிங்கம், சிருங்கார கௌரி அம்மன், விநாயகர், நந்தி முதலிய சிலைகள் மற்றும் இந்துக் கட்டிட அமைப்புகளை வீடியோ மூலம் கள ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் ஒரு குழுவை அஜய் மிஸ்ரா எனும் வழக்கறிஞரை ஆணையாளராக நியமித்தது. இக்குழுவின் இந்துக்கள், இசுலாமியர்கள் சார்பில் பலர் இருந்தனர். 14, 15 மற்றும் 16 மே 2022 ஆகிய மூன்று நாட்களுக்கு கள ஆய்வு வாரணாசி நீதிமன்றம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

16 மே 2022 அன்று (செவ்வாய்க் கிழமை) அன்று நடைபெற்ற கள ஆய்வின் போது, இசுலாமியர்கள் தொழுகைக்கு முன்னர் உளூ (உடலைச் சுத்தம் செய்தல்) செய்யப் பயன்படும், சிறு செயற்கை குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி பார்க்கும் போது, அதில் பெரிய சிவ லிங்கம் தெரியவந்தது.[18] கள ஆய்வுப் பணியின் போது பார்த்த காட்சிகளை நீதிமன்றத்தில் தவிர வெளியே யாரும் சொல்லக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால் அது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று என முஸ்லிம் தரப்பினர் நிராகரித்துவிட்டனர். இருப்பினும் அப்பகுதியை அதிகாரிகள் முத்திரையிட்டு, சர்ச்சைகுரிய பகுதியில் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் வைத்து அடைத்தனர்.[19][20]

பள்ளிவாசல் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபய் நாத் யாதவ், கள ஆய்வு செய்த ஆணையர் அஜய் மிஸ்ரா, நடுநிலையாக இல்லாமல், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும், மேலும் பள்ளிவாசலில் சிவ லிங்கம் இருப்பதை ஊடகங்களுக்கு தெரிவித்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியதை முன்னிட்டு, வாராணாசி நீதிமன்றம் களப்பணி ஆணையாளரான அஜய் மிஸ்ராவை அந்த பொறுப்பிலிருந்து நீக்கியது.

கள ஆய்வின் அறிக்கையை உதவி ஆணையர்களில் ஒருவரான விஷால் சிங் 19 மே 2022 அன்றைய தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை மே 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

முன்னதாக முத்திரை வைக்கப்பட்ட மசூதியின் ஒரு பகுதியிலுள்ள சிவலிங்கத்தை அளக்கவும், உளூ செய்யும் ஒசுகானாவை சுற்றியுள்ள சுவர்களை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதன் மீது மசூதி நிர்வாகிகளின் பதிலை பெற்ற பின் முடிவு எடுப்பதாக நீதிபதி தெரிவித்தார்.[21]

வழக்கின் வரலாறு[தொகு]

 • உரிமை கோருபவர்கள் சார்பாக ஏழு சாட்சிகளும், பிரித்தானிய இந்திய அரசின் சார்பாக 15 சாட்சிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 • வாரணாசி மாவட்ட நீதிமன்றம் 15 ஆகஸ்டு 1937 அன்று, ஞானவாபி பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்கான உரிமை வெளிப்படையாக வழங்கப்பட்டது, மேலும் ஞானவாபி வளாகத்தில் வேறு எங்கும் அத்தகைய பிரார்த்தனைகளைச் செய்ய முடியாது என தீர்ப்பு வழங்கியது.
 • 10 ஏப்ரல் 1942 அன்று, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, இசுலாமியர்களின் மேல்முறையீட்டை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 • 15 அக்டோபர் 1991 அன்று, பண்டிட் சோம்நாத் வியாஸ், டாக்டர் ராம்ரங் சர்மா மற்றும் பலர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு புதிய கோயிலைக் கட்டுவதற்கும், வழிபடுவதற்கான உரிமைக்கும் வழக்குத் தொடர்ந்தனர்.
 • இந்த வழக்கை எதிர்த்து 1998 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், அஞ்சுமன் இன்சானியா குழு மற்றும் உத்தரப் பிரதேச சன்னி வக்ஃப் வாரியம், லக்னோ சார்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 • இந்த வழக்கை தொடுத்தவர்களில் ஒருவரான பண்டிட் சோம்நாத் வியாஸ் 7 மார்ச் 2000 அன்று இறந்தார்.
 • அக்டோபர் 11, 2018 அன்று இந்துக்கள் சார்பில் விஜய் சங்கர் ரஸ்தோகி இந்த வழக்கில் ஒரு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
 • ஏப்ரல் 8, 2021 அன்று, ஞானவாபி பள்ளிவாசல் வளாகம் முழுவதையும் வீடியோ எடுத்து தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ள வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. [23][24]
 • ஏப்ரல் 14, 15 மற்றும் 16 மே 2022 ஆகிய நாட்களில் (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் வீடியோ மூலம் தொல்லியல் களப் பணி மேற்கொள்ளப்பட்டது. [25][26]கள ஆய்வின் போது ஒரு நீர் அமைப்பின் நடுவில் சிவ லிங்கம் இருப்பதை குறித்த செய்திகள் படத்துடன் வெளியானது. மேலும் கணேசர், நந்தி, சிருங்கார கௌரி போன்ற பல இந்து தெய்வங்களில் சிற்பங்கள் மற்றும் இந்து கட்டிட அமைப்புகள் மசூதியில் இருப்பது அறியப்பட்டது.
 • 12 செப்டம்பர் 2022 அன்று ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் மாதா சிருங்கார் கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஷேஷ்வர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்யவும், வழிபடவும், பூஜைகள் செய்யவும் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி 5 இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கை, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கத் தகுதி உடையதே என தீர்ப்பு வழங்கியது. [29][30]
 • 19 அக்டோபர் 200 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம், ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் இந்தியத் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வுகள் குறித்த காணொலிகள் மற்றும்ம் புகைப்படங்களின் அசல் பதிவுகளின் நகல்களை வரும் 21-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.[31]

காசி விஸ்வநாதர் கோயில் இடிப்பு மற்றும் மறுசீரமைப்பு வரலாறு[தொகு]

 • காசி விஸ்வநாதர் கோயில் மீதான முதல் தாக்குதல் 11-ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக்கின் உத்தரவால் காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டாலும், காசி விஸ்வநாதர் வழிபாடு தொடர்ந்தது.
 • காசி விஸ்வநாதர் கோயில் 1585 ஆம் ஆண்டில் பேரரசர் அக்பரின் நிதி அமைச்சர் தோடர் மால் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. The Famous Five: The Hindu women petitioners fighting to pray at the Gyanvapi mosque
 2. Gyanvapi–Shringar Gauri Temple Complex Video Survey Controversy
 3. 'ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்' என தகவல், சீல் வைக்கப்பட்ட குளம் - இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
 4. Supreme Court transfers Gyanvapi suit proceedings to Varanasi district judge
 5. ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்தது
 6. Gyanvapi case | Varanasi court says Hindu petitioners’ plea maintainable
 7. ஞானவாபி மசூதி வழக்கு: கார்பன் டேட்டிங் கோரிக்கை நிராகரிப்பு
 8. Gyanvapi Mosque Cases: After Varanasi Court's rejection, Hindu Side to move SC over 'carbon dating' of Shivling
 9. ஞானவாபி: 'சிவலிங்கம்' கார்பன் டேட்டிங் விவகாரம்
 10. {https://www.dinamani.com/india/2022/nov/11/gnanawabi-masjid-case-protection-till-further-order--sc-3947659.html அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை ஞானபள்ளிவாசலின் பாதுகாப்பு உச்ச நீதிமன்றம் நீட்டிப்பு]
 11. Gyanvapi Mosque Case| Masjid Committee Seeks Urgent Listing In View Of Ramzan; Supreme Court Lists On April 14
 12. கியான்வாபி மசூதியில் மாற்று ஒசுகானா கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் 14-ல் விசாரணை
 13. Allahabad HC orders scientific investigation of shivling-like structure inside Gyanvapi mosque
 14. ஞானவாபி வழக்கு : அறிவியல் ஆய்வு செய்ய அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு
 15. https://www.dinamani.com/india/2023/may/19/varanasi-gyanvapi-mosque-complex-4008356.html
 16. Gyanvapi mosque case | SC to hear plea against carbon dating of 'shivling' on May 19
 17. Plea to worship Hindu deities in Gyanvapi mosque maintainable, says Allahabad HC
 18. ஞானவாபி பள்ளிவாசல்: களப்பணியின் மூன்றாம் நாளின் முக்கிய அம்சங்கள்
 19. கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல்: சிவலிங்கம் இருப்பதாக வெளியான தகவலால் நீதிமன்றம் உத்தரவு
 20. “கியான்வாபியில் சிவலிங்கம் என்பது சரியல்ல; ஒசுகானாவிற்கு சீல் வைப்பது சட்ட விரோதம்” – ஏஐஎம்பிஎல்பி
 21. கியான்வாபி கள ஆய்வு ஆணையர் நீக்கம்: அறிக்கை தாக்கல் செய்ய 3 நாள் அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவு
 22. Gyanvapi Masjid case: Controversial history, timeline and long-drawn legal battle
 23. காசி விசுவநாதர் கோவில் வழக்கில் முக்கிய வழிகாட்டுதலை வழங்கிய நீதிமன்றம்
 24. Kashi Vishwanath-Gyanvapi Mosque Case: Court Appoints Commissioner To Visit Site On April 19
 25. Gyanvapi mosque case: First day of survey concludes amid high security
 26. Kashi Vishwanath-Gyanvapi case: Video survey resumes amid tight security
 27. Gyanvapi case: Supreme Court transfers case to Varanasi District Judge
 28. Finding religious nature not barred by 1991 law: Supreme Court
 29. ஞானவாபி மசூதி வழக்கு: இந்து பெண்கள் மனு விசாரணைக்கு ஏற்பு
 30. Varanasi court upholds suits challenging Gyanvapi mosque title
 31. Gyanvapi dispute: Allahabad High Court asks for entire records of Hindu worshippers’ suit by October 21

வெளி இணைப்புகள்[தொகு]