காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் தவளேஸ்வரம், லகுளீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் தவளேஸ்வரம், லகுளீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தவளேஸ்வரர், லகுளீசர்.

காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் (தவளேஸ்வரம், லகுளீசம்) என்று அறியப்படுவது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவர்க்கு லகுளீசர் எனும் மற்றொரு திருப்பெயராலும் அழைக்கப்படும் இக்கோயிலின் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்[தொகு]

  • இறைவர்: தவளேஸ்வரர், லகுளீசர்.
  • வழிபட்டோர்: லகுளீசன்.

தல வரலாறு[தொகு]

சுவேதன், சுவேதகேது, சுதாகரன், சுவேதலோகிதன், சுவேதசீகன், சுவேதாச்சுவன், துந்துமி ஆகிய இவர்கள் முதற்கொண்டு லகுளீசன் ஈறாகவுள்ளவர்களும் மற்றம் ஏனைய ருத்ர அம்சமாக தோன்றிய யோகாசாரியர்கள், கயிலையில் தவம் செய்து, இறைவன் திருவருளால் காஞ்சியில் தத்தம் திருப்பெயர்களில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டனர் என்பது வரலாறாகும். இவற்றில், ஒன்றிரண்டைத் தவிர நம் தவக்குறைவவினால் ஏனைய சிவலிங்கங்கள் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை.[2]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் மேற்கு பகுதியில், சர்வ தீர்த்தத்தின் வடக்கு கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடமேற்கே சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவில் வேலூர் செல்லும் சாலையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Project Madurai, 1998-2008 | 46.யோகாசாரியர் தளிப்படலம் 1609 - 1618
  2. "shaivam.org | தவளேஸ்வரர் (தவளேஸ்வரம் (லகுளீசம்) | தல வரலாறு". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-01.
  3. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | லகுளீசம் (தவளேஸ்வரம்)". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-01.

புற இணைப்புகள்[தொகு]