காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் ரிஷபேசம் - (இடபேசம்).
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் ரிஷபேசம் - (இடபேசம்).
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ரிஷபேஸ்வரர்.

காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் (ரிசபேசம் - (இடபேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். இச்சிவலிங்கம், காஞ்சி திருவேகம்பத்தில் சிவகங்கை தீர்த்தத்தின் மேற்கு கரையில் உள்ள தனிக்கோயிலாகும். மேலும், இவ்விறைவரை ரிசபம் வழிபட்டமையால் ரிசபேசம் எனப்படுகிறது இக்கோயில் குறிப்புகள்; காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

தல வரலாறு[தொகு]

திருமாலை தாங்குவதால், தன்னைப்போல பலசாலி - ஆற்றலுடையவர் உலகில் எவருமிலர் என்று செருக்குற்றிருந்த கருடனின் செருக்கையடக்க எண்ணிய திருமால், கருடன் மேலமர்ந்து கயிலைக்குச் சென்றார், கருடனை கயிலை வாயிலில் நிறுத்திவிட்டு தான்மட்டும் உள்ளே சென்றார். உள்ளே சென்ற திருமால் நெடுநேரமாகியும் வரவில்லை. கருடனின் செருக்கை உணர்ந்த ரிசபதேவர், தன்னுடைய சுவாச (சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், வெளிவிடும்போதும்) காற்றால் கருடனை முன்னும் பின்னும் அலைக்கழித்தார். இவ்வாறு அலைக்கழிந்ததால் கருடனின் இறகுகள் ஒடிந்துபோக, கருடன் திருமாலை அழைத்தது. திருமால், நடந்தவற்றை இறைவனுக்குத் தெரிவிக்க, இறைவனார் ரிசபத்தை உள்ளேயழைத்து, தன்ஆணையின்றி இவ்விதம் செய்ததால், அப்பழி நீங்க காஞ்சிக்கு சென்று சிவகங்கையில் நீராடி, சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபாடாற்றுமாறு பணித்தார். ரிசபதேவரும் அவ்வாறே காஞ்சிக்கு சென்று வழிபட்டார் என்பது வரலாறு.[2]

தல பதிகம்[தொகு]

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள திருவேகம்பத்தில், சிவகங்கை தீர்த்தத்தின் மேற்கு கரையில் உள்ள தனிக்கோயிலாகும். மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]

போக்குவரத்து[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]