காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் விசுவநாதேசம்.
காஞ்சிபுரம் விசுவநாதேசம். is located in தமிழ் நாடு
காஞ்சிபுரம் விசுவநாதேசம்.
காஞ்சிபுரம் விசுவநாதேசம்.
காசி விசுவநாதர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:12°50′49″N 79°41′38″E / 12.846840°N 79.693880°E / 12.846840; 79.693880
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் விசுவநாதேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:காசி விசுவநாதர்

காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் (விசுவநாதேசம்) எனப் பெயர்பெற்ற இது, காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது, சர்வ தீர்த்தம் (குளத்தின்) மேற்குகரை மண்டபமாக தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.[1]

இறைவர், வழிபட்டோர்[தொகு]

  • இறைவர்: காசி விசுவநாதர்.

தல வரலாறு[தொகு]

  • உலகில் உள்ள சிவ தலங்கள் எல்லாம் சூக்குமமாகப் பொருந்தியிருக்கும். அத்தலம் காசி விசுவநாதரும் காசியிலும் காஞ்சி சிறந்ததென்று வந்து தங்கியதாகும். இவ்விடத்தில் முக்தி மண்டபம் ஒன்று உள்ளது. அவ்விறைவனை வணங்கி அம்முக்தி மண்டபத்தைக் கண்டவர்கள் முக்தராவார்கள் என்பது வரலாறு.[2]
  • காஞ்சியின் மேன்மையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு, காசி விசுவநாதப் பெருமான் இங்கு வந்து தங்கியதாக சொல்லப்படுகிறது.[3]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் வேலூர் செல்லும் சாலையிலுள்ள சர்வதீர்த்தத்தின் (குளத்தின்) மேற்கு கரையில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சி கச்சபேசுவரர் கோயிலின் வழியாக காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 46. சர்வ தீர்த்தப்படலம் (1619 - 1644) | 1639 விசுவநாேதச்சரம்
  2. "palsuvai.net | காஞ்சிபுர சிவலிங்கங்கள் | 28. ஸ்ரீ காசி விஸ்வநாதர்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-03-22.
  3. "shaivam.org | காஞ்சி சிவத்தலங்கள் | விசுவநாதேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-22.
  4. "shaivam.org | சர்வ தீர்த்தக் கரை, விசுவநாதேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-22.

புற இணைப்புகள்[தொகு]