காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் இராமநாதேசம்
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் இராமநாதேசம்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவலிங்க மூர்த்தம்

காஞ்சிபுரம் இராமநதீசுவரர் (இராமநாதர்) கோயில் (இராமநாதேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இராமபிரான் இராவணனை சமரித்த தோசம் நீங்குவதற்கு வழிபட்ட கிழக்கு பார்த்த சன்னதியாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

வழிப்பட்டோர்[தொகு]

இராமர் வழிபட்ட சிவலிங்கம் என்று செவிவழிச் செய்தியாக உள்ளது. இராவணனை அழித்த பிறகு இராமர் இராமேசுவரம் முதலான இடங்களில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டுள்ளார். அவ்வாறு வழிபட்ட ஒரு சிவலிங்கம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவின் முனையில் இராமநாதேசம் என்ற சிவத்தலம் உள்ளது.[2]

தல வரலாறு[தொகு]

இராவணனை அழித்த இராமபிரான் அப்பாவந் தீர சேதுவில் சிவலிங்க வழிபாடாற்றி, பின்னர் காஞ்சி நகரை அடைந்து இராமநாதரை பிரதிட்டை செய்து வழிபட்டுச் சென்றார்.[3]

தல பதிகம்[தொகு]

  • பாடல்: (இராமநாதேச்சரம்)
உரைத்ததன் குடபால் தசரதன் மதலை அரக்கனை அடுபழி
ஒழிப்பான், அருட்குறி யிருத்திச் சேதுவில் தொழுதங் கண்ணலார்
ஏவலிற் காஞ்சி, வரைப்பின்உற் றிராம நாதனை நிறுவி வழிபடூஉக்
கொடுவினை மாற்றித், திரைப்புனல் அயோத்திப் புகுந்தர சளித்தான்
சேதுவில் சிறந்ததத் தலமே.
  • பொழிப்புரை:
இதற்கு மேற்கில் இராமபிரான் இராவணனைக் கொன்ற பழி நீங்கும்
பொருட்டுச் சிவலிங்கம் நிறுவி இராமேச்சுரத்தில் தொழுது அப்பெருமானார்
ஆணைப்படி காஞ்சி நகரைக் கூடி இராமநாதரைத் தாபித்து அருச்சித்துத்
துதித்துப்பாவத்தைப் போக்கி அயோத்தியை எய்தி அரசு பூண்டனர்.
இத்தலம் சேதுவினும் சிறப்புடையதாகும்.[4]

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள சாலைத் தெருவிலிருந்து காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு செல்லும் சாலையின் தொடக்கத்திலேயே இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 57. மாசாத்தன் தளிப் படலம் (1832 - 1868) | 1867 இராமநாேதச்சரம்
  2. "ekambaranathartemple.org திருக்கோயிலின் மூர்த்தங்கள் வரிசை - புராண வரலாறு". Archived from the original on 2016-02-14. பார்க்கப்பட்ட நாள் 2016-04-08.
  3. "shaivam.org | இராமநாதேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-04-08.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | மாசாத்தன்தளிப் படலம் | பாடல் 36 | பக்கம்: 551
  5. dinaithal.com | இராமநாதேசம்
  6. tripadvisor.in 15 temples in Kanchipuram

புற இணைப்புகள்[தொகு]