அங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு அம்பலவாணீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:அங்கம்பாக்கம், உத்திரமேரூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உத்திரமேரூர்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
மூலவர்:அம்பலவாணீஸ்வரர்
தாயார்:சிவகாம சுந்தரி
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ் வருடப்பிறப்பு, கந்தசஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அங்கம்பாக்கம் அம்பலவாணீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், அங்கம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இக்கோயில் உத்திர சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வாலாஜாபாத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அங்கம்பாக்கம்[2] என்ற ஊரில் அமைந்துள்ளது.[1]

தலவரலாறு[தொகு]

ஒரு அந்தணன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் கரைக்க வேண்டி, யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்தில் தங்கி வழிபட்டபின் அஸ்தி கலசத்தை பார்க்கும்போது எல்லாம் மணம் வீசும் மல்லிகை பூக்களாக மலர்ந்தன. இறைவன் அருளால் அங்கம் பூவாக மாறியதால் இத்தலம் அங்கம்பாக்கம் என்ற பெயர் பெற்றது.

தல சிறப்பு[தொகு]

இங்குள்ள நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. சிவாலயத்தில் நடக்கும் எல்லா உற்சவங்களும் இங்கு நடைபெறுகின்றன. இத்தலத்தில் மூதாதையர்க்கு செய்யப்படும் தர்ப்பணம், திதி காசியில் செய்வதற்கு சமானமாகக் கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

இக்கோயில் பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் அம்பலவாணீஸ்வரர், சிவகாம சுந்தரி சன்னதிகளும், பிள்ளையார், முருகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் கந்தசஷ்டி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]