டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே
DHR 780 on Batasia Loop 05-02-21 08.jpeg
A Darjeeling Himalayan Railway train on Batasia Loop
இடம்மேற்கு வங்காளம், இந்தியா
நீளம்78 km (48 mi) between Siliguri and Darjeeling

டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே(DHR) புதிய ஜல்பைகுரி(சிலிகுரி) நகரத்திலிருந்து டார்ஜீலிங்கை நோக்கி இமயமலை மீது 6850 அடி (2,090 மீ) மேலேறுகிறது; ஜல்பைகுரி-சுக்னா தொடருந்து பாதை பெரும்பாலும் கிடைமட்டமாகவே உள்ளது, பின்னர் சுக்னாவிலிருந்து தொடருந்து இமயமலையின் மீது செங்குத்தாக ஏறத்தொடங்குகிறது, பின்னர் அது எவ்வித தடையுமின்றி கும்(இந்தியாவின் அதிஉயரத்திலுள்ள தொடருந்து நிலையம், 7,407 அடி 2.258 மீ) வரைத் தொடர்ந்து பின் டார்ஜீலிங்கை நோக்கி பயணத்தொலைவில் கடைசி 5 மைல் (8.0 கிமீ) கிழ்நோக்கி இறங்குகிறது.

சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் DHR அசாம் ரயில்வேயோடு இணைக்கப்பட்டு, பின்னர் அசாம் வங்காளம் இடையே தொடருந்து இணைப்பை நிர்மாணிப்பதற்கும் மற்றும் கிஷான்கஞ்ச் வரை மீட்டர் கேஜ் விரிவாக்கமும் ஏற்படுத்த தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் மற்றொரு விரிவாக்க இணைப்பான காலிம்பாங் வரையுள்ள தொடருந்து பாதை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே மீண்டும் 1952ல் திறக்கப்பட்டு வடகிழக்கு தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது, பின்னர் 1958 ஆம் ஆண்டு வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது.

டார்ஜீலிங் இமாலயன் தொடருந்து (DHR) பின்வரும் காரணங்களுக்காக உலகம் முழுவதும் புகழ் அடைந்துள்ளது:

 • இது இமயமலையின் நுழைவாயில்
 • இது இந்திய இரயில்வேயினால் நீராவிவண்டியால் இயக்கப்படும் புகையிரதப் பாதை சின்னமாகும்.
 • 19 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த மிகச்சிறிய நான்கு சக்கர நீராவி வண்டிகள்களால் இந்த தொடருந்து இயக்கப்படுகின்றது.
 • இந்த தொடருந்து பாதை மிகவும் சவாலானது, செங்குத்தான ஏற்றங்களும், இறக்கங்களும் மேலும் குறுகிய வளைவுகளுடன் கூடிய இமயமலைப் பாதை ஆகும்.
 • திந்தாரியா பட்டறையில் 13 நீராவி வண்டிகள் வைத்துள்ளனர், அதில் சில 100 வருடங்கள் பழமையானவை, மிகவும் இளைய நீராவிவண்டியின் வயது சுமார் 70ஆக இருக்கும்.

டார்ஜீலிங் இமாலயன் தொடருந்து (DHR) காலவரிசை:

 • ஜனவரி 20, 1948: இந்திய அரசாங்கம் வாங்கியது
 • ஜனவரி 26, 1948: அசாம் தொடருந்து இணைப்பு பாதையுடன் இணைக்கப்பட்டது
 • ஜனவரி 26, 1950: அசாம் ரயில்வேயோடு இணைக்கப்பட்டது
 • ஜனவரி 14, 1952: வட கிழக்கு ரயில்வேயோடு இணைக்கப்பட்டது
 • ஜனவரி 15, 1958: வடகிழக்கு முன்னணி ரயில்வேயோடு இணைக்கப்பட்டது.
டார்ஜிலிங்க் முதல் கும் வரை செயற்படும் பழமைமிக்க குறுகிய பாதை தொடருந்து

இந்தப் பாதையில் 13 தொடருந்து நிலையங்கள் உள்ளன, அவை [1] புது ஜல்பைக்குரி, சிலிகுரி டவுண், சிலிகுரி சந்திப்பு, சுக்னா, ரோங்டாங், தின்தாரியா, கயாபாரி, மகாநதி, கர்சியாங், துங், சோனாடா, கும் மற்றும் டார்ஜீலிங் ஆகும்

காட்சியகம்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. "நிலையங்கள்". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.