உள்ளடக்கத்துக்குச் செல்

ஹம்சாபர் விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹம்சாபர் விரைவு வண்டி முழுவதும் குளிரூட்டப்பட்ட 3-அடுக்கு படுக்கை பெட்டிகளுடன் இந்திய இரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விரைவு தொடர்வண்டியாகும். நெடுந்தூர பயணத்திற்கு இவை சேவை வழங்குகின்றது.

சிறப்பம்சங்கள்

[தொகு]
  • நிலையங்கள், வண்டியின் வேகம் போன்றவைகளின் தகவல்கள் தெரியும் படியான எல்இடி திரை வசதி. அறிவிப்பு வசதியும் உள்ளது.
  • டீ, காப்பி, பால் போன்றவைகள் வழங்கும் இயந்திரங்கள் உள்ளது. மடிக்கணிணி, கைபேசி போன்றவைகளை மின்னேற்ற மின் வசதி.
  • பழைய 3 அடுக்கு படுக்கையை விட சௌகரியமான படுக்கை வசதி.
  • கழிவறைகளில் பயோ-கழிவறை வசதி.
  • பெட்டிகளின் வெளித்தோற்றம் மிக சிறப்பாக வினைல் அட்டைகள் மூலம் பளபளப்பாக ஆக்கப்பட்டுள்ளது.
  • கண்காணிப்பு கேமராக்கள், புகை அலாரம் போன்ற எச்சரிக்கை வசதிகள்.
  • ஒவ்வொரு பெட்டியிலும் அடுப்பு மற்றும் குளிர்சாதன பெட்டி உள்ளது. பயணிகள் தங்கள் உணவுப் பொருட்களை கெட்டுப்போகாமல் வைக்க ஏதுவாக.
  • பக்கவாட்டு படுக்கை மற்றும் கூப்பு படுக்கைகளில் தனித்தனி மறைப்பு துணிகள்.
  • படுக்கை விரிப்புகள் எல்லா படுக்கைக்கும் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.[1][2]

சேவைகள்

[தொகு]

முதல் சேவை டிசம்பர் 16, 2016 ல் கோரக்பூர் மற்றும் டெல்லி ஆனந்த் விகார் நிலையங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.

வண்டி எண். பெயர்
12571/12572 கோரக்பூர்- ஆனந்த்விகார் ஹம்சாபர் விரைவு வண்டி(பார்னி வழியாக)
12595/12596 கோரக்பூர்- ஆனந்த்விகார் ஹம்சாபர் விரைவு வண்டி(பஸ்தி வழியாக)
12503/12504 பெங்களுர் கண்டோன்மன்ட் - அகர்தலா ஹம்சாபர் விரைவு வண்டி
22497/22498 ஸ்ரீ கங்காநகர் -திருச்சிராப்பள்ளி ஹம்சாபர் விரைவு வண்டி
20889/20890 ஹௌரா - விஜயவாடா ஹம்சாபர் விரைவு வண்டி
22437/22438 அலகாபாத் - ஆனந்த்விகார் ஹம்சாபர் விரைவு வண்டி
22833/22834 புவனேஸ்வர் - கிருஷ்ணராஜபுரம் ஹம்சாபர் விரைவு வண்டி
22867/22868 டர்க்- ஹஜ்ரத் நிஜாமுதீன் ஹம்சாபர் விரைவு வண்டி
22887/22888 ஹௌரா - யெஸ்வந்தபூர் ஹம்சாபர் விரைவு வண்டி
22705/22706 திருப்பதி - ஜம்மு ஹம்சாபர் விரைவு வண்டி
22919/22920 சென்னை - அகமதாபாத் ஹம்சாபர் விரைவு வண்டி
22913/22914 பந்த்ரா முனையம் - பாட்னா ஹம்சாபர் விரைவு வண்டி
19667/19668 உதைப்பூர் - மைசூருஹம்சாபர் விரைவு வண்டி
22985/22986 உதைப்பூர் - டெல்லி சாரை ரோகில்லா ராஜஸ்தான் ஹம்சாபர் விரைவு வண்டி
15705/15706 சம்பாரன் ஹம்சாபர் விரைவு வண்டி
19315/19316 இந்தூர் - லிங்காபள்ளி ஹம்சாபர் விரைவு வண்டி
19317/19318 இந்தூர் - புரி ஹம்சாபர் விரைவு வண்டி
14815/14816 பகத் கி கோதி - தாம்பரம் ஹம்சாபர் விரைவு வண்டி[3][4]

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சாபர்_விரைவு_வண்டி&oldid=3504389" இலிருந்து மீள்விக்கப்பட்டது