பேதாகாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேதகாட்
ஊர்
பளிங்குக்கல் பாறைகள், பேதாகாட்
பேதகாட் is located in Madhya Pradesh
பேதகாட்
பேதகாட்
இந்தியாவின் மத்தியப் பிரதேத்தில் பேதாகாட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 23°07′55″N 79°48′04″E / 23.132°N 79.801°E / 23.132; 79.801ஆள்கூறுகள்: 23°07′55″N 79°48′04″E / 23.132°N 79.801°E / 23.132; 79.801
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ஜபல்பூர்
 • தரவரிசை6657
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

பேதாகாட் (Bhedaghat) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது நர்மதை ஆற்றின் கரையில் அமைந்த பேதாகாட் ஊர், ஜபல்பூரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூர் பகுதியில் பளிங்குக்கல் பாறைகளும், அருவிகளும் நிறைந்து காணப்படுகிறது. இது இயற்கை எழில் மிகுந்த சுற்றுலாத் தலம் ஆகும்.[1]

உலகப் பாரம்பரியக் களம்[தொகு]

பெதாகாட் மற்றும் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் லமேதாகாட் ஊர் வரை பளிங்குக்கல் பாறைகளால் ஆன செங்குத்துப் பள்ளத்தாக்குகளும், தூய நீர் அருவிகளும் கொண்டது. எனவே போதாகாட்-லமேதாகாட் பகுதியை இந்தியாவின் கிராண்ட் கேன்யன் என்று அழைப்பர்.

பெடகாட்-லாமெட்காட் பகுதியில் பல டைனோசர் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1828 ஆம் ஆண்டில் முதல் டைனோசர் புதைபடிவத்தை வில்லியம் ஸ்லீமன் (மத்தேயு டி. எட்., 2010) லமேடா படுக்கையில் இருந்து சேகரித்தார். அலெக்சாண்டர் கன்னிங்காம் இதை நர்மதா ஆற்றில் குளிக்கும் இடமாகக் கூறினார். இவ்வூர் நர்மதை மற்றும் பங்கங்கா ஆற்றின் சங்கமத்தில் அமைந்துள்ளது. செங்குத்தாக மெக்னீசியம் சுண்ணாம்பு பாறைகள் நர்மதாவின் படிக-தெளிவான நீரைக் கவ்வி, கண்கவர் காட்சியை அளிக்கின்றன.[2]

யுனெஸ்கோ நிறுவனம் சூலை 2021-இல் இந்தியாவின் ஆறு பண்பாட்டு களங்களை உத்தேச உலகப் பாரம்பரியக் களங்களாக தேர்வு செய்துள்ளது. இதில் பெதேகாட்-லாமெதேகாட் இயற்கை தலமும் ஒன்றாகும்.[3][4][5][6]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 15 வார்டுகள் கொண்ட பேதாகாட் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 6,657 ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 97.64%, இசுலாமியர் 1.49% மற்றும் பிறர் கனிசமாக வாழ்கின்றனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேதாகாட்&oldid=3206632" இருந்து மீள்விக்கப்பட்டது