பளிங்குக்கல் பாறைகள்
பளிங்குக்கல் பாறைகள் | |
---|---|
![]() சலவைக்கல் பாறைகள், ஜபல்பூர் | |
Long-axis length | 3 கிலோ மீட்டர் |
ஆள்கூறுகள் | 23°07′52″N 79°47′47″E / 23.1312°N 79.7965°Eஆள்கூறுகள்: 23°07′52″N 79°47′47″E / 23.1312°N 79.7965°E |
பளிங்குக்கல் பாறைகள் அல்லது சலவைக்கல் பாறைகள் (Marble Rocks) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமான ஜபல்பூர் நகரத்தின் அருகில் உள்ள பேடாகாட் எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இங்கு பாயும் நர்மதை ஆறு இப்பகுதியில் உள்ள பாறைகளை குடைந்து சென்று மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு சலவைக்கல் பாறைகளை இயற்கையாக உண்டாக்கியது. இந்த பளிங்குக்கல் பாறைகளின் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் நர்மதை ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செல்கின்கின்றனர்.[2] மேலும் பளிங்குக்கல்லால் ஆன பாறையில் துயாந்தர் அருவி உள்ளது. எனவே சலைவைக்கல் பாறைகள் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இச்சலவைக்கல் பாறைகள் சிற்பங்கள் செய்தவதற்கு வெட்டி எடுக்கப்படுகிறது.
படத்தொகுப்பு[தொகு]
பளிங்குக்கல் பாறைகளை ஒட்டிச் செல்லும் நர்மதை ஆறு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bhedaghat". 2016-12-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-15 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Boat Ride on Narmada through Marble Rocks, Jabalpur, India