உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிய இமாலய தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 31°44′N 77°33′E / 31.733°N 77.550°E / 31.733; 77.550
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய இமாலய தேசிய
Map showing the location of பெரிய இமாலய தேசிய
Map showing the location of பெரிய இமாலய தேசிய
அமைவிடம்இமாச்சலப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்31°44′N 77°33′E / 31.733°N 77.550°E / 31.733; 77.550
பரப்பளவு1,171 km2 (452 sq mi)
நிறுவப்பட்டது1984

பெரிய இமாலய தேசியப் பூங்கா (The Great Himalayan National Park) இந்தியத் தேசியப் பூங்காக்களில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஒன்று ஆகும். இது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் குலு பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவானது 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 1,171 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்த பூங்காவானது கடல் மட்டத்திலிருந்து 1500 முதல் 1600 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் 375-கும் அதிகமான விலக்குகள் இனம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 31 பாலூட்டி இனங்கள், 181 பறவை இனங்களும் அடங்கும்.[1] இந்தப் பூங்காவானது கடுமையான வன விதிகளின் படி பாதுகாக்கப்படுகிறது. இந்திய வனச் சட்டம் 1972 மடி வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

உலக பாரம்பரிய சின்னமாகிறது

[தொகு]

நீடித்த இயற்கை மற்றும் உயிரியல் பலவகை (Bio - diversity) களைக்கொண்டு அறிவியல் மரங்களின் அடர்த்தி கொண்டு பாதுகாக்கப்படுவதால் இந்த பூங்காவை உலக பாரம்பரிய சின்னமாகச் செய்ய -முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், இந்திய வன உயிரி ஆராய்ச்சி நிலையம் சேர்ந்து இந்த முயற்சியை எடுத்துவருகிறது.[2][3]

புகைப்படங்கள்

[தொகு]

இந்த தேசியப் பூங்காவின் புகைப்படங்கள் கீழே,

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.maalaimalar.com/2014/05/11142847/GHNP-nominated-for-world-herit.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. உலகப் பாரம்பரியச் சின்னமாகிறது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா
  3. A proud day for Gujarat, Himachal

வெளி இணைப்புகள்

[தொகு]