இந்த்ரோடா டையனோசார், புதைபடிம பூங்கா

ஆள்கூறுகள்: 23°11′31″N 72°38′53″E / 23.192°N 72.648°E / 23.192; 72.648
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த்ரோடா டையனோசார், புதைபடிம பூங்கா
Indroda Dinosaur and Fossil Park
Indroda Dinosaur and Fossil Park
அமைவிடம்காந்திநகர், குசராத்து, இந்தியா
ஆள்கூறுகள்23°11′31″N 72°38′53″E / 23.192°N 72.648°E / 23.192; 72.648
கருப்பொருள்அறிவியல் கல்வி, பொழுதுபோக்கு
உரிமையாளர்குசராத்து சுற்றுச்சூழல், ஆராய்ச்சி அறக்கட்டளை
திறப்பு1970 (1970)
இயங்கும் காலம்Year-round
பரப்பளவு400[1] ha (990 ஏக்கர்கள்)
நிலைசெயல்பாட்டில்

இந்த்ரோடா டையனோசார் புதைபடிம பூங்கா, (Indroda Dinosaur and Fossil Park) என்பது இந்தியாவின் குசராத்தின் காந்திநகரில் உள்ள புதைபடிம எச்சங்கள் மற்றும் டைனோசர்களின் புதைபடிம முட்டைகளைக் கொண்ட பூங்கா ஆகும். இது செயற்கையாக உருவாக்கப்பட்ட புதைபடிம பூங்கா. இது உண்மையில் டைனோசர்கள் வாழ்ந்த இடங்கள் அல்ல. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டைனோச்சார் முட்டைகள் மற்றும் புதைபடிமங்கள் உலகின் 3வது பெரிய டைனோசர் புதைபடிம அகழ்வாராய்ச்சி தளம் மற்றும் குஜராத்தின் 2வது பெரிய குஞ்சுபொரிப்பகமான ராயோலி, பாலாசினோராவிலிருந்து தருவிக்கப்பட்டது.[2] இந்த பூங்கா இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தால் அமைக்கப்பட்டுள்ளது.[2][3] இந்தியாவில் டைனோசர் அருங்காட்சியகம் இங்கு மட்டுமே உள்ளது.[3]

வரலாறு[தொகு]

1970ஆம் ஆண்டில், குஜராத்து அரசின் வனத்துறை இப்பூங்காவில் மறுசீரமைப்பு முயற்சிகளைத் தொடங்கியது. இந்தியாவின் ஜுராசிக் பார்க் என்றும் அழைக்கப்படும் இந்த பூங்கா, 428 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் டைனோசர் பிரிவு, புதைபடிவப் பிரிவு போன்ற பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த்ரோடா டையனோசார் புதைபடிம பூங்காவை குசராத்து சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வகிக்கின்றது. இது இந்தியாவின் ஜுராசிக் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. டைனோசர் எலும்பு புதைபடிவங்களின் பழமையான பதிவு நடுத்தர ஜுராசிக் காலத்தைச் சேர்ந்தது. மேலும் இவை கச்சு படுகையின் பார்ச்சம் உருவாக்கத்திலிருந்து வந்தது ஆகும். இப்பகுதி புதைபடிவங்கள் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட மேல் கிரீத் தேசியக் காலத்திற்கு முந்தியவை. இங்கு வெவ்வேறு அளவிலான டைனோசார் முட்டைகள் உள்ளன. இவற்றில் சில பீரங்கிகளின் அளவிற்கு இணையானது. பெரிய அளவிலான விலங்குகளின் புதைபடிவ தடங்கள் இந்த பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[4]

இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டைனோசர்களில் டைரனோசொரஸ் ரெக்ஸ், மெகலோசொரஸ், டைட்டனோசொரஸ், பரபாசரஸ், பிராச்சியோசரஸ், அண்டார்ட்கோசரஸ், ஸ்டீகோசொரஸ் மற்றும் இகுவானோடன் ஆகியவை அடங்கும்.[2] இந்த பூங்காவில் டைனோசர்களின் உருவ அளவினை ஒத்த மாதிரிகள் மற்றும் அவை இருந்த காலகட்டத்தின் விவரங்கள் அவற்றின் பண்புகளுடன் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த புதைபடிமங்கள் இந்த மாநிலத்தின் சோன்ங்கிர் பாக் படுகை, பாலசின்னாரின் இம்மத்நகர் படுகை, கீடா, பஞ்சமகால், வதோதரா தென்கிழக்கு பகுதிகளைச் சார்ந்தவையாகும்.[2]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]