பழைய கோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று : 15°30′09″N 73°54′42″E / 15.50238°N 73.911746°E / 15.50238; 73.911746

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கோவாவின் தேவாலயங்களும் மடங்களும்
Name as inscribed on the World Heritage List
Se cathedral goa.jpg
சான்டா கேதரீனா செ தேவாலயம்

வகை பண்பாடு
ஒப்பளவு ii, iv, vi
உசாத்துணை 234
UNESCO region ஆசியா-பசிபிக்
Inscription history
பொறிப்பு 1986 (10வது தொடர்)

பழைய கோவா (Old Goa, கொங்கணி:पोरणें गोंय – Pornnem Goem) அல்லது வெல்கா கோவா (வெல்கா போர்த்துக்கீசிய மொழியில் பழைய என்ற பொருளுடையது) இந்திய மாநிலம் கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகரத்தை 15ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் சுல்தான்கள் கட்டினர்; 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டில் பிளேக் நோய்த்தொற்றால் புறக்கணிக்கப்படும்வரை இது போர்த்துகேய இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. பிளேக் நோய் பரவுவதற்கு முன்னர் இங்கு 200,000 பேர் வாழ்ந்திருந்ததாக கருதப்படுகிறது. இந்த நகரத்தின் எச்சங்கள் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய கோவா தற்போதைய தலைநகரம் பனாஜியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்டிலேயே காணப்படுகின்றன. மவுரியப் பேரரசின் ஒரு பாகமாக கோவா இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின் போது பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பழைய கோவாவில் கட்டப்பட்ட தேவாலயங்கள் முக்கியமானவை.

பழைய கோவாவின் தேவாலயங்கள்[தொகு]

பழைய கோவாவில் பல்வேறுத் திருச்சபைகளுக்கு இணைக்கப்பட்ட மாதாகோவில்கள் உள்ளன. கோவாவின் பேராயர் அமரும் சான்டா கேதரீனா செ தேவாலயம், புனித அசிசியின் பிரான்சிசு தேவாலயம், எஸ். கேடனோ மாதாப்பள்ளி, லேடி ஆப் ரோசரி தேவாலயம், புனித அகஸ்டின் தேவாலயம் போன்றவை பாரம்பரியமிக்கவை. அனைத்தும் 16- 17ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இவை அழகிய கலை வேலைப்பாடுகள் கொண்டவை. குழந்தை இயேசு தேவாலயம்(பாம் இயேசு பசிலிக்கா), ஆசிய அளவில் புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது.இங்கு பிரான்சிஸ் சவேரியாரின் எச்சங்கள் வைக்கப்பட்டுள்ளன; ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 3 அன்று இவை வெளியே எடுக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த தேவாலயங்கள் 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_கோவா&oldid=1686022" இருந்து மீள்விக்கப்பட்டது