வடக்கு கோவா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடக்கு கோவா மாவட்டம், கோவா மாநிலத்தின் இரு மாவட்டங்களில் ஒன்று. இதன் பரப்பளவு 1736 சதுர கி.மீ. இதன் தலைமையகம் பனாஜியில் உள்ளது. கொங்கன் எனப்படும் பகுதியின் பெரும்பங்கை ஆக்கிரமிக்கிறது.

இது பனாஜி, மபுசா, பிசோலிம், போன்டா என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பர்னேம், பார்தேசு (மாபுசா), பிசோலிம், சத்தாரி (வல்போய்), திஸ்வாடி (பணஜீ) உள்ளிட்ட வட்டங்கள் இதன் கீழ் உள்ளன.

இங்கு எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் மக்களின் தாய்மொழி கொங்கணி. சிலர் மராத்தியும் பேசுகின்றனர். ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளையும் புரிந்துகொள்கின்றனர். சிறுபான்மையினர் போர்த்துகீசிய மொழியிலும் பேசுகின்றனர்.

தளங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_கோவா_மாவட்டம்&oldid=2746284" இருந்து மீள்விக்கப்பட்டது