மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 36°06′N 112°06′W / 36.1°N 112.1°W / 36.1; -112.1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு
கிராண்ட் கன்யன் வழிப்பாயும் கொலராடோ ஆற்றின் ஓரிடத்திலிருந்து (Mohave Point) காணும் தோற்றம்.
மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு is located in Arizona
மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு
மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு
அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
Floor elevationதோராயமாக. 2,600 அடிகள் (800 m)
Long-axis length277 மைல்கள் (446 km)
Width4-18 மைல்கள் (6.4-29 கிமீ)
ஆள்கூறுகள்36°06′N 112°06′W / 36.1°N 112.1°W / 36.1; -112.1

கிராண்ட் கான்யன் (Grand Canyon) அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் கொலராடோ ஆற்று நீரால் மணல் மற்றும் பாறைகள் அரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு ஆகும். பூமியின் பரப்பில் இடம்பெற்றுள்ள இம்மிகப்பெரிய பிளவு சுமார் 446 கிலோமீட்டர் நீளமும் 29 கிலோமீட்டர் அகலமும் 1857 மீட்டர் ஆழமும் கொண்டதாக உள்ளது[1].

இதனைப் பார்க்க உலகெங்குமிலிருந்து மக்கள் வருகின்றனர். கொலராடோ ஆற்றில் படகுகளில் பயணித்துக் கொண்டும் இதனைக் கண்டு களிக்கலாம். சிலர் இங்கு நடைப்பயணம் மேற்கொள்வதையும் விரும்புகின்றனர். கிராண்ட் கன்யன் வடக்குப்பகுதியில் உள்ள நிலம் வடக்கு விளிம்பு (North Rim) என அழைக்கப்படுகிறது. தென்பகுதி தெற்கு விளிம்பு எனப்படுகிறது. இந்த விளிம்புகளிலிருந்து அடிப்பகுதிக்குச் செல்ல பாதைகள் உள்ளன. இவை முடிவடையும் அடிப்பாகம் பான்டம் ரான்ச் (Phantom Ranch) எனப்படுகின்றன. இங்கு நடைப்பயணிகள் இரவு தங்க வசதிகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kiver, E.P.; Harris, D.V. (1999). Geology of US Parklands. Wiley. பக். 902.