செங்குத்துப் பள்ளத்தாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் பாயும் கொலராடோ ஆறும், சின்னக் கொலராடா ஆறும் கலக்கும் இடத்தில் அமைந்த மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு

செங்குத்துப் பள்ளத்தாக்கு என்பது புவியியல் அளவீடுகளில் வானிலை மற்றும் ஆற்றின் அரிப்பு செயல்பாட்டின் விளைவாக, மலைப்பகுதிகளின் பாறைகளுக்கு இடையில் ஏற்படும் ஆழமான பிளவு ஆகும்.[1]

கடுமையான சூரிய வெப்பம் மற்றும் ஆற்று நீரால் ஏற்படும் மண் அரிப்பாலும் மலைகளுக்கு இடையே செங்குத்துப் பள்ளத்தாக்குகளை உருவாகும்.[2]குறிப்பாக மென்மையான சுண்ணாம்புக் கல் அல்லது மணற்கல் கொண்ட நிலப்பரப்பில் பாயும் ஒரு ஆறு அல்லது நீரோடைகள் நிலப்பரப்பை அரித்து இத்தகைய செங்குத்துப் பிளவுகளைச் செதுக்குகிறது.[3] இதற்கு எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு உள்ளது. மலைப்பகுதி பள்ளத்தாக்குகளுக்கு எடுத்துக்காட்டாக கலிபோர்னியாவின் யோசெமிட்டி பள்ளத்தாக்கு[4] உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]