அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருவி (About this soundஒலிப்பு ) என்பது, ஆறு போன்ற நீரோட்டம், சடுதியான நிலமட்ட வேறுபாட்டைக் கொண்ட, அரிப்புக்கு உட்படாத பாறை அமைப்புக்களில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் நிலவியல் அமைப்பு ஆகும். நீர்வீழ்ச்சி எனும் சொல் Waterfalls எனும் ஆங்கில சொல்லைத் தவறாக மொழிபெயர்த்து செயற்கையாக இக்காலத்தில் உண்டாக்கிய சொல்லாகும்.எனவே அருவி என்பதே சரி.[1][2][3]

சில அருவிகள் அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உருவாகின்றன. இதனால், ஆற்றின் நீரோட்டப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுச் சடுதியான, கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வாறான நிலைமைகளில், அருவிகள் உருவாகாமல், நிலச்சரிவு, நிலவெடிப்பு, எரிமலைச் செயற்பாடுகள் போன்ற சடுதியான நிலவியல் விளைவுகள் ஏற்படுகின்றன.

அருவிகள் செயற்கையாகவும் உருவாக்கப்படக் கூடும். பொதுவாக இவை பூங்காக்கள், நிலத்தோற்ற வடிவமைப்பு ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுவது உண்டு.

இகுவாசு அருவி (அர்கெந்தீனா)

புகழ்பெற்ற உலக அருவிகள் சில[தொகு]

ஆஸ்திரேலியாவின், விக்டோரியாவில் உள்ள ஓட்வே தேசியப் பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ள ஹோப்டூன் அருவி
அருவி

தமிழகத்தில் உள்ள அருவிகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவி&oldid=3768224" இருந்து மீள்விக்கப்பட்டது