உள்ளடக்கத்துக்குச் செல்

குற்றாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குற்றாலம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

2,089 (2011)

272/km2 (704/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.68 சதுர கிலோமீட்டர்கள் (2.97 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/courttalam

குற்றாலம் (Courtalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.

மழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

இது திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்[தொகு]

திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குற்றாலம் பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

அமைவிடம்[தொகு]

குற்றாலம் மலை

குற்றாலம் செங்கோட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் தென்காசி தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.

தென்மேற்குப் பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

குற்றாலம் அருவிகள்[தொகு]

பேரருவி
ஐந்தருவி

குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

 1. பேரருவி
 2. ஐந்தருவி
 3. சிற்றருவி
 4. பாலருவி
 5. புலியருவி
 6. பழத்தோட்ட அருவி
 7. செண்பகாதேவியருவி
 8. பழையகுற்றால அருவி
 9. தேனருவி.

இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

 1. குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
 2. சித்திர சபை
 3. தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்
 4. சிறுவர் பூங்கா
 5. பூங்கா
 6. கலைவாணர் அரங்கம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
 3. குற்றாலாம் பேரூராட்சியின் இணையதளம்
 4. குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
 5. Courtalam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றாலம்&oldid=3872269" இலிருந்து மீள்விக்கப்பட்டது