விக்டோரியா அருவி

ஆள்கூறுகள்: 17°55′28″S 25°51′24″E / 17.92444°S 25.85667°E / -17.92444; 25.85667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டோரியா அருவி
Victoriafälle.jpg
Victoria Falls
Map
அமைவிடம்Livingstone, Zambia
Victoria Falls, Zimbabwe
ஆள்கூறு17°55′28″S 25°51′24″E / 17.92444°S 25.85667°E / -17.92444; 25.85667
வகைWaterfall
மொத்த உயரம்355 ft (108 m) (at center)
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிZambezi River
சராசரிப்
பாய்ச்சல் வீதம்
1088 m³/s (38,430 cu ft/s)
அலுவல் பெயர்Mosi-oa-Tunya / Victoria Falls
வகைNatural
வரன்முறைvii, viii
தெரியப்பட்டது1989 (13th session)
உசாவு எண்509
State Partyசாம்பியா and சிம்பாப்வே
RegionAfrica

விக்டோரியா அருவி அல்லது விக்டோரியா நீர்வீழ்ச்சி, உலகின் மிக அழகிய அருவிகளுள் ஒன்று. இது ஸாம்பிசி ஆற்றில், சாம்பியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் (17°55′1″S, 25°51′0″E) அமைந்துள்ளது. இது அண்ணளவாக 1.7 கிலோமீட்டர் (1 மைல்) அகலமும், 128 மீட்டர் (420 அடிகள்) உயரமும் கொண்டது.

டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பயணி ஒருவர் 1855 இல் இவ்விடத்துக்கு வந்தார். உள்ளூர் மக்கள் இந் நீர்வீழ்ச்சியை, புகையும் இடியும் என்னும் பொருளில், மோசி-ஓவா-துன்யா (Mosi-oa-Tunya) என்று அழைத்து வந்தார்கள். எனினும், லிவிங்ஸ்டன், இதன் பெயரை மாற்றி விக்டோரியா அரசியின் பெயரை அதற்கு வைத்தார்.

இது இரண்டு தேசியப் பூங்காக்களின் பகுதியாக உள்ளது. ஒருபக்கத்தில் இது ஸாம்பியாவிலுள்ள, மோசி-ஓவா-துன்யா தேசியப் பூங்காவும், மறுபக்கம், ஸின்பாப்வேயின் விக்டோரியா அருவி தேசியப் பூங்காவும் உள்ளன. இது ஆபிரிக்காவிலுள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவதுடன், யுனெஸ்கோ வின் உலகப் பாரம்பரிய இடமாகவும், உள்ளது.

இங்கு விழும் தண்ணீர் மற்றும் தெளிக்கும் மூடுபனி மூலம் வானவில் உருவாகிறது. இந்த அருவி உலக புவியியல் மற்றும் புவிப்புறவியல் அம்சங்களில் மிக சிறந்ததாகும். வறண்ட பருவத்தில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது யானைகள், வரிக்குதிரைகள், நீர்யானைகள், ஒட்டகசிவிங்கிகள் போன்ற விலங்கினங்கள் சாம்பேஸி பகுதியை கடந்து செல்வது கண் கொள்ளாக்காட்சியாகும். மேலும் பால்கான், கருப்பு நாரை, கழுகு, வல்லூரு போன்ற பறவைகளும் அடிக்கடி இங்கு காணலாம். இந்த உலகின் மிக பெரும் நீர்வீழ்ச்சியாக இது உள்ளது. இந்த சாம்பேஸி அருவி 2 கிலோமீட்டர் அகலம் கொண்டது.

மேலும் காண்க[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_அருவி&oldid=2938532" இருந்து மீள்விக்கப்பட்டது