விக்டோரியா அருவி தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டோரியா அருவி தேசியப் பூங்கா
Victoria Falls National Park
அமைவிடம்உவாஞ்சி மாவட்டம், சிம்பாப்வே
அருகாமை நகரம்உவாஞ்சி
பரப்பளவு23.4 கிமீ² [1]
நிருவாக அமைப்புசிம்பாப்வே வன மேலாண்மை ஆணையம்

விக்டோரியா அருவி தேசிய பூங்கா (Victoria Falls National Park) வட-மேற்கு சிம்பாப்வேயில் உள்ள உலகப் புகழ் பெற்ற விக்டோரியா அருவி பகுதியிலுள்ள சாம்பசி ஆற்றின் தெற்கு மற்றும் கிழக்கு கரைகளை பாதுகாக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இது சாம்பேஸி தேசிய பூங்காவில் இருந்து அருவிக்கு அண்ணளவாக 6 கிலோமீட்டர் மேலேயும் அருவிக்கு அண்ணளவாக 12 கிலோமீட்டர் கீழேயும் சாம்பேஸி நதியுடன் இணைந்து பரவியுள்ளது. 

இந்த பூங்காவில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக அருவியில் இருந்து தெளிக்கப்படும் நீரில் வளரும் மழைக்காடுகளை கூறலாம். இது பனை, பன்னம் , மரமயவேறி கொடிகள்  மற்றும் மாகோகனி போன்ற   பிராந்தியத்தில் ஏனைய இடங்களில் காண இயலாத மரங்களையும் கொண்டுள்ளது. இந்த பூங்கா சாம் பேஸியன் மற்றும் மொபேன் காட்டு சூழற் பகுதிக்குள் அமைந்துள்ளது. 

பார்வையாளர்கள் வண்டிகளிலோ  நடந்தோ பயணம் செய்யும் போது ஆபிரிக்க யானை, கேப் எருமை, தெற்கு வெள்ளை காண்டாமிருகம், நீர்யானை, எலண்ட் மற்றும்  பல்வேறு  வகையான  மான்களைப் பார்க்க முடியும். குளங்களில் முதலைகள் காணப்படுகின்றன. இவ்வாறான ஆபத்தான மிருகங்களை அருகிலுள்ள முதலைப்  பண்ணையில் பாதுகாப்பாக பார்வையிட முடியும். 

சாம்பேஸி தேசிய பூங்காவிற்கான  தங்குமிட வசதிகள் விக்டோரியா அருவி அமைந்துள்ள நகரைச் சுற்றி உள்ள பல்வேறு தலங்கள் உள்ளது. இவ்விடங்கள் பூங்காவின் மேற்கு எல்லைப் பகுதியின் ஒரு பகுதியை அமைந்துள்ளது. 

குறிப்புகள்[தொகு]

இந்த பூங்கா 5 நாடுகளை உள்ளடக்கிய கயாங்கோ- சாம்பேஸி எல்லைப் பாதுகாப்பு பகுதிக்குள் அடங்கி  இருப்பதாக கருதப்படுகிறது. 

மேற்கோள்கள்[தொகு]

  1. National Parks and Nature Reserves of Zimbabwe, World Institute for Conservation and Environment.