உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
வகைபொது
தேபசIRFC முபச543257
தலைமையகம்புதுதில்லி, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைவங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்
சேவைகள்குத்தகை, கடன் கொடுத்தல், கடன் வாங்குதல்
தாய் நிறுவனம்இந்திய இரயில்வே
இணையத்தளம்IRFC website

இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (சுருக்கமாக IRFC) ஒரு இந்திய அரசு நிறுவனமாகும். இந்திய ரயில்வே துறையின் நிதி பிரிவு நிறுவனமாக செயல்படும் இந்த நிறுவனம் டெபாசிட் பெறாத வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) வகையை சார்ந்த நிறுவனமாகும்.

இந்திய ரயில்வேயின் மேம்பாட்டுக்கு தேவைப்படும் நிதியை உள் மற்றும் வெளிநாடுகளின் பங்குசந்தைகளில் திரட்டுவதே இதன் முக்கிய பணியாகும். 1986 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் ஜனவரி 29, 2021 அன்று பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டது [1]

பணிகள்[தொகு]

இந்திய ரயில்வே துறைக்கு ஆண்டுக்காண்டு மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் உட்கட்டமைப்பு போன்றவற்றுக்கு அதிக முதலீட்டு தேவைப்படுவதால், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி மட்டும் போதாதா நிலை ஏற்படுகிறது. எனவே ரயில்வே துறைக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கு மேல் தேவைபடும் நிதியை (Extra Budgetary Resources) சந்தையில் நேரடியாக திரட்டும் வேலையை இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொள்கிறது.

நிதியை திரட்ட சந்தையில் குறிப்பிட்ட காலத்தில் முதிர்வு பெரும் கடன் பத்திரங்களை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]