உள்ளடக்கத்துக்குச் செல்

ரெயில்டெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய ரெயில்டெல் நிறுவனம்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை2000
தலைமையகம்தில்லி
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்குத்தகைத் தடம்
இணைய அணுக்கம்
இணையத்தளம்ரெயில்டெல்

இந்திய ரெயில்டெல் நிறுவனம் (Railtel Corporation of India) ஓர் அரசுத்துறை நிறுவனமாகும். இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் அகலப்பட்டை இணைய அணுக்கச் சேவைகள் மற்றும் மெய்நிகர் தனிப்பிணையம் வழங்கு சேவைகளுக்காகவும் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.

இதன் குறிக்கோள்களாக இந்திய இரயில்வேயின் தொடர்வண்டி இயக்கக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயமாக்கலும் அந்த அமைப்புகளில் நிலவும் உபரி கொள்ளளவைக் கொண்டு நாடு தழுவிய அகலப்பட்டை, தொலைதொடர்பு மற்றும் பல்லூடக பிணையங்களை உருவாக்குதலுமாக வரையறுக்கப்பட்டது.

இரயில்டெல்லின் 43000 கிமீ தொலைவுள்ள ஒளியிழை கம்பிவடங்களைக் கொண்டப் பிணையம் 5,000 தொடர்வண்டி நிலையங்களின் ஊடாகச் செல்வதால் நாட்டின் அனைத்து வணிக மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் ஊர்களுக்கும் மாநகரங்களுக்கும் இச்சேவைகளை வழங்க இயல்கிறது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், சிறு நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

அளிக்கும் சேவைகள்

[தொகு]
  • இணைய அணுக்கம்
  • மேலாண் குத்தகை சேவை
  • மெய்நிகர் தனிப்பிணையம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெயில்டெல்&oldid=3606744" இலிருந்து மீள்விக்கப்பட்டது