ஏர்செல்
முன்னைய வகை | தனியார்[1] |
---|---|
நிலை | திவால் |
நிறுவுகை | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா (1999 )[1] |
நிறுவனர்(கள்) | சின்னக்கண்ணன் சிவசங்கரன் |
செயலற்றது | 28 பெப்ரவரி 2018[2] |
தொழில்துறை | தொலைத்தொடர்பு |
சேவைகள் | நகர்பேசி, கம்பியற்ற தகவல்தொடர்பு |
வருமானம் | ▲ US$ 1.159 billion (2012)[3] |
உரிமையாளர்கள் | மேக்சிஸ் (74%)[4] அப்போலோ மருத்துவமனை(சிண்டியா செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்) (26%)[5] |
இணையத்தளம் | Aircel.com |
ஏர்செல் (Aircel) இந்தியாவில் உள்ள ஒரு நகர்பேசி சேவை வழங்கிய ஒரு நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள மும்பை ஆகும். இது இந்தியா முழுவதும் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை வழங்கியது. ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் கம்யுனிகேசன் என்ற மலேசியா நிறுவனம் 74 சதவிகித பங்குகளையும், மற்றும் சிண்டியா செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் 26 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளது.[4] ஏர்செல் நிறுவனமானது சின்னகண்ணன் சிவசங்கரனால் நிறுவப்பட்டது மற்றும் 1999 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சேவைகளை தொடங்கியது. இது ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்தது. ஒடிசா, அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கணிசமான அளவில் இத்தொலைத்தொடர்பை பயன்படுத்தினர்.
வரலாறு
[தொகு]ஏர்செல் நிறுவனமானது சின்னக்கண்ணன் சிவசங்கரன் என்பவரால் கோவிலூர், செய்யாறு மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டு, அதன் செயல்பாடுகள், தமிழக தொலைத் தொடர்பு வட்டத்தில் 1999இல் தொடங்கியது.[6] இது தமிழ்நாட்டில் முன்னணி நிறுவனமாகவும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகர்பேசி சேவைகளில் ஒன்றாகவும் ஆனது. ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் கம்யுனிகேசன் 74% பங்குகளையும், மற்றும் அப்போலோ மருத்துவமனை(சிண்டியா செக்யூரிட்டீஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்) 26% பங்குகளையும் கொண்டுள்ளது. பின்பு 14 செப்டம்பர் 2016 அன்று, ரிலையன்ஸ் கம்யூனிகேசன் ஆனது ஏர்செல் ஆகியவை தங்களுடைய நகர்பேசி சேவைகளின் செயல்பாடுகளில் இணைப்பதாக அறிவித்தது. இந்த இணைப்பைத் தொடர்ந்து, கூட்டு நிறுவனம் நுகர்வோர் தளம் மற்றும் வருவாயின் அடிப்படையில், இந்தியாவின் நான்காவது பெரிய தொலைத் தொடர்பு சேவையாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[7] ஆனால், ஒரு வருடம் கழித்து இரு நிறுவனங்களும் ஒழுங்குமுறை மற்றும் சட்ட சிக்கல்களைக் காரணம் காட்டி ஒப்பந்தத்தை கைவிட்டன.[8]
இயக்கம்
[தொகு]டிசம்பர் 2017 நிலவரப்படி, ஏர்செல் 84.93 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது மற்றும் இந்தியாவின் ஆறாவது பெரிய ஜிஎஸ்எம் மொபைல் சேவை வழங்குநராக இருந்தது.[9] இது தமிழ்நாட்டில் அதிகளவில் சந்தாதாரர்களை கொண்டிருந்தது. மேலும் ஒடிசா, அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கணிசமான அளவில் சந்தாதாரர்களை கொண்டிருந்தது. 2012 ஆம் ஆண்டில், இதன் செயல்பாடுகளில் ஒரு பெரிய மறு அமைப்பின் ஒரு பகுதியாக, மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து தொலைத் தொடர்பு வட்டாரங்களில் இதன் செயல்பாடுகளை குறைத்தது. பின்னர் ஏப்ரல் 2015 இல், ஏர்செல் தனது சேவையை கேரளாவில் மீண்டும் தொடங்கியது.[10][11]
பிற செயல்கள்
[தொகு]ஏர்செல் நிறுவனம் தோனியை தலைவராக கொண்ட இந்திய பிரிமியர் லீகின் துடுப்பாட்ட விளையாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சென்னை ஓபன் டென்னிஸின் டைட்டில் ஸ்பான்சராக ஏர்செல் நிறுவனம் ஒப்பந்தமாகி இருப்பதால், ஏர்செல் சென்னை ஓபன் என்று அழைக்கப்படுகிறது. ஏர்செல் நிறுவனத்திற்காக துடுப்பாட்ட வீரர் மகேந்திரசிங் தோனி மற்றும் நடிகர் சூர்யா விளம்பரங்களில் நடித்தனர்.
நிரந்தரமாக மூடல்
[தொகு]பிப்ரவரி 20, 2018 முதல் இந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்நிறுவனம் மூடப்படுமோ என அச்சம் ஏற்பட்டது. இதனால் பல வாடிக்கையாளர்கள் பிற நிறுவன தொலைத்தொடர்பு சேவைகளை பெற தங்கள் சிம்மை போர்ட் செய்யவும் முயற்சி செய்தனர். ஆனால் ஏர்செல் நிறுவனம் மூடப்படவில்லை, மேலும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதில் டவர் நிறுவனம் ஒன்றுடன் ஏர்செல்லுக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இப்போது சேவை செயல்படவில்லை என்றும், விரைவில் சேவைகள் வழங்க முயற்சிகள் எடுப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் மீண்டும் இந்நிறுவனம் சேவையை வழங்கியது. ஆனால் 28 பெப்ரவரி 2018 அன்று, எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, இந்நிறுவனத்தின் சேவைகள் துண்டிக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் திவாலானதால் நிரந்தரமாக மூடப்பட்டது என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. பின்பு ஏர்செல் நிறுவனம் திவால் நடவடிக்கைக்காக மும்பையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.[12][13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "FAQ" (PDF). Archived from the original (PDF) on 16 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 July 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Aircel goes bankrupt, becomes fourth telecom player to bow out as cut-throat price war takes toll". Business Today. பார்க்கப்பட்ட நாள் 1 July 2018.
- ↑ "Aircel: Banking on the Future". Voice & Data. 24 July 2012. Archived from the original on 19 January 2013.
- ↑ "Apollo group, Prathap C. Reddy have no investment in Aircel".
- ↑ "Aicel: What the future holds". Light Reading India. 15 செப்டெம்பர் 2012. Archived from the original on 17 பெப்பிரவரி 2013.
- ↑ Pandey, Piyush (14 September 2016). "RCom-Aircel merger a strong challenger to Idea Cellular". The Hindu. http://www.thehindu.com/business/Industry/RCom-Aircel-merger-a-strong-challenger-to-Idea-Cellular/article14637988.ece. பார்த்த நாள்: 9 January 2018.
- ↑ "RCom, Aircel hang up on merger plans". Business Line. 1 October 2017. http://www.thehindubusinessline.com/info-tech/rcom-aircel-hang-up-on-merger-plans/article9883410.ece. பார்த்த நாள்: 9 January 2018.
- ↑ "Press release on Telecom Subscription Data as on 28th February, 2018 | Telecom Regulatory Authority of India".
- ↑ "Aircel to withdraw from 5 circles". Daily News and Analysis. 13 October 2012.
- ↑ "Aircel to cut 600 jobs". The Times of India. 13 October 2012. http://timesofindia.indiatimes.com/tech/news/telecom/Aircel-to-cut-600-jobs/articleshow/16794330.cms.
- ↑ Sengupta, Devina (28 February 2018). "Aircel, country's last small mobile phone operator, files for bankruptcy". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/aircel-countrys-last-small-mobile-phone-firm-file-for-bankruptcy-today/articleshow/63110441.cms.
- ↑ "Aircel's bankruptcy note on Facebook". https://www.facebook.com/notes/aircel-india/aircel-press-release/1893902820650898/.