2ஜி
2ஜி (2G) அல்லது இரண்டாம் தலைமுறை என்று சுருக்கமாக, பரவலாகக் குறிப்பிடப்படுவது கம்பியில்லாத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தில் கண்ட இரண்டாம் தலைமுறை முன்னேற்றங்களை அடைக்கிய தொலைபேசி அமைப்பாகும். இரண்டாம் தலைமுறை அலைபேசி தொலைதொடர்பு பிணையங்கள் முதன்முதலாக 1991ஆம் ஆண்டு ஜி. எசு. எம் அமைப்பில் பின்லாந்தைச் சேர்ந்த ரேடியோலிஞ்சா [1](தற்போது எலிசா ஓய்யுடன் இணைக்கப்பட்டுள்ளது) துவங்கியது.
முந்தைய தலைமுறை தொலைதொடர்பு அமைப்புகளைவிட 2ஜி மூன்று விதங்களில் மேம்பட்டிருந்தது:
- தொலைபேசி உரையாடல்கள் "எண்மமுறையில் மறைவுக்குறி"யிடப்பட்டிருந்தது (digitally encrypted)
- கொடுக்கப்பட்ட அலைக்கறையை திறனுடன் மேலாண்டதால் கூடுதல் அலைபேசி இணைப்புகளைத் தர இயன்றது.
- தரவுச் சேவைகளை கொடுக்கக் கூடிய திறனை உள்ளடக்கியிருந்தது; குறுஞ்செய்திகள் முதலில் அனுப்ப இயன்றது.
இம்முறை செயலாக்காக்கப்பட்டபின் முந்தைய அலைபேசி அமைப்புகள் 1ஜி என வழங்கப்படலாயிற்று. 1ஜி அமைப்புகளில் வானொலி குறிப்பலைகள் அலைமருவி முறையில் வேலை செய்தன; இரண்டாம் தலைமுறையில் இவை எண்மருவி முறையில் இருந்தன. இரு தலைமுறைகளிலும் வான்வழி கோபுர குறிப்பலைகளை பிற தொலைபேசி அமைப்புகளுடன் இணைக்கும் முறை எண்மருவி முறையிலேயே இருந்தன.
இரண்டாம் தலைமுறை படிப்படியாக வளர்ச்சி கண்டு 2.5ஜி,2.75ஜி, 3ஜி, 4ஜி என முன்னேறி உள்ளது. இருப்பினும் உலகின் பல பகுதிகளிலும் 2ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் தற்போதைய அலைபேசிப் பிணையங்கள் 1ஜி முறையில் அறிமுகமாகி தற்போது 2ஜி முறையில் இயங்குகின்றன. 3ஜி அமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதனையும் பார்க்கவும்
[தொகு]இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Radiolinja's History". 2004-04-20. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.