டிகோணா பிராட்பாண்டு
வகை | அகலப்பட்டை சேவை வழங்குனர் |
---|---|
நிறுவுகை | 2008 |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
முதன்மை நபர்கள் | பிரகாஷ் பாஜ்பாய் (நிறுவனர், எம்டி & சிஈஓ)[1][2] |
தொழில்துறை | இணையச் சேவை வழங்குனர் |
உற்பத்திகள் | கம்பியில்லா அகலப்பட்டை |
நிகர வருமானம் | 50 |
இணையத்தளம் | www |
டிகோணா எண்ணிம்ப் பிணையம் (Tikona Digital Networks, TDN), சுருக்கமாக டிகோணா, மும்பையிலிருந்து இயங்கும் ஓர் இந்திய அகலப்பட்டை இணையச் சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுமையிலும் கிளாஸ்-ஏ இரக இணையச் சேவை வழங்குனருக்கான உரிமத்தை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.[2] டிகோணா வீட்டுப் பயனாளர்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் கம்பியில்லா அகலப்பட்டை சேவை வழங்கி வருகிறது. இந்த நிறுவனப் பங்குகளில் கோல்டுமான் சாசு முதலீடு நிறுவனம் 22.8 விழுக்காடும் இன்ட்விசன் இந்தியா 13.46 விழுக்காடும் ஓக் இந்தியா இன்வெஸ்ட்மென்ட்சு 23.55 விழுக்காடும் கிரீன் லோட்டசு நிறுவனம் 10.09 விழுக்காடும் முதலீடு செய்துள்ளன.[3] 2008ஆம் ஆண்டு மும்பையில் இது தொடங்கப்பட்டது.[4][5] 2010ஆம் ஆண்டு மத்தியில் டிகோணாவிற்கு 150,000 வாடிக்கையாளர்கள் இருந்தனர்; இவர்களில் 6000 பேர் சிறு மற்றும் இடைநிலை வணிக நிறுவனங்காவர்.[6]
டிகோணா குசராத், இமாச்சலப் பிரதேசம், இராசத்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களில் நான்காம் தலைமுறை கம்பியில்லா அகலப்பட்டை சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.[7]இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய மலேசியாவின் ஆக்சியாடா நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.[8]
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ "Tikona to go RIL way on BWA tech - Corporate News". livemint.com. 2010-07-05. பார்க்கப்பட்ட நாள் 2010-07-29.
- ↑ 2.0 2.1 "Tikona in talks to share broadband with 3G enabled telcos". The Hindu Business Line. 2010-07-12. பார்க்கப்பட்ட நாள் 2010-07-29.
- ↑ "Why Is Tikona Bidding For Broadband Spectrum, When It Already Operates In Free, Unlicensed Spectrum? - Free Online Library". Thefreelibrary.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-29.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Tikona Digital Networks - About TDN". Tikona.in. Archived from the original on 2010-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-07-29.
- ↑ "Tikona Digital Networks launches operations in Delhi". Indiainfoline.com. 2010-02-10. பார்க்கப்பட்ட நாள் 2010-07-29.
- ↑ http://www.livemint.com/2010/07/05220657/Tikona-to-go-RIL-way-on-BWA-te.html
- ↑ http://telecomtalk.info/tikona-to-launch-4g-lte-wireless-broadband-services-soon/91710/#more-91710
- ↑ "Axiata may pick up stake in Tikona broadband".