மகாநகர் டெலிபோன் நிகம்
Jump to navigation
Jump to search
![]() | |
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | (ஏப்ரல் 1, 1986 | )
தலைமையகம் | புதுதில்லி, இந்தியா |
முக்கிய நபர்கள் | ஏ.கே.கர்க் (தலைவர் & மேலாண்மை இயக்குநர்) |
தொழில்துறை | தொலைத்தொடர்புகள் |
உற்பத்திகள் | நிலைத்த தொலைபேசி, நகர்பேசி, கம்பிவட மற்றும் கம்பியிலா அகலப்பட்டை இணைய அணுக்கம், வீட்டுக்கு ஒளியிழை, அழைப்பு இணையம், இணைய நெறிவழி தொலைக்காட்சி, எண்ணிம தொலைக்காட்சி |
வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
உரிமையாளர்கள் | இந்திய அரசு (56.25%) |
பணியாளர் | 45,000 (2010)[1] |
துணை நிறுவனங்கள் | மகாநகர் டெலிபோன் மொரிசியசு லிமிடெட் (MTML) |
இணையத்தளம் | www.mtnldelhi.in www.mtnlmumbai.in |
மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் (Mahanagar Telephone Nigam Limited, MTNL) இந்தியாவில் மும்பை மற்றும் தில்லி பெருநகர்ப்பகுதிகளிலும் மொரிசியசிலும் தொலைதொடர்பு சேவைகளை வழங்கும் அரசுத்துறை நிறுவனமாகும். 1992ஆம் ஆண்டில் தொலைதொடர்புச் சேவைகளை பொதுப்பரப்பில் அனுமதிக்கும் வரை மும்பையிலும் தில்லியிலும் முழுநிறை உரிமை பெற்றிருந்தது. இந்திய அரசிற்கு இந்த நிறுவனத்தில் 56.25% பங்குகள் உள்ளன; ஏனையவை பங்குச் சந்தையில் பரவலாக்கப்பட்டுள்ளன.[2] அண்மைய ஆண்டுகளில், இந்திய தொலைத்தொடர்புத் துறையில் நிலவும் போட்டிகளால், எம்டிஎன்எல் தனது சந்தைப் பங்கை இழந்து வருவதோடு நட்டத்திலும் இயங்கி வருகிறது.[3]
நலிவு நிலை[தொகு]
இந்திய அரசின் பொதுதுறை நிறுவனமான இது நலிவடைந்து வருவதால் மூடிவிட 2015ஆம் ஆண்டி அரசு முடிவெடுத்துள்ளது.[4]