இந்தியன் ஆயில் கார்பரேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியன் ஆயில் கார்பரேசன்
வகைபொதுத்துறை நிறுவனம்
முந்தியதுஇந்திய எண்ணெய் சுத்திரிகரிப்பு நிறுவனம் (1958)
இந்தியன் ஆயில் கார்பரேசன் (1959)
நிறுவுகை1964; 57 ஆண்டுகளுக்கு முன்னர் (1964), புது தில்லி
தலைமையகம்புது தில்லி, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா, இலங்கை, மத்திய கிழக்கு நாடுகள், மொரிசியசு
முக்கிய நபர்கள்சஞ்சீவ் சிங் (தலைவர்)[1]
தொழில்துறைஎரி வாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள்
உற்பத்திகள்பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பெட்ரோகெமிக்கல்ஸ்
வருமானம்Green Arrow Up.svg 3,64,081.74 கோடி
(US$47.73 பில்லியன்)
(2017)[2]
இயக்க வருமானம்Green Arrow Up.svg 26,321.24 கோடி
(US$3.45 பில்லியன்)
(2017)[2]
நிகர வருமானம்Green Arrow Up.svg 19,106.4 கோடி
(US$2.5 பில்லியன்)
(2017)[2]
மொத்தச் சொத்துகள்Green Arrow Up.svg 1,50,113.52 கோடி
(US$19.68 பில்லியன்)
(2017)[3]
பணியாளர்33,135 (2017)[2]
துணை நிறுவனங்கள்இந்தியன் ஆயில் (மொரிசியசு)
லங்கா ஐஒசி
ஐஒசி மத்திய கிழக்கு
இணையத்தளம்www.iocl.com

இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் (Indian Oil Corporation Limited (IOCL)) (தேபசIOC , முபச530965 ) பொதுவாக இந்தியன் ஆயில் என்றழைக்கப்படும், இந்திய அரசின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், மகா நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

இந்தியாவில் பெரிதான இந்நிறுவனம், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் வணிகத்திற்கு பெயர் பெற்றது. இந்நிறுவனத்தின் 2016 – 17 ஆண்டு வருமானம் ரூ. 19,106 கோடியாகும். (USD 2,848 million) [4]2016ல் போர்ச்சூன் இந்தியா நிறுவனம் தர வரிசையில், இந்தியாவின் முதல் 500 நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் முதலிடத்தைப் பெற்றது. [5]மேலும் 2017ல் இந்நிறுவனம் உலக அளவில், முதல் ஐநூறு இடங்களில், 168வது இடத்தை பிடித்தது.[6] 31 மார்ச் 2017ல் இந்நிறுவனத்தில் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 33,135 ஆகும். அவர்களில் அலுவலர்களின் எண்ணிக்கை 16,545 ஆகும்.[7]

பெட்ரோலிய-இயற்கை எரிவாயு போன்ற பொருட்களை உற்பத்தி செய்தல், சுத்திகரித்தல், வினியோகித்தல், சந்தைபடுத்தல் இந்நிறுவனத்தின் முக்கியப் பணிகளாகும் [8] இந்தியாவில் மட்டுமின்றி, இலங்கை, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மொரிசியசு போன்ற நாடுகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், தனது துணை நிறுவனங்களின் மூலம் பெட்ரோலியப் பொருட்களை அகழ்வு செய்து கச்சா எண்ணெயை வெளியெடுத்தல், சுத்திரிகரிப்பு நிலையங்கள் மூலம் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தல், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற தொழில், வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. [9][10] [11].

வணிகப் பிரிவுகள்[தொகு]

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் ஏழு முதன்மையான பிரிவுகளுடன் செயல்படுகிறது. அவைகள்:

 • கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவு[12]
 • பைப் லைன் பிரிவு[13]
 • சந்தைப் பிரிவு[14]
 • ஆராய்ச்சி & வளர்ச்சிப் பிரிவு[15]
 • பெட்ரோ கெமிக்கல்ஸ் பிரிவு[16]
 • அகழாய்வு & உற்பத்திப் பிரிவு[17]
 • வெடி மருந்துகள் மற்றும் கிரியோஜெனிக் பிரிவு[18]

தயாரிப்புகள் & சேவைகள்[தொகு]

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்தியாவில் இயங்கும் 23 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில், 11 நிலையங்களின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு, 80.7 MMTPA (மில்லியன் மெட்ரிக் டன்) பெட்ரோலியப் பொருட்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் உற்பத்தி செய்கிறது [19]

சமையல் திரவ எரிவாயுவை இரும்பு உருளைகளில் அடைத்து, இந்நிறுவனம் இண்டேன் (Indane (LPG)) எனும் வணிகப் பெயர்களில் இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறதுஒ.

இந்நிறுவனம் பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான உயர் கல்வியை ராஜிவ் காந்தி பெட்ரோலிய தொழில் நுட்ப நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு வழங்குகிறது.[20]

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு சொந்தமானதாகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. PTI (2017-06-01). "Sanjiv Singh takes over as IOC Chairman" (in en). The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/companies/sanjiv-singh-takes-over-as-ioc-chairman/article9717427.ece. 
 2. 2.0 2.1 2.2 2.3 "Financial Statement – Indian Oil Corporation Limited". MoneyControl. http://www.moneycontrol.com/financials/indianoilcorporation/profit-lossVI/IOC#IOC. பார்த்த நாள்: 13 September 2017. 
 3. "Indian Oil Corporation Total Assets and Asset Turnover Ratio Financial Graphs".
 4. "Fortune Global 500 List (India)". Golbal500. http://www.livemint.com/Companies/mGQjxjJVWaHauJzIoVWcaL/Indian-Oil-Q4-net-profit-jumps-85.html. பார்த்த நாள்: 26 May 2017. 
 5. "Indian Oil - Fortune 500 List 2016 - Fortune India" (en).
 6. "Indian Oil" (en-US).
 7. "Indian Oil Corporation :: RTI Information Manual".
 8. Editorial, Reuters. "${Instrument_CompanyName} ${Instrument_Ric} Company Profile | Reuters.com" (en-US).
 9. "IndianOil Corporation | Lanka IOC PLC".
 10. "IndianOil Corporation | IndianOil (Mauritius) Ltd.".
 11. "IndianOil Corporation | Group Companies".
 12. "Refining : Oil and Gas Technology : IndianOil".
 13. "Pipelines : Oil and Gas Pipeline : Gas and Oil Energy".
 14. "Marketing : Oil and Gas Service Companies".
 15. "R & D Centre : Indian Oil".
 16. "Petrochemicals : World Class Petrochemicals".
 17. "Exploration and Production: Oil and Gas Exploration and Production".
 18. "Exploration and Production: Oil and Gas Exploration and Production".
 19. Anonymous (2011-07-03). "Indian Oil Corporation" (in en). 13th Pipeline Technology Conference. https://www.pipeline-conference.com/companies/indian-oil-corporation. 
 20. http://www.topnews.in/sonia-lay-foundation-rajiv-gandhi-petroleum-institute-rae-bareli-221339

வெளி இணைப்புகள்[தொகு]