இந்திய உணவுக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய உணவுக் கழகம்
வகைஅரசுடமை நிறுவனம்
நிறுவுகை1964
நிறுவனர்(கள்)இந்திய அரசு
தலைமையகம்புதுதில்லி, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா முழுமையும்
முக்கிய நபர்கள்சிராஜ் ஹுசைன் (இ.அ.ப.) தலைவர் & மேலாண் இயக்குனர்
தொழில்துறைஅரசுத்துறை நிறுவனம்
உற்பத்திகள்பெரும்பாலும் கோதுமை & அரிசி
சேவைகள்அரசுக் கொள்கை செயலாக்கம்
பணியாளர்34000
இணையத்தளம்http://www.fciweb.nic.in/

இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India, இந்தி: भारतीय खाঘ निगम) உணவுக் கழகங்கள் சட்டம் 1964இன் கீழ் சென்னையைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சாவூரில் முதல் மாவட்டநிலை அலுவலகம் சனவரி 14, 1965ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது தேசிய உணவுக் கொள்கையின் கீழ்வரும் நோக்கங்களை செயல்படுத்த உருவாக்கப்பட்டது:

  1. விவசாயிகளின் நன்மையைக் கருத்தில்கொண்டு பயனுறு விலை ஆதரவை நல்குவது
  2. பொது விநியோக முறைக்காக நாடு முழுமையும் உணவுத் தானியங்களை வழங்குதல்
  3. தேசிய உணவு பாதுகாப்பிற்காக ஏற்றுக்கொள்ளத் தக்க செய்பணி மற்றும் இடைநிலை உணவுத்தானிய இருப்பை பராமரித்தல்

புள்ளிவிவரங்கள்[தொகு]

இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இந்திய உணவுக் கழகம் உள்ளது. ஆசியாவின் மிகப்பெரும் வழங்கல் சங்கிலி மேலாண்மை நிறுவனமாகவும் விளங்கக்கூடும். ஐந்து மண்டல அலுவலகங்களுடனும் 26 வட்டார அலுவலகங்களுடனும் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய உணவுக் கழகம் இந்திய கோதுமை உற்பத்தியில் 15-20 விழுக்காடும் அரிசி உற்பத்தியில் 12-15 விழுக்காடும் கொள்முதல் செய்கிறது. இவற்றை இந்திய அரசு நிர்ணயித்த விலையில் விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது. இந்த விலை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support Price) எனப்படுகிறது. தானியங்கள் சராசரி நியாய தர நிர்ணயத்தைக் கொண்டிருக்கும் வரை எந்த அளவிற்கும் கொள்முதல் செய்ய இக்கழகத்திற்குத் தடை இல்லை.

செயல்பாடு[தொகு]

சேமிப்புக் கிடங்குகளிலிருந்து இந்தியா முழுமையும் எடுத்துச் சென்று மாநில அரசுகளுக்கு இந்திய அரசு விதித்துள்ள விலையில் வழங்குகிறது. இதனை மாநில அரசின் முகவர்கள் பொது வழங்கல் அமைப்பின் வழியாக குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு வழங்குகின்றனர்.(இந்திய உணவுக் கழகம் நேரடியாக பொது வழங்கலில் பங்கேற்பதில்லை; தனது கிடங்குகளிலிருந்து தானியங்கள் வெளியேறிய உடனேயே அதன் பொறுப்பு தீர்கிறது). உணவுக் கழகம் விவசாயிகளுக்கு கொடுத்த விலைக்கும் மாநில அரசுகளுக்கு விற்ற விலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, அலுவலக செலவினங்கள் உட்பட, உணவு மானியமாக ஒன்றிய அரசு வழங்குகிறது. தற்போது ஓராண்டிற்கான உணவு மானியம் ஏறத்தாழ $10 மில்லியனாக உள்ளது.

இந்திய உணவுக் கழகத்திற்கு அடிப்படை விலைகளை தீர்மானிக்கவோ, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யவோ முடிவெடிக்கும் அதிகாரம் இல்லை. ஒன்றிய அரசின் உணவு மற்றும் வேளாண் அமைச்சகங்களின் முடிவுகளை செயலாக்குவதே இதன் பணியாக உள்ளது.

விமர்சனங்கள்[தொகு]

இந்திய உணவுக் கழகம் நவீன சேமிப்பு வசதிகளை கட்டமைக்கவில்லை; இதன் கிடங்குகளில் பல தகுந்த கூரையின்றி இருப்பதால் இயற்கை சீரழிவுகளால் பெரும் தானியங்கள் வீணாகின்றன. மேலும் எலி போன்றவைகளால் உட்கொள்ளப்படுவதாலும் கையாடல்களாலும் கணக்கில் இல்லா இருப்புக் குறைவு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் சேமிக்கப்படுவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரம் குறைந்த தானியங்கள் வழங்கப்படுகின்றன. 2010-11 நிதியாண்டில் 1.56 இலட்சம் டன் உணவுத் தானியங்கள் இவ்வாறு வீணானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்திய உணவுக் கழக கிடங்குகளில் 1 இலட்சம் டன் உணவுப் பொருள் வீண்: அமைச்சர் ஒப்புதல் வெப்துனியா, 19 டிசம்பர் 2011

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_உணவுக்_கழகம்&oldid=3233681" இருந்து மீள்விக்கப்பட்டது