ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி
Appearance
(ரிலையன்சு டிஜிட்டல் டிவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வகை | ரிலையன்சு கம்யூனிகேசன்சின் துணை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2008 |
தலைமையகம் | திருபாய் அம்பானி அறிவு நகரம், நவி மும்பை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | அனில் அம்பானி |
தொழில்துறை | செய்மதித் தொலைக்காட்சி |
உற்பத்திகள் | விண்ணின்று வீடு, கட்டணத் தொலைக்காட்சி, காட்சிக்குக் கட்டணம் |
தாய் நிறுவனம் | ரிலையன்சு குழுமம் |
துணை நிறுவனங்கள் | ரிலையன்சு டிஜிட்டல் டிவி லிட். |
இணையத்தளம் | www |
ரிலையன்சு எண்ணிமத் தொலைக்காட்சி (Reliance Digital TV) இந்தியாவில் மிகப் பெரும் கட்டணத் தொலைக்காட்சி சேவையாளர்களில் ஒன்றாகும். பிக் டிவி என்ற வணிகப் பெயரில் விண்ணின்று வீடு சேவை வழங்கி வருகிறது. இதன் செய்மதித் தொலைக்காட்சி எம்பெக்-4 எண்ணிம சுருக்கத் தொழினுட்பத்தை[1] பயன்படுத்துவதால் கூடுதல் அலைவரிசைகளைக் கொடுக்க முடிகிறது. இதன் அலைவரிசைகள் 91.5°கிழக்குப் பாகையில் அமைந்துள்ள மூன்றாம் மலேசிய கிழக்காசிய செயற்கைக்கோளிலிருந்து (MEASAT-3) பரப்பப்படுகின்றன.
ரிலையன்சு டிஜிட்டல் டிவி ஆகத்து 19, 2008இல் இந்தியாவின் ஐந்தாவது விண்ணின்று வீட்டுத் தொலைக்காட்சியாகத் துவங்கியது. நவம்பர் 2011இல் பிக் டிவிக்கு 7 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்தனர்.[2] பெப்ரவரி 2011இல் இந்தியாவில் மொத்தம் 30 மில்லியன் விண்ணின்று வீடு சந்தாதாரர்கள் இருந்தனர்.[3]
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ "Why Reliance Digital TV - 6 reasons to love us". Archived from the original on 2013-01-06. பார்க்கப்பட்ட நாள் 2013-01-16.
- ↑ Reliance Digicom to start ops by December - Indian Express
- ↑ Dish TV India passes 10mn DTH subscriber milestone | News | Rapid TV News