உள்ளடக்கத்துக்குச் செல்

ஐடியா செல்லுலார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐடியா(Idea) இந்தியாவில் உள்ள ஒரு நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். அதன் தலைமையகம் மும்பை, மகாராஷ்டிராவை தளமாகக் கொண்டுள்ளது.[1][2] இது இந்தியா முழுவதும் 22 மண்டலங்களில் முன்கட்டண மற்றும் பின்கட்டண இணைப்புகளை நகர்ப்பேசிகளுக்கு அளித்து வருகிறது. மற்றும் கம்பியில்லா இணையச்சேவை, குரல் அழைப்புகள், பொழுதுபோக்கு குறுஞ்செய்தி, நகர்பேசி இணையம் 2ஜி, 3ஜி, மற்றும் 4ஜி, மதிப்புக்கூட்டு சேவைகள், ஐடியா மணி (2014இல் அறிமுகம்) உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது.

சந்தாதாரர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஐடியா செல்லுலார் இந்தியாவில் மூன்றாம் இடத்தைப் பெற்ற நிறுவனம் ஆகும். 31 ஆகஸ்ட் 2019 நிலவரப்படி, வோடபோன் ஐடியா 375.07 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.[3] மேலும் இது 1.7 மில்லியன் சில்லறை விற்பனை நிலையங்களை நாடெங்கும் கொண்டுள்ளது.

இந்நிறுவனம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஓர் அங்கமாகும். "ஓர் ஐடியா உங்கள் வாழ்க்கையை மாற்றிடுமே" என்பது இந்நிறுவனத்தின் விளம்பரச்சொல் ஆகும். ஐடியா செல்லுலார் சந்தை மதிப்பில் 16.36% பங்குகளையும், ஏப்ரல் 2015 நிலவரப்படி 159.20 மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. வீடியோகான் மொபைல் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை இந்த நிறுவனம் 2015 நவம்பர் 25 ஆம் திகதி அன்று வாங்கியுள்ளது.[4]

31 ஆகஸ்ட் 2018 அன்று, வோடபோன் இந்தியா ஐடியா செல்லுலருடன் இணைந்தது, மேலும் வோடபோன் ஐடியா லிமிடெட் என மறுபெயரிடப்பட்டது. இருப்பினும், இணைக்கப்பட்ட நிறுவனம் ஐடியா மற்றும் வோடபோன் பிராண்ட் இரண்டையும் தொடர்ந்து பயன்படுத்துகிறது. குமார் மங்கலம் பிர்லா இணைக்கப்பட்ட நிறுவனத்தின் தலைவராகத் தலைமை தாங்குகிறார். மற்றும் பாலேஷ் சர்மா தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். வோடபோன் ஐடியாவின் பங்கு விலை தேசிய பங்குச் சந்தையில் 80% சரிந்த பின்னர், பாலேஷ் சர்மா தனிப்பட்ட காரணங்களைக் கூறி பணியிலிருந்து விலகினார்.

வரலாறு

[தொகு]

20 மார்ச் 2017 அன்று, ஐடியா மற்றும் வோடபோன் இந்தியா இரு நிறுவனங்களையும் இணைக்க அந்தந்த வாரியங்கள் ஒப்புதல் அளித்ததாக அறிவித்தன. இந்த இணைப்புக்கு ஜூலை 2018 இல் தொலைத்தொடர்பு துறையின் ஒப்புதல் கிடைத்தது. ஆகஸ்ட் 30, 2018 அன்று, வோடபோன் ஐடியா இணைப்புக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் இறுதி ஒப்புதல் அளித்தது.[5] இணைப்பு 31 ஆகஸ்ட் 2018 அன்று நிறைவடைந்தது, மேலும் புதிதாக இணைக்கப்பட்ட நிறுவனத்திற்கு வோடபோன் ஐடியா லிமிடெட் என்று பெயரிடப்பட்டது.[6][7][8]

இந்த இணைப்பு மூலம்சந்தாதாரர் மற்றும் வருவாயால் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உருவாகியது. ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, வோடபோன் குழுமம் ஒருங்கிணைந்த நிறுவனத்தில் 45.2% பங்குகளையும், ஆதித்யா பிர்லா குழுமம் 26% பங்குகளையும், மீதமுள்ள பங்குகள் பொதுமக்களும் வைத்திருப்பார்கள். ஐடியா முன்பு ஸ்பைஸ் டெலிகாம் என்ற பெயரில் இயங்கும் ஸ்பைஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை ரூ .2,700 கோடிக்கு வாங்கியது.[9]

வலைதள ஒருங்கிணைப்பு

[தொகு]

மார்ச் 2019 க்குள், வோடபோன் ஐடியா லிமிடெட் அதன் வலைதள ஒருங்கிணைப்பை முக்கிய வட்டங்களில் அறிவித்தது, நுகர்வோர் எதிர்கொள்ளும் பிணைய சிக்கல்களை எளிதாக்குகியது மற்றும் அதன் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையின் எல்லைகளையும் மேம்படுத்துயது.

பஞ்சாப் வலைதள ஒருங்கிணைப்பு

[தொகு]

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்குநரான வோடபோன் ஐடியா லிமிடெட், பஞ்சாப் சேவை பகுதியில் அதன் வானொலி வலைதள ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதாக அறிவித்தது. இதன் மூலம், தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய வலைதள ஒருங்கிணைப்பு பயிற்சியில் ஒருங்கிணைப்பை நிறைவு செய்த முதல் பத்து வட்டங்களில் பஞ்சாப் ஒன்றாகும்.[10]

ராஜஸ்த்தான் வலைதள ஒருங்கிணைப்பு

[தொகு]

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்குநர், ராஜஸ்தான் சேவை பகுதியில் அதன் வானொலி வலைதள ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக ஒருங்கிணைப்பதாக அறிவித்தது. இதன் மூலம், தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய வளைதள ஒருங்கிணைப்பு பயிற்சியில் ஒருங்கிணைப்பை நிறைவு செய்த முதல் பதினொரு வட்டங்களில் ராஜஸ்தான் ஒன்றாகும்

டெலிகாம் ரெகுலேட்டரின் தரவுகளின்படி, 2019 மார்ச் மாத இறுதியில் வோடபோன் ஐடியாவின் கம்பியில்லா இணைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை 394.8 மில்லியனாக இருந்தது. சண்டிகர், லூதியானா, அமிர்தசரஸ், ஜலந்தர், பாட்டியாலா, பதிண்டா, மோகா மற்றும் ஹோஷியார்பூர், ராஜஸ்தான் ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர், கோட்டா, அஜ்மீர், உதய்பூர் போன்றவற்றில் உள்ளிட்ட நகரங்களில் வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைச் சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பஞ்சாபில் வலைதள ஒருங்கிணைப்பு குறித்த அறிக்கை தெரிவித்துள்ளது

வழங்கும் சேவைகள்

[தொகு]
  • குரல் அழைப்புகள்
  • குறுஞ்செய்தி
  • நகர்பேசி இணையம் 2G, 3G, & 4G
  • மதிப்புக்கூட்டு சேவைகள்
  • ஐடியா மணி (2014) அறிமுகம்

சந்தாதாரர் விபரம்

[தொகு]

ஜுலை 2010 அன்று மண்டல வாரியாக சந்தாதாரர் விபரம் [https://web.archive.org/web/20100902143909/http://www.coai.in/statistics.php பரணிடப்பட்டது 2010-09-02 at the வந்தவழி இயந்திரம் [1]]

  1. மகாராஷ்டிரம்-10200545
  2. குஜராத்-5527750
  3. ஆந்திரப் பிரதேசம்-6756613
  4. மத்தியப் பிரதேசம்-8023189
  5. தில்லி-3002652
  6. கேரளம்-6000233
  7. ஹரியானா-2318631
  8. உத்தரப் பிரதேசம்மேற்கு-6217082
  9. உத்தரப் பிரதேசம்கிழக்கு-4203629
  10. ராஜஸ்தான்-2439335
  11. இமாசலப் பிரதேசம்-304141
  12. மும்பை- 1801434
  13. கொல்கத்தா-667463
  14. மேற்கு வங்காளம்-1121359
  15. ஜம்மு காஷ்மீர்-76397
  16. அஸ்ஸாம்-120691
  17. வடகிழக்குமாநிலங்கள்-51831
  18. பிஹார்-3520550
  19. ஒரிஸா-657071
  20. தமிழ் நாடு-1200182
  21. கர்நாடகம்-3016131
  22. பஞ்சாப்-3522027

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "India’s Idea Cellular Will Use Nokia’s Cloud Core" (in en-US). SDxCentral. https://www.sdxcentral.com/articles/news/indias-idea-cellular-will-use-nokias-cloud-core/2018/08/. 
  2. "Vodafone Mini Stores in Mumbai Will Now Facilitate Tata Power Bill Payments via M-Pesa e-wallet - MySmartPrice News" (in en-US). MySmartPrice. 2018-08-08 இம் மூலத்தில் இருந்து 2018-09-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180904160831/https://www.mysmartprice.com/gear/2018/08/08/vodafone-mini-stores-mumbai-will-now-facilitate-tata-power-bill-payments-via-m-pesa-e-wallet/. 
  3. https://economictimes.indiatimes.com/industry/telecom/telecom-news/airtel-vodafone-idea-lose-30-mn-customers-jio-adds-9-4-mn-users-in-mar/articleshow/69432089.cms
  4. வீடியோகான் டெலிகாம் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்கியது ஐடியா தி இந்து தமிழ் நவம்பர் 26 2015
  5. Parbat, Kalyan; Sengupta, Devina (2018-08-31). "NCLT gives go-ahead to Idea-Vodafone merger". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/telecom/telecom-news/nclt-gives-go-ahead-to-idea-vodafone-merger/articleshow/65616161.cms. 
  6. "Idea approves merger with Vodafone India, to create India's largest telco". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.
  7. Kurup, Rajesh (20 March 2017). "Idea Cellular board approves merger with Vodafone India; shares tank 9%". The Hindu Business Line (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.
  8. "Disclosure under Regulation 30 of SEBI (LODR) Regulations, 2015" (PDF). BSE. BSE. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Idea acquires Spice Telecom". Plugged.in. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.
  10. "Vodafone Idea Successfully Completes Radio Network Consolidation In Punjab". Communications Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடியா_செல்லுலார்&oldid=3575019" இலிருந்து மீள்விக்கப்பட்டது