உள்ளடக்கத்துக்குச் செல்

சன் டைரக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் டைரக்ட்
வகைகூட்டுக் குழுமம்
நிறுவுகை2005
தலைமையகம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்கலாநிதி மாறன் (மேலாளர் & முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைசெயற்கைக்கோள் தொலைக்காட்சி
தாய் நிறுவனம்சன் குழுமம் (80%)
ஆஸ்ட்ரோ குழுமம் (20%)
இணையத்தளம்sundirect.in

சன் டைரக்ட் (ஆங்கிலம்: Sun Direct) இந்தியாவில் உள்ள டி. டீ. எச் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த செயற்கைக்கோள் சேவை 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சன் டைரக்ட் இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4B மற்றும் (MEASAT) 3 செயற்கைக்கோள்கள் உதவியுடன் எம்பெக்-4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. [1][2] இது இந்தியாவின் முதல் எம்பெக் - 4 (MPEG-4) தொழில்நுட்பத்தை வழங்கும் டி. டீ. எச் சேவை வழங்குனர்.

கேபிள் தொலைக்காட்சி மற்றும் மற்ற டி. டீ. எச். சேவை வழங்கிகளான ஏர்டெல் டிஜிட்டல் டிவி, ரிலையன்ஸ் பிக் டிவி, டிடி டைரக்ட் +, டாட்டா ஸ்கை, டிஷ் டிவி மற்றும் வீடியோகான் டி2எச் போன்றவை அதன் முக்கிய போட்டி நிறுவனங்கள் ஆகும்.

வரலாறு

[தொகு]

சன் டைரக்ட் சன் குழுமமும், மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோ குழுமமும் இணைந்து தொடங்கப்பட்டது. ஜனவரி 27, 1997-ம் ஆண்டு, மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டது. திசம்பர் 2007-இல் டி. டீ. எச். நிறுவனங்களுக்கான இந்திய அரசாங்கத்தின் செயற்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு சுமார், 115 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சன் டைரக்டின் 20% பங்குகளை ஆஸ்ட்ரோ நிறுவனம் வாங்கியது.[3]சன் டைரக்ட், பிப்ரவரி 16, 2005-இல் பதிவு செய்யப்பட்டது.[4] இன்சாட் - 4சி செயற்கைக்கோள் தோல்வியைத் தழுவியதை தொடர்ந்து, சன் டைரக்டின் விரிவாக்கம் சற்று சரிந்தது. [5] கடைசியாக, இந்த சேவை 18, ஜனவரி, 2008-க்குப் பிறகு இன்சாட் - 4பி மூலமாகவே சரி செய்யப்பட்டது.

சன் டைரக்ட் வாடிக்கையாளர்களுக்கு செட்டாப் பாக்ஸ் எனும் கிரகிக்கும் கருவி மற்றும் டிஷ் போன்றவற்றை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஆரம்பத்தில் மாத கட்டணமாக வெறும் 75-ம், தற்போது சராசரியாக 165-ம் மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

திசம்பர் 2009-ம் ஆண்டில் மும்பையில் தன்னுடைய சேவையைத் தொடங்கிய சன் டைரக்ட், 2009-ம் ஆண்டில் மூன்று மில்லியன் சந்தாதாரர்களுடன், இந்தியாவின் இரண்டாவது பெரிய டி. டீ. எச். நிறுவனமாக உருவானது.[6]

செயற்கைக்கோள் மாற்றம்

[தொகு]

2010-ம் ஆண்டு சூலைத்திங்கள் 7-ஆம் நாள் ஏற்பட்ட இன்சாட் - 4பி செயற்கைக்கோள் தொழில்நுட்ப கோளாறு[7][8] காரணமாக சன் டைரக்டின் ஒளிபரப்பு சேவை பாதிக்கப்பட்டது, அனைத்துச் சேவைகளும் மீண்டும் தொடங்கும் வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச சேவை வழங்கப்பட்டது.[2] தற்போது, சன் டைரக்ட் இன்சாட் - 4 மற்றும் மீசாட் -3 செயற்கைக்கோள்கலை பயன்படுத்தி வருகின்றது. ரிலையன்ஸ் பிக் டிவியும், இதே மீசாட் -3 செயற்கைக்கோள்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சன் டைரக்ட் நிறுவனம் இரண்டு செயற்கைக்கோளில் இயங்கும் இரண்டாவது டி. டீ. எச். நிறுவனமாகும்.

சன் டைரக்ட் எச்டி

[தொகு]
சன் டைரக்ட் அலைக்கம்பம்

சன் டைரக்ட் இந்தியாவின் முதல் எச்டி (உயர் வரைவு) சேவையை 2 அலைவரிசைகளுடன் தொடங்கியது. பிறகு சன் உயர் வரைவுத் தொலைக்காட்சி, கே உயர் வரைவுத் தொலைக்காட்சி, சன் மியூசிக் உயர் வரைவுத் தொலைக்காட்சி, ஜெமினி உயர் வரைவுத் தொலைக்காட்சி என சேவையை ஆங்கில அலைவரிசகளுக்கு நிகராக உயர் வரைவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முதன் முறையாக உயர் வரைவுச் சேவை மூலம் வழங்கியது சன் டைரக்ட் நிறுவனமாகும், இதற்காக சோனி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. [6]

சந்தாதாரர்கள்

[தொகு]

2012 மார்ச் மாத நிலவரத்தின்படி,சுமார் 7.5 மில்லியன் வாடிக்கையாளர்கள் சன் டைரக்டை பயன்படுத்தி வருகின்றனர்.[9] 2012, பிப்ரவரி வரையில், இந்தியாவில் சுமார் 30 மில்லியன் டி. டீ. எச். வாடிக்கையாளர்கள் உள்ளனர்.[10]

அலைவரிசைகள்

[தொகு]

இந்த அட்டவணை 2012 மார்ச், சன் டைரக்டால் வழங்கப்பட்டது ஆகும்.[11]

அலைவரிசை பெயர்
சன் டைரக்ட் உதவி அலைவரிசை
001 தகவல் அலைவரிசை
தமிழ்
100 சன் தொலைக்காட்சி
102 கே தொலைக்காட்சி
104 சன் மியூசிக்
106 ஆதித்யா தொலைக்காட்சி
108 தமிழ் சினிமா க்ளப்
109 சன் ஆக்சன்
110 சுட்டி தொலைக்காட்சி
111 சன் லைப்
112 சன் செய்திகள்
114 செய்திகள்
116 கலைஞர் தொலைக்காட்சி
118 ஜெயா தொலைக்காட்சி
120 ஜெயா ப்ளஸ்
121 ஜீ தமிழ்
122 பொதிகை தொலைக்காட்சி
124 ராஜ் தொலைக்காட்சி
126 மக்கள் தொலைக்காட்சி
128 மெகா தொலைக்காட்சி
130 ஸ்டார் விஜய்
132 வசந்த் தொலைக்காட்சி
133 புதிய தலைமுறை
134 கேப்டன் தொலைக்காட்சி
தெலுங்கு
150 ஜெமினி தொலைக்காட்சி
152 ஜெமினி மூவீஸ்
154 ஜெமினி மியூசிக்
156 ஜெமினி காமெடி
158 தெலுங்கு சினிமா க்ளப்
159 ஜெமினி ஆக்சன்
160 குஷி தொலைக்காட்சி
161 ஜெமினி லைப்
162 ஜெமினி செய்திகள்
166 இ தொலைக்காட்சி தெலுங்கு
168 மா தொலைக்காட்சி
170 ஜீ தெலுங்கு
172 விஸ்ஸா
176 இ தொலைக்காட்சி 2
178 தொலைக்காட்சி 9 தெலுங்கு
182 என் தொலைக்காட்சி
184 பக்தி தொலைக்காட்சி
186 சாக்சி தொலைக்காட்சி
188 ஏபிஎன் ஆந்த்ர ஜோதி
190 டிடி சப்தகிரி
மலையாளம்
200 சூர்யா தொலைக்காட்சி
202 கிரண் தொலைக்காட்சி
204 மலையாளம் சினிமா க்ளப்
205 சூர்யா ஆக்சன்
206 கொச்சு தொலைக்காட்சி
208 ஏசியாநெட்
210 ஏசியா நெட் ப்ளஸ்
212 கைராலி
214 கைராலி வெ
215 மழவில் மனொரமா
216 அம்ரிதா
220 ஜெய்ஹிந்த்
218 டிடி மலையாளம்
222 ஏசியா நெட் செய்திகள்
224 மனொரமா செய்திகள்
226 இந்தியா விசன்
228 ஜீவன் தொலைக்காட்சி
230 ரிப்போர்ட்டர்
கன்னடம்
250 உதயா தொலைக்காட்சி
252 உதயா மூவீஸ்
254 உதயா மியூசிக்
256 உதயா காமெடி
258 கன்னடா சினிமா க்ளப்
259 சூரியன் தொலைக்காட்சி
260 சின்டு தொலைக்காட்சி
262 உதயா செய்திகள்
264 இ தொலைக்காட்சி கன்னடா
266 சீ கன்னடா
268 கஸ்தூரி தொலைக்காட்சி
270 ஏசியாநெட் சுவர்னா
272 டிடி சந்தனா
274 தொலைக்காட்சி 9 கன்னடா
276 சுவர்னா செய்திகள்
இந்தி பொழுதுபோக்கு
302 டிடி நேசனல்
304 கலர்ஸ்
306 ஸ்டார் ப்ளஸ்
308 சீ தொலைக்காட்சி
310 சோனி
312 சஹாரா
316 இமேஜின் தொலைக்காட்சி
318 லைப் ஓகே
320 சேப் தொலைக்காட்சி
322 ஸ்டார் உத்ஸவ்
324 ஜூம்
326 டிடி பாரதி
இந்தி திரைப்படங்கள்
330 செட் மேக்ஸ்
332 ஸ்டார் கோல்ட்
334 சஹாரா பிலிமி
335 யூதொலைக்காட்சி ஆக்சன்
336 ஜீ சினிமா
338 யூ தொலைக்காட்சி மூவீஸ்
ஆங்கிலத் திரைப்படங்கள்
402 ஹெச்பிஓ
404 ஸ்டார் மூவீஸ்
406 டபிள்யூபி
408 பிக்ஸ்
410 ஜீ ஸ்டுடியோ
ஆங்கிலப் பொழுதுபோக்கு
452 ஏ. எக்ஸ். என்.
454 ஸ்டார் வோர்ல்டு
456 எப். எக்ஸ்
458 பாக்ஸ் கிரைம்
460 ஜீ கபே
462 பேஷன் தொலைக்காட்சி(இந்தியா)
விளையாட்டுக்கள்
500 ஈஎஸ்பிஎன்
502 ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
506 டென் ஸ்போர்ட்ஸ்
508 ஸ்டார் கிரிக்கெட்
510 டிடி ஸ்போர்ட்ஸ்
512 டென் ஆக்சன்+
514 நியோ கிரிக்கெட்
குழந்தைகளுக்கான சேவை
522 டிஸ்னி அலைவரிசை
524 போகோ
528 கார்ட்டூன் நெட்வொர்க்
530 நிக்
532 ஹங்கமா
534 டிஸ்னி எக்ஸ். டி.
536 பேபி தொலைக்காட்சி
தகவல் மற்றும் பொழுதுபோக்கு
540 டிஸ்கவரி அலைவரிசை
542 நேசனல் ஜியோகிரபிக் அலைவரிசை
544 அனிமல் ப்ளேனட்
546 நேட் ஜியோ வைல்ட்
547 பாக்ஸ் ஹிஸ்டரி
548 டிடி க்யான் தர்ஷன் 1
செய்திகள்
550 டிடி செய்திகள்
552 டைம்ஸ் நௌ
554 சி. என். என். ஐ. பி. என்.
556 என். டி. டி. வி.
558 சி. என். பி. சி. டிவி. 18
562 என். டி. டி. வி. ப்ரொஃபிட்
566 சி. என். என்.
568 பி. பி. சி. வேர்ல்டு
570 என். டி. டி. வி. இந்தியா
571 ஸ்டார் செய்திகள்
572 ஆஜ் டக்
574 ஐ. பி. என். லோக்மத்
576 சி. என். பி. சி. ஆவாஸ்
578 லோக் சபா
580 ராஜ்ய சபா
582 பி. டி. சி. நியூஸ்
584 நியூஸ் லைவ்
586 இந்தியா தொலைக்காட்சி
588 என் டி டிவி ஹிந்து
இசை
600 அலைவரிசை [வி]
602 வி. எச். 1
604 எம். டி. வி.
606 எம். எச். 1
608 9 எக்ஸ். எம்.
வட்டார அலைவரிசைகள்
620 டிடி பங்க்ளா
621 ஜீ பங்க்ளா
622 இ டிவி பங்க்ளா
623 ஸ்டார் ஜல்சா
625 ஸ்டார் ஆனந்தா
626 ஆகாஷ் பங்க்ளா
627 சங்கீத் பங்க்ளா
629 இ டிவி ஒரியா
630 டிடி ஒரியா
634 ஒரிசா தொலைக்காட்சி
638 இ டிவி ராஜஸ்தான்
640 டிடி உருது
642 இ டிவி உருது
650 டிடி சஹ்யாத்ரி
652 இ டிவி மராத்தி
655 ஜீ மராத்தி
656 மி மராத்தி
657 ஜீ டாக்கீஸ்
658 ஸ்டார் மஜா
660 டிடி கிர்னார்
661 இ டிவி குஜராத்தி
662 டிவி 9 குஜராத்தி
666 பிடிசி பஞ்சாபி
668 பிடிசி செய்திகள்
669 இடிசி பஞ்சாபி
670 டிடி பஞ்சாபி
675 மஹுவா தொலைக்காட்சி
680 டிடி காஷிர்
691 டிடி நார்த் - ஈஸ்ட்
693 நேபால் 1
ஆன்மீகம்
700 ஆஸ்தா
34 சாத்னா தொலைக்காட்சி
702 எஸ்விபிசி
706 ஷலோம் தொலைக்காட்சி
708 சன்ஸ்கார்
710 காட் தொலைக்காட்சி
சர்வதேசம்
755 ஆர் டி (ரஷ்யா இன்று)
உரை வரையறுத்தல்
958 ஐபிஎல் மேக்ஸ் உரை வரையறுத்தல்
960 சன் தொலைக்காட்சி உரை வரையறுத்தல்
961 கே தொலைக்காட்சி உரை வரையறுத்தல்
962 சன் மியூசிக் உரை வரையறுத்தல்
964 டிஸ்கவரி உரை வரையறுத்தல் வோர்ல்ட்
966 நேஷனல் ஜியோகிரபிக் உரை வரையறுத்தல்
968 மூவீஸ் நெள உரை வரையறுத்தல்
970 ஜெமினி தொலைக்காட்சி உரை வரையறுத்தல்
978 டிடி உரை வரையறுத்தல்

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Insat 4B at 93.5°E. LyngSat. Retrieved on 2012-01-17.
  2. 2.0 2.1 Sun Direct on Measat 3 at 91.5°E. LyngSat. பார்த்த நாள், 2012-01-17.
  3. Sun, Astro deny media reports of impropriety in deal. The Economic Times. February 16, 2011
  4. PIL plea against Sun DTH services பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம். Hindu.com. Retrieved on 2012-01-17.
  5. Lack of transponders hits DTH expansioN. Rediff.com. Retrieved on 2012-01-17.
  6. 6.0 6.1 Business : Sun Direct launches HD services பரணிடப்பட்டது 2009-04-12 at the வந்தவழி இயந்திரம். The Hindu (2009-04-09). Retrieved on 2012-01-17.
  7. INSAT-4B Spacecraft Affected by Power Problem. isro.org
  8. Power problem with Insat-4B. Sify.com (2010-08-12). பார்த்த நாள், 2012-01-17.
  9. SUN DIRECT CROSSES 7.5 MILLION SUBSCRIBERS பரணிடப்பட்டது 2014-11-04 at the வந்தவழி இயந்திரம்.
  10. Dish TV India passes 10mn DTH subscriber milestone | செய்தி. ரேபிட் செய்திகள் (2011-02-27). பார்த்த நாள், 2012-01-17.
  11. Sun Direct on Measat 3 at 91.5°E and Sun Direct HD on Insat 4B at 93.5°E | Indian DTH Wiki பரணிடப்பட்டது 2018-12-24 at the வந்தவழி இயந்திரம். Wiki.indiandth.com. Retrieved on 2012-01-17.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_டைரக்ட்&oldid=3336996" இலிருந்து மீள்விக்கப்பட்டது