சன் மியூசிக்கு
சன் மியூசிக்கு | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 5 செப்டம்பர் 2004 |
வலையமைப்பு | சன் டிவி நெட்வொர்க் |
உரிமையாளர் | சன் குழுமம் |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | உலகளவில் (இந்தியா மலேசியா துபாய் சிங்கப்பூர் இலங்கை) |
தலைமையகம் | சென்னை தமிழ்நாடு |
துணை அலைவரிசை(கள்) | சன் தொலைக்காட்சி கே தொலைக்காட்சி சன் செய்திகள் சுட்டி தொலைக்காட்சி ஆதித்யா தொலைக்காட்சி சன் லைப் தொலைக்காட்சி |
வலைத்தளம் | சன் மியூசிக் |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டாட்டா ஸ்கை (இந்தியா) | அலைவரிசை 1512(SD) |
டிஷ் டிவி (இந்தியா) | அலைவரிசை 908 (SD) |
வீடியோகான் டி2எச் (இந்தியா) |
அலைவரிசை 805 (SD) அலைவரிசை 798 (HD) |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | அலைவரிசை 505 (SD) |
ரிலையன்சு டிஜிட்டல் டிவி (இந்தியா) | அலைவரிசை 825 (SD) |
சன் டைரக்ட் (இந்தியா) |
அலைவரிசை 63 (SD) அலைவரிசை 962 (HD) |
ஆஸ்ட்ரோ (மலேசியா) |
அலைவரிசை 212 (SD) |
சன் மியூசிக்கு என்பது சன் குழுமத்தின் துணை நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்கிற்கு சொந்தமான தமிழ் மொழி இசை கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை செப்டம்பர் 5, 2004 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை டிசம்பர் 11, 2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.[1]
நிகழ்ச்சிகள்
[தொகு]இந்த தொலைக்காட்சியில் காதலுக்கு மரியாதை, பிறந்தநாள் வாழ்த்து, உங்களுடன் சன் மியூசிக், மசாலா மெயில், ட்ரிங் ட்ரிங், அன்பே அன்பே, நீங்களும் நாங்களும், காலைத் தென்றல், வாழ்த்தலாம் வாங்க, பாட்டு புதுசு, சூப்பர் ஹிட்ஸ், தேன் மழை, ஹாய் குட்டீஸ், சிரி சிரி, நினைத்தாலே இனிக்கும், டிராபிக் ஜாம், லேடிஸ் சாய்ஸ், டியர் சன் மியூசிக் போன்ற பல இசை சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறது.
வட போச்சே!
[தொகு]சன் மியூசிக் சேனலில் வரும் ஜனரஞ்சக நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஒன்று வட போச்சே! பல சூழல்களில் மக்கள் எவ்வாறு செயல்படும் என்பதை வரையறுத்து காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி சித்தரிக்கப்படும் நேரத்தில் மனவேதனையும், விஷயம் தெரிந்த பிறகு ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் வகையிலானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sun Music HD". www.bseindia.com.