கலாநிதி மாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கலாநிதி மாறன் (பி. 1964) சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 349ஆம் பெரும் பணக்காரர் ஆவார்.

இவரின் தந்தையார் முரசொலி மாறன் தமிழகத்தில் அரசியல்வாதியாக பணியாற்றினார். தம்பி தயாநிதியும் முன்னாள் மத்திய ஜவுளிதுறை அமைச்சராவார்.

கல்வி[தொகு]

சென்னை லயோலா கல்லூரியில் பி.காம். அமெரிக்காவில் எம்.பி.ஏ.(1996)

தொழில்[தொகு]

படிப்பு முடிந்ததும் குங்குமம் இதழுக்குப் பொறுப்பு ஏற்றார். அச்சிட்டு வினியோகிக்கப்படும் இதழ்களுக்கு மாற்றாக, 'காணொலி இதழ்' ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார். இப் பரிசோதனையின் விளைவாகப் பிறந்ததுதான் 'பூமாலை வீடியோ இதழ்' இப் புதுமை முயற்சி தந்த அனுபவமே செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆரம்பிக்கத் தூண்டியது. 1993ஆம் ஆண்டில் சன் டிவி பிறந்தது. தமிழில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக, கன்னடத்தில் 'உதயா', தெலுங்கில் 'ஜெமினி', மலையாளத்தில் 'சூர்யா', அலைவரிசைகளை உள்ளடக்கிய 'சன் நெட்வொர்க்' என்ற குழுமத்தை நிறுவினர். உலகம் முழுவதும் பார்க்க முடிந்த முதல் இந்திய அலைவரிசை என்ற பெருமை சன் டிவிக்கு உண்டு. [1]

  1. தினமணி தீபாவளி மலர்,1999, பக்கம்127
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாநிதி_மாறன்&oldid=2211243" இருந்து மீள்விக்கப்பட்டது