உள்ளடக்கத்துக்குச் செல்

முரசொலி மாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முரசொலி மாறன்
Murasoli Maran
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
பதவியில்
2 திசம்பர் 1989 – 10 நவம்பர 1990
பிரதமர்வி. பி. சிங்
வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்
பதவியில்
1999–2002
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
பதவியில்
1 சூன் 1996 – 19 மார்ச் 1998
பிரதமர்தேவ கௌடா
ஐ. கே. குஜரால்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–2003
முன்னையவர்இரா. அன்பரசு
பின்னவர்தயாநிதி மாறன்
தொகுதிமத்திய சென்னை
பதவியில்
1967–1977
முன்னையவர்கா. ந. அண்ணாதுரை
பின்னவர்ரா. வெங்கட்ராமன்
தொகுதிதென் சென்னை
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1977–1995
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தியாகராஜசுந்தரம்

(1934-08-17)17 ஆகத்து 1934
திருக்குவளை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு23 நவம்பர் 2003(2003-11-23) (அகவை 69) [1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்மல்லிகா மாறன்
உறவுகள்மு. கருணாநிதி (தாய் மாமன்)
பிள்ளைகள்கலாநிதி மாறன்
தயாநிதி மாறன்
அன்புக்கரசி
பெற்றோர்தந்தை : சண்முகசுந்தரம்
தாயாா் : சண்முகசுந்தரி
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு, இந்தியா
As of 23 நவம்பர், 2003
மூலம்: [1]

முரசொலி மாறன் (Murasoli Maran, ஆகஸ்ட் 17, 1934-நவம்பர் 23, 2003)[2][3] தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]
  • முரசொலி மாறன் தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில்) உள்ள திருக்குவளையில் 17 ஆகத்து 1934 ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் - சண்முகசுந்தரி இணையாருக்கு முதல் மகனாக பிறந்தார். இவர் தந்தை சண்முகசுந்தரம் திருவாரூரில் குடி கொண்டு இருக்கும் இறைவன் சிவபெருமாளின் திருப்பெயரான தியாகராஜ பெருமாளின் மேல் உள்ள பக்தியால் தியாகராஜ என்ற பெயருடன் தனது பெயரில் உள்ள சுந்தரம் என்பதை சேர்த்து மகனுக்கு தியாகராஜசுந்தரம் என்று அவர் தந்தை பெயரிட்டார். இவர் தாயாரான சண்முகசுந்தரி திமுக தலைவரான மு. கருணாநிதியின் இரண்டாவது அக்கா ஆவார்.
  • இவர் தாய்மாமாவான கருணாநிதி அவர்கள் தனது ஆரம்பகால அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக கையெழுத்து பத்திரிக்கையை நடத்தி வந்த போது அவரிடம் உள்ள அனைத்து விதமான புத்தகங்களையும் குறிப்பாக அரசியல் சார்ந்த புத்தகங்களை மிகவும் கவனத்துடன் படித்து தனது மாமாவான கருணாநிதியிடமே பல சுவையான ஆலோசனை விவாதங்கள் செய்துள்ளார்.
  • அன்றைய அண்டை நாடுகளில் அரசியல் சம்பந்தபட்ட நூல்களை படித்து மாநில சுயாட்சி என்ற தனது அரசியல் அனுபவம் வாய்ந்த புத்தகத்தை படைத்துள்ளார். பின்பு கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலி என்ற தனது சொந்த பத்திரிக்கை நடத்தி வந்த போது அதில் மேலாளாராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி வந்த போது தனது பெயரை மாறன் என்று புனைபெயராக மாற்றி வைத்து கொண்டார்.
  • மேலும் அதே காலத்தில் திரைப்படங்களிலும் கதை-வசனகர்த்தாவாக பணியாற்றும் போது தனது பெயரை மாறன் என்று பதிவு செய்ய ஏற்கனவே திரையுலகில் மாறன் என்ற பெயரில் இரண்டு பேர் கதை-வசனகர்த்தாவாக இருந்ததால்.
  • இவர் தான் கதை-வசனம் எழுதிய முதல் திரைப்படமான குலதெய்வம் படத்தின் தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பச் செட்டியார். அவர்கள் இவருக்கு மாறன் என்ற பெயருடன் சேர்த்து அவர் மாமா கருணாநிதி நடத்தி வந்த பத்திரிக்கையின் பெயரான முரசொலி என்பதை அடையாளமாக சேர்த்து முரசொலி மாறன் என்று பெயர் வைத்தார்.
  • மேலும் தனது மாமா கருணாநிதி அவர்களை போல் திரைப்படத்துறையிலும் கதை-வசனம்-இயக்கம் என்று திரைப்படம் சம்பந்தபட்ட பல தொழில் பரிமானங்களிலும் நுட்பமாக பணியாற்றி திரையுலகிலும் சாதனை படைத்தார். இவரின் இரண்டு மகன்களில் ஒருவர், தயாநிதி மாறன், ஜவுளித் துறையின் நடுவண் அமைச்சராக இருந்தவர். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். மூத்தவர் கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

நூல்கள்

[தொகு]

முரசொலி மாறன் அரசியல், இலக்கியம் தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.

  1. அபாய விளக்கு
  2. ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்? 1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி.
  3. நாளை நமதே
  4. திராவிட இயக்க வரலாறு
  5. மாநில சுயாட்சி
  6. வால் நட்சத்திரம், 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, திருச்சி.

திரையுலகில்

[தொகு]

முரசொலி மாறன் சில திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதுபவராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுதிய திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

இயக்கிய திரைப்படங்கள்

இறப்பு

[தொகு]

இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 2003 நவம்பர் 23, அன்று தன்னுடைய 69வது வயதில் இறந்தார். இவர் இறப்பதற்கு முன் பல வாரங்களாக கோமாவில் இருந்தார். பிரதம மந்திரி வாஜ்பாய் மற்றும் பல அரசியல் தலைவர்கள் சென்னையில் நடந்த இவரது இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019.
  2. https://m.rediff.com/money/2003/nov/23maran.htm
  3. https://timesofindia.indiatimes.com/india/Murasoli-Maran-passes-away/articleshow/297667.cms
  4. 12-6-1959ஆம் நாளிட்ட தென்னகம் இதழின் 8ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள விளம்பரம்
  5. 12-4-1959ஆம் நாளிட்ட திராவிடநாடு இதழின் 16ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள விளம்பரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரசொலி_மாறன்&oldid=4081453" இலிருந்து மீள்விக்கப்பட்டது