உள்ளடக்கத்துக்குச் செல்

குலதெய்வம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலதெய்வம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஎச். கே. பிக்சர்ஸ்
கதைமுரசொலி மாறன்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஎஸ். வி. சகஸ்கரநாமம்,
எம்.ஆர். சந்தானலட்சுமி,
பண்டரிபாய்,
எஸ். எஸ். ராஜேந்திரன்,
சி ஆர். விஜயகுமாரி,
எம். என். ராஜம்,
ஜே. பி. சந்திரபாபு,
மைனாவதி,
குலதெய்வம் ராஜகோபால்
எம். கே. முஸ்தபா
கலையகம்ஏவிஎம் ஸ்டுடியோஸ்
வெளியீடுசெப்டம்பர் 29, 1956
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குலதெய்வம், 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கிருஷ்ணன்-பஞ்சுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்கரநாமமும் பண்டரிபாயும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். ஆர். சந்தானலட்சுமி, எம். என். ராஜம், எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, குலதெய்வம் ராஜகோபால் ஆகியோரும் இதில் நடித்தனர். இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த நகைச்சுவை நடிகர் ராஜகோபாலன், குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்பட்டார்.[1] இத்திரைப்படம் 1956 ஆம் ஆண்டிற்கானச் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதுக்குரிய தகுதிச் சான்றிதழ் பெற்றது[2]. ஏவி மெய்யப்பனால் இத்திரைப்படம் இந்தியில் பாபி என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.


""சின்னக் கலைவாணர் ""என்று ,1960.ஆம்.வருடம், கலைவாணர் N.S.கிருஷ்ணன் மனைவியார், T.A.மதுரம் அவர்களால் பட்டம் பெற்றவர், அமரர்.உயர்திரு. குலதெய்வம் V.R.ராஜகோபால் அவர்கள்.உடனிருந்த சாட்சி :அமரர்.திரு.""கல்கண்டு"" பத்திரிக்கை ஆசிரியர்.தமிழ்வாணன் அவர்கள்.இடம் :மதுரை மாணவர் சங்கம்.தமுக்கம் மைதானம்.


கதைக்கான பின்னணி

[தொகு]

1856 ஆம் ஆண்டே இந்து விதவைகள் மறுமணச் சட்டம் அமுலுக்கு வந்திருந்தாலும் சமுதாயரீதியாக இந்து விதவைகளின் மறுமணம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், இக்கருத்தை ஆதரித்தவர்களும் செயல்படுத்தியவர்களும் சமுதாயத்தில் கடுமையாகச் சாடப்பட்டனர். ஆனால் இந்தப் பிரச்சனை திரைப்படங்களுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது. பல திரைப்படங்கள் வெவ்வேறு பல மொழிகளில் இக்கருத்தை மையமாகக் கொண்டு வெளிவந்தன. இத்திரைப்படத்தின் கதை, எழுத்தாளர் பிரபாவதி தேவி சரஸ்வதி எழுதிய வங்காளக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் முரசொலி மாறன். இக்கதை கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும் விதவை மறுமணக் கருத்தையும் கொண்டுள்ளது.

கதைச் சுருக்கம்

[தொகு]

தனது தந்தையின் மரணப்படுக்கையில் தனது சகோதர சகோதரியரைப் பார்த்துக் கொள்வதாகத் தான் செய்து கொடுத்த சத்தியத்தினைக் காப்பாற்ற பாடுபடும் மூத்த மகனாக சகஸ்கரநாமமும் அவரது மனைவியாக பண்டரிபாயும் நடித்துள்ளனர். கால்நடையாக துணி வியாபாரம் செய்யும் சகஸ்கரநாமம் தனது உழைப்பால் சொந்த ஊரிலேயே ஒரு சொந்தமாக ஒரு துணிக் கடை தொடங்கும் அளவுக்கு முன்னேற்றம் காண்கிறார். தனது மூன்று சகோதரர்களையும் வளர்த்து ஆளாக்கி திருமணமும் செய்து வைத்த பின் அவர்களது மனைவியரால் குடும்பத்தில் ஏற்படும் தகராறுகளை அவரும் அவர் மனைவியுமாகச் சமாளித்துக் குடும்பத்தை மீண்டும் ஒன்றுபடுத்துகிறார்கள். பால்ய விவாகத்தில் விதவையானத் தனது இளைய சகோதரிக்கு (மைனாவதி) மறுமணம் செய்து வைக்கிறார். சமுதாய முக்கியத்துவம் கொண்ட இத்திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படம் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கே. பி. காமாட்சி, ஆதமநாதன் ஆகியோர் எழுதிய பாடல்களையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ராண்டார் கை (4 டிசம்பர் 2010). "Blast from the past: Kula Deivam 1956". தி இந்து (சென்னை). http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-kula-deivam-1956/article931300.ece. பார்த்த நாள்: 27 டிசம்பர் 2018. 
  2. "4th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலதெய்வம்_(திரைப்படம்)&oldid=3795091" இலிருந்து மீள்விக்கப்பட்டது