பராசக்தி (திரைப்படம்)
பராசக்தி | |
---|---|
![]() | |
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | பி. ஏ. பெருமாள் முதலியார்[1] |
திரைக்கதை | மு. கருணாநிதி |
வசனம் | மு. கருணாநிதி |
இசை | ஆர். சுதர்சனம் பின்னணி இசை: சரசுவதி ஸ்டோர்சு இசைக்குழு |
நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். வி. சகஸ்ரநாமம் எஸ். எஸ். ராஜேந்திரன் ஸ்ரீரஞ்சனி பண்டரிபாய் வி. கே. ராமசாமி |
ஒளிப்பதிவு | எஸ். மாருதி ராவ் |
படத்தொகுப்பு | பாஞ்சபி |
கலையகம் | ஏவிஎம், நேஷனல் பிக்சர்ஸ் |
விநியோகம் | நேஷனல் பிக்சர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 17, 1952 |
ஓட்டம் | 188 நிமி.[2] |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
பராசக்தி (Parasakthi) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத,[3] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.[4] பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்பன் மற்றும் பி. எ. பெருமாள் அவர்கள்.[5]
திரைக்கதை சுருக்கம்[தொகு]
தாயை இழந்து தந்தையுடன் மதுரையில் வாழ்ந்து வரும் கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள். அண்ணன்கள் அனைவரும் பர்மா எனப்பட்ட மியான்மரில் வணிகம் செய்து வந்தனர். 1940களில் மூண்ட உலகப் போர் சூழலில் தங்கைக்கு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. போரினால், கதையின் நாயகனான கல்யாணியின் கடைசி அண்ணன் குணசேகரனுக்கு மட்டும் கப்பலில் பயணச்சீட்டு கிடைக்கப்பெற்று, அன்றைய மதராசான சென்னைக்கு வருகிறான். சென்னையில் தான் கொண்டு வந்த அனைத்தும் ஒரு வஞ்சகியின் சூழ்ச்சியினால் இழந்து, மதுரைக்கும் செல்ல வழியின்றி, பசியினால் சமூக அவலங்களைச் சந்திக்கிறான். இவ்வேளையில் கல்யாணம் நிறைவுற்று, பின் மகிழ்வாய் குழந்தை பெற்ற அன்றே விபத்தால் கணவனும் பாலகன் பிறந்த நன்நிகழ்வைக் கூற வந்தபோது விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, கடன் பொருட்டு வீடும் இழந்து, கைம்பெண்கள் சந்தித்தத் துயரத்தை கல்யாணி எதிர்கொள்கிறாள். பின் என்ன நிகழ்கிறது என்பது மீதி கதை.
வகை[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ டி. எம். எஸ். - ஒரு பண்-பாட்டுச் சரித்திரம், வாமனன்
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 327.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- ↑ ராண்டார் கை (24 ஏப்ரல் 2011). "Parasakthi 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/parasakthi-1952/article1762264.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016.
- ↑ https://cinema.dinamalar.com/tamil-news/84607/cinema/Kollywood/Marakka-mudiyuma-:-Parasakthi-movie.htm
வெளியிணைப்புகள்[தொகு]
- 1952 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கறுப்புவெள்ளைத் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் திரைப்படங்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்
- மியன்மார் தமிழரைச் சித்தரிக்கும் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய திரைப்படங்கள்