உள்ளடக்கத்துக்குச் செல்

இதய வீணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதய வீணை
இதய வீணை
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புமணியன்
உதயம் புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்[1]
நடிப்புஎம். ஜி. ஆர்
மஞ்சுளா
லட்சுமி
எம். என். நம்பியார்
வெளியீடுஅக்டோபர் 20, 1972
நீளம்4670 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதய வீணை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா, லட்சுமி, எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 1972 அக்டோபர் 20 அன்று வெளியானது.

கதைச்சுருக்கம்

[தொகு]

சென்னையில் சிறுவயதில் தீநட்பால் கெட்ட பழக்கங்களை பழகும் சுந்தரத்தை அவனது தந்தை வழக்கறிஞர் சிவராமன் கண்டிக்கிறார். ஒரு கட்டத்தில் சுந்தரத்தை அவனது தந்தை வீட்டை துரத்திவிடுகிறார். பல ஆண்டுகள் கடந்த நிலையில் சுந்தரம் தற்போது காஷ்மீரில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கிறார். காசுமீருக்கு சுற்றுலா வரும் மாணவர் குழுவில் தன் தங்கை நளினியை அடையாளம் கண்டு கொள்கிறான். பிறகு தன் குடும்பத்தைக் காண்பதற்கு தமிழ்நாடு வருகிறான். தான் யார் என்று காட்டிக் கொள்ளாமல் தன் பொற்றோரை சந்திக்கிறான். தன் தங்கையின் காதலனுடன் அவளுக்கு திருமணம் நடக்க உதவுகிறான். இறுதியில் தன் குடும்பத்துடன் சுந்தரம் எப்படி இனைகிறான் என்பதே கதை முடிவாகும்.

நடிப்பு

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார்.[2] படத்தில் இடம்பெற்ற "காஷ்மீர் பியூட்டிஃபுல்" பாடல் பிரபலமடைந்தது.[3] இறுதிகட்ட சண்டைக்காட்சி வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக பின்னணி இசையாக வீணையை சங்கர் கணேஷ் பயன்படுத்தினார். இந்த பின்னணி இசைக்கு 30 வீணைகள் பயன்படுத்தப்பட்டன.[4] வீணை வாசிக்க ராகவனை முதலில் அணுகினர், ஆனால் திட்டமிடல் முரண்பாடுகள் காரணமாக அவர் மறுத்துவிட்டனர்; அதற்கு பதிலாக அவரது மகன் ஆர். பார்த்தசாரதி ஒப்பந்தமானார்.[5]

பாடல் பாடகர் வரிகள் நீளம்
"ஆனந்தம் இன்று ஆரம்பம்" டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி வாலி 03:28
"காஷ்மீர் பியூட்டிபுள்" டி. எம். சௌந்தரராஜன் 07:28
"நீராடும்" பி. சுசீலா 03:29
"ஒரு வாலும் இல்லை" டி. எம். சௌந்தரராஜன் 03:38
"பொன் அந்தி" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா புலமைப்பித்தன் 05:49
"திருநிறை செல்வி" டி. எம். சௌந்தரராஜன் வாலி 04:14

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

இதய வீணை 1972 அக்டோபர் 20 அன்று வெளியானது. இது ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு வெளியான முதல் படமாகும்.[6] கல்கியின் காந்தன் ராமச்சந்திரன், லட்சுமி, சிவகுமார் ஆகியோரின் நடிப்பைப் பாராட்டினார், அதே நேரத்தில் கிருஷ்ணன்-பஞ்சுவின் இயக்கம், சொர்ணத்தின் உரையாடல், சண்முகத்தின் ஒளிப்பதிவு ஆகியவற்றையும் பாராட்டினார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "வாய்ப்பு தராத தயாரிப்பாளர்... எம்.ஜி.ஆர் செய்த யுக்தி : சங்கர் - கணேஷ் இசை பிரபலமானது இப்படித்தான்!". இண்டியன் எக்சுபிரசு தமிழ். https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-classic-history-about-mgr-shankar-ganesh-movies-2056806. பார்த்த நாள்: 19 September 2025. 
  2. "Idhaya Veenai (1972)". Raaga.com. Archived from the original on 20 June 2014. Retrieved 9 June 2014.
  3. "Crooning TMS' Kashmir". பிசினஸ் லைன். 10 August 2016 இம் மூலத்தில் இருந்து 26 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220726084211/https://www.thehindubusinessline.com/news/national/crooning-tms-kashmir/article64317475.ece. 
  4. சுந்தரம், கே. (17 November 1974). "சண்டையில் முழங்கிய வீணைகள்". ஆனந்த விகடன். pp. 157–160.
  5. "'My Heart is in Film Music'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 9 December 2014 இம் மூலத்தில் இருந்து 26 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220726084231/https://www.newindianexpress.com/cities/chennai/2014/dec/09/My-Heart-is-in-Film-Music-691994.html. 
  6. Sri Kantha, Sachi (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 31 October 2020. Retrieved 4 April 2021.
  7. காந்தன் (29 October 1972). "இதய வீணை". Kalki. p. 31. Archived from the original on 6 April 2024. Retrieved 6 April 2024 – via இணைய ஆவணகம்.

வெளி இணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் இதய வீணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_வீணை&oldid=4353514" இலிருந்து மீள்விக்கப்பட்டது