உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணன்-பஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரா. கிருஷ்ணன்
பிறப்பு(1909-07-18)18 சூலை 1909
மதராசு (தற்போதைய சென்னை), மதராசு மாகாணம்
இறப்பு17 சூலை 1997(1997-07-17) (அகவை 87)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
பணிபடத்தொகுப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1944-1997
பிள்ளைகள்கஸ்தூரி, லலிதா, சந்திரமோகன், முரளி, மதுரம், மனோகர், உளாஸ், சிவாஜி, பராசக்தி, கே. சுபாஷ்
சா. பஞ்சு
பிறப்பு(1915-01-24)24 சனவரி 1915
உமையாள்புரம், கும்பகோணம், தமிழ்நாடு
இறப்பு6 ஏப்ரல் 1984(1984-04-06) (அகவை 69)
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
மற்ற பெயர்கள்பஞ்சாபி
பணிபடத்தொகுப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1944–1984

கிருஷ்ணன்-பஞ்சு ஓர் இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்கள் ஆவர். ரா. கிருஷ்ணன் (1909–1997) மற்றும் சா. பஞ்சு (1915–1984) ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ணன்-பஞ்சு என்ற பெயரில் 50இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியிருந்தனர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

ரா. கிருஷ்ணன் 1909 சூலை 18 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார்.[2] தொடக்கத்தில், கோவையில் செயல்பட்டு வந்த பக்சிராஜா ஸ்டுடியோவில் (அப்போதைய கந்தன் ஸ்டுடியோ) பணியாற்றினார்.[3]

சா. பஞ்சு 1915 சனவரி 24 அன்று தமிழ்நாட்டின் கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரத்தில் பிறந்தார்.[2] தொடக்கத்தில் பி. கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும், எல்லிஸ் ஆர். டங்கனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.[3][4][5]

மறைவு

[தொகு]

1984 ஏப்ரல் 6 அன்று சா. பஞ்சு தனது 69 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[6] பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காதிருந்த ரா. கிருஷ்ணன், 1997 சூலை 17 அன்று தனது 87 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[1]

இயக்கிய திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி தயாரிப்பு குறிப்புகள்
1944 பூம்பாவை தமிழ் லியோ பிக்சர்சு
1947 பங்கஜவல்லி தமிழ் தமிழ்நாடு டாக்கீஸ்
1947 பைத்தியக்காரன் தமிழ் என். எசு. கே. பிக்சர்சு எம். ஜி. இராமச்சந்திரன் துணை வேடத்தில் நடித்த திரைப்படம்
1949 ரத்தினகுமார் தமிழ் முருகன் டாக்கீஸ்
1949 நல்ல தம்பி தமிழ் என்.எசு.கே. பிலிம்சு, உமா பிக்சர்சு கா. ந. அண்ணாதுரை திரைக்கதை ஆசிரியராக அறிமுகமான திரைப்படம்
1952 பராசக்தி தமிழ் நேசனல் பிக்சர்சு சிவாஜி கணேசன் அறிமுகமான திரைப்படம்
1953 கண்கள் தமிழ் மோசன் பிக்சர்சு குழு
1954 ரத்தக்கண்ணீர் தமிழ் நேசனல் பிக்சர்சு
1955 சந்தா சகு கன்னடம்
1956 குலதெய்வம் தமிழ்
1957 புதையல் தமிழ் கமல் சகோதரர்கள்
1957 பாபி இந்தி ஏவிஎம் தயாரிப்பகம் குலதெய்வம் தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கம்
1958 மாமியார் மெச்சின மருமகள் தமிழ்
1959 பர்க்கா இந்தி ஏவிஎம் தயாரிப்பகம்
1960 திலகம் மலையாளம்
1960 தெய்வப்பிறவி தமிழ்
1960 பிந்த்யா இந்தி தெய்வப்பிறவி தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கம்
1961 சுகா சிந்தூர் இந்தி
1962 சாதி இந்தி
1962 மேன் மௌஜி இந்தி ஏவிஎம் தயாரிப்பகம்
1963 குங்குமம் தமிழ் ராசாமணி பிக்சர்சு
1964 வாழ்க்கை வாழ்வதற்கே தமிழ் கமல் சகோதரர்கள்
1964 சர்வர் சுந்தரம் தமிழ் ஏவிஎம் தயாரிப்பகம்
1964 மேரா குசார் கியா கை இந்தி
1965 குழந்தையும் தெய்வமும் தமிழ் ஏவிஎம் தயாரிப்பகம்
1966 பெற்றால்தான் பிள்ளையா தமிழ்
1966 லேத மனசுலு தெலுங்கு ஏவிஎம் தயாரிப்பகம்
1966 லாலா இந்தி அன்னை திரைப்படத்தின் மறுஆக்கம்
1968 டு கலியான் இந்தி ஏவிஎம் தயாரிப்பகம் குழந்தையும் தெய்வமும் திரைப்படத்தின் மறுஆக்கம்
1968 உயர்ந்த மனிதன் தமிழ்
1969 அன்னையும் பிதாவும் தமிழ்
1970 எங்கள் தங்கம் தமிழ்
1970 அனாதை ஆனந்தன் தமிழ்
1971 மெயின் சுந்தர் கூன் இந்தி சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் மறுஆக்கம்
1972 பிள்ளையோ பிள்ளை தமிழ்
1972 இதய வீணை தமிழ்
1972 அக்கா தம்முடு தெலுங்கு ஏவிஎம் தயாரிப்பகம்
1973 பூக்காரி தமிழ்
1974 சமையல்காரன் தமிழ் பவார்ச்சி திரைப்படத்தின் மறுஆக்கம்
1974 சந்தார்
1974 பத்து மாத பந்தம் தமிழ்
1974 கலியுகக் கண்ணன் தமிழ்
1975 வாழ்ந்து காட்டுகிறேன் தமிழ்
1975 காசுமீர் பல்லோடு தெலுங்கு
1975 அணையா விளக்கு தமிழ்
1976 வாழ்வு என் பக்கம் தமிழ்
1976 இளைய தலைமுறை தமிழ்
1976 என்ன தவம் செய்தேன் தமிழ்
1977 சொன்னதைச் செய்வேன் தமிழ்
1977 சக்ரவர்த்தி
1978 பேர் சொல்ல ஒரு பிள்ளை தமிழ்
1978 அன்னபூரணி
1979 வெள்ளி ரதம் தமிழ்
1979 நீலமலர்கள் தமிழ்
1979 நாடகமே உலகம் தமிழ்
1980 மங்கள நாயகி
1985 மலரும் நினைவுகள் தமிழ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Film director Krishnan dead". Indian Express. 17 July 1997. Archived from the original on 26 April 2013. பார்க்கப்பட்ட நாள் 17 May 2016.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. 2.0 2.1 Sanjit Narwekar (1994). Directory of Indian film-makers and films. Flicks Books. p. 156.
  3. 3.0 3.1 Randor Guy (31 July 2011). "Kuzhandaiyum Deivamum 1965". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kuzhandaiyum-deivamum-1965/article2309453.ece. பார்த்த நாள்: 3 March 2014. 
  4. Randor Guy (1 March 2014). "Araichimani or Manuneethi Chozhan (1942)". The Hindu. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/araichimani-or-manuneethi-chozhan-1942/article5740206.ece. பார்த்த நாள்: 3 March 2014. 
  5. "Manamagal 1951". தி இந்து. 15 August 2008 இம் மூலத்தில் இருந்து 13 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140313045202/http://www.hindu.com/cp/2008/08/15/stories/2008081550391600.htm. பார்த்த நாள்: 16 March 2014. 
  6. "பராசக்தி உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய கிருஷ்ணன்- பஞ்சு" (in Tamil). மாலை மலர். 26 December 2011 இம் மூலத்தில் இருந்து 4 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Np4HeMNR?url=http://cinema.maalaimalar.com/2011/12/26192924/parasakthi-director-krishnan-p.html. 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணன்-பஞ்சு&oldid=3955909" இலிருந்து மீள்விக்கப்பட்டது