உள்ளடக்கத்துக்குச் செல்

பூம்பாவை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூம்பாவை
இயக்கம்டி. பாலாஜி சிங்
கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புடி. பாலாஜி சிங்
லியோ பிலிம்ஸ்
கதைகம்பதாசன்
இசைஅட்டேபள்ளி ராமராவ்
நடிப்புகே. ஆர். ராமசாமி
டி. ஆர். ராமச்சந்திரன்
என். எஸ். கிருஷ்ணன்
கே. சாரங்கபாணி
யு. ஆர். ஜீவரத்தினம்
டி. ஏ. மதுரம்
கே. ஆர். செல்லம்
சகஸ்ரநாமம்
எம். ஆர். துரைராஜ்
கே. பி. ஜெயராமன்
டி. பாலசுப்பிரமணியம்
டி. கே. புஷ்பவல்லி
ஏ. ஆர். சகுந்தலா
ஒளிப்பதிவுபுருஷோத்தம்
படத்தொகுப்புசா. பஞ்சு
விநியோகம்கந்தன் & கோ, கோயம்புத்தூர்
வெளியீடுஆகத்து 18, 1944
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூம்பாவை என்பது 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரின் மேற்பார்வையில் டி. பாலாஜி சிங் இயக்கினார். லியோ பிலிம்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. ஆர். ராமச்சந்திரன், யூ. ஆர். ஜீவரத்தினம், கே. சாரங்கபாணி, கே. ஆர். செல்லம், எஸ். வி. சகஸ்ரநாமம் ஆகியோர் நடித்தனர். மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை மதுரை மாரியப்ப சுவாமிகள், கம்பதாசன் ஆகியோர் எழுதினர். இந்த படம் 1944 ஆகத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

கதை

[தொகு]

மயிலையைச் சேர்ந்த நகை வியாபாரி சிவநேசன் செட்டியாரின் மகள் பூம்பாவை. பூம்பாவை சிவனடியார்களிடம் அன்புகொண்டவளாக இருக்கிறாள். அவளுடைய சித்தி பொன்னம்மாள் அவளை தன் தம்பி ஏலேலே சிங்கனுக்குத் திருமணம் செய்வித்து சிவநேசனின் செல்வம் அனைத்தையும் அனுபவிக்கலாம் என்று திட்டமிடுகிறாள். ஆனால் அதற்கு சிவநேசன் தயாராக இல்லை. ஒரு நாள், சிவபெருமான் அடியார் வேடத்தில் சிவநேசனிடம் யாசகம் கேட்டு வருகிறார். அன்பின் மிகுதியால் அந்த அடியார் சிவநேசனிடம் விலை மதிப்பில்லா ஒரு மாணிக்கக் கல்லைக் கொடுக்கிறார். இந்நிலையில் மயிலையின் அரசன் ஒரு மணிமுடி செய்ய நகை வணிகரான சிவநேசனுக்கு கட்டளை இடுகிறான். அதில் ஒரு மாணிக்கக் கல்லைப் பதிக்குமாறும் கூறுகிறான். அவரின் கட்டளைப்படி தன்னிடமுள்ள மாணிக்கக் கல்லை மணிமுடியில் பதிக்க முடிவு செய்கிறார். இதனிடையில் அடியார் வேடத்தில் வரும் சிவபெருமான், பூம்பாவையிடம் அந்த மாணிக்கக் கல்லை தானமாகப் பெற்றுச் சென்றுவிடுகிறார். அரசனிடம் சிநேசன் நடந்ததைக் கூற அவனை இதை நம்ப மறுத்து, சிவநேசனையும் அவரது குடும்பத்தினரையும் நாடு கடத்துகிறான்.

இதனால் சிவநேசன் தன் குடும்பத்தினருடன் சோழனாட்டுக்குச் செல்கிறார். அங்கு திருஞான சம்பந்தரைச் சந்திக்கின்றனர். பூம்பாவையின் மனம் திருஞானசம்பந்தரின் மேல் செல்கிறது. அவரை தனியாக சந்திக்கும்போது பூம்பாவை தன் ஆசையை அவரிடம் கூறுகிறாள். அதற்கு அவர் உலக ஆசைகளில் ஈடுபட வேண்டாமல், அதற்கு பதில் தெய்வீக அறிவைத் தேடுமாறு அவளுக்குக் கூறுகிறார். சம்பந்தரின் சக்திகளைக் கேள்விபமட்ட பிறகு, மயிலையின் மன்னன் சிவநேசனின் குடும்பத்தை மன்னித்து அவர்களை மீண்டும் மயிலையில் குடியேறுமாறு செய்கிறார். இது நடந்த சிறிது காலத்தில், பூம்பாவையை ஒரு பாம்பு கடித்து அவள் இறந்துவிடுகிறாள். அதிர்ச்சியடைந்த சிவநேசன் சம்பந்தரிடம் விரைகிறார், சம்பந்தர் அவளை தன் ஆற்றலால் உயிர்ப்பிக்கிறார். பூம்பாவை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் சம்பந்தரிடம் கேட்கிறாள். ஆனால் சம்பந்தர் அவளுக்கு உயிரைக் கொடுத்ததால், இப்போது தான் தந்தையைப் போன்றவர் என்று கூறி அவளுக்கு தெய்வீக அறிவைக் கொடுக்கிறார். அதனால் அவள் அவரது பக்தையாகிறாள்.[1]

நடிப்பு

[தொகு]

நடிகர்கள்[1]

நடிகைகள்[1]

நடனம்[1]
  • வி. எஸ். சுசீலா தேவி
  • டி. எம். பாப்பா
  • ஏ. ஆர். சகுந்தலா
  • எம். ஜே. ஆண்டாள்

தயாரிப்பு

[தொகு]

பூம்பாவை திரைப்படம் திருஞான சம்பந்தரை பூம்பாவை காதலித்ததகா உள்ள நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டது. லியோ பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் டி. பாலாஜி சிங் தயாரித்தார். இப்படத்தை, கிருஷ்ணன்-பஞ்சு (ஆர். கிருஷ்ணன் மற்றும் எஸ். பஞ்சு) மேற்பார்வையில் இயக்கபட்டது. ஆனால் இயக்கிய பெருமை டி. பாலாஜி சிங்கிற்கு வழங்கப்பட்டது. இணை இயக்குநராக இருந்ததைத், பஞ்சு படத்தொகுப்பையும் செய்தார். ஒலிப்பதிவை ஈ. ஐ. ஜீவா மேற்கொண்டார். புருசோத்தமன் ஒளிப்பதிவு செய்தார். மேலும் படம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூடோன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. கம்பதாசன் கதை எழுதினார், ஏ. ஏ. சோமயாஜுலு உரையாடல் எழுதினார். வி. பி. ராமையா பிள்ளை, நடராஜ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றினர்.[1][2]

பாடல்கள்

[தொகு]

படத்திற்கு இசையமைப்பாளராக அத்தேபள்ளி ராமராவ் இருந்தார். பாடல் வரிகளை மதுரை மாரியப்ப சுவாமிகள், கம்பதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[1] ஜீவரத்னம் பாடிய "காலம் வீண் போகுதே" மற்றும் (ராமசாமி பாடிய) "ஓம் நமசிவாயம்" போன்ற பாடல்கள் பிரபலமடைந்தன.[2]

பாடல் பாடகர் இராகம் வரிகள் நீளம்
"தோடுடைய செவியன்" கே. ஆர். ராமசாமி தோடி கம்பதாசன்
"பித்தம் கொண்டோம் நமக்கு" சகஸ்ரநாமம் நாதநாமக்கிரியா
"கங்கையினால் தங்கக்குடம் நிரம்பும் முன்" டி. ஆர். இராமச்சந்திரன், ஏ. ஆர். சகுந்தலா மிச்சரகம்
"வருமாந்தளிர் மேனி" யூ. ஆர். ஜீவரத்தினம் ரீதிகௌளம் மதுரை மாரியப்ப சுவாமிகள் 02:30
"கஷ்டப்பட்டு சம்பாதிச்சதாரு" என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் பாக்கேச்வரி கம்பதாசன்
"வாசமிகு மலர்காள் என்ன மாதவம் செய்தீரோ" யூ. ஆர். ஜீவரத்தினம் மாண்டு மதுரை மாரியப்ப சுவாமிகள் 02:39
"சின்ன வயதினிலே கன்னித்தமிழ்லே சொன்னான் " என். எஸ். கிருஷ்ணன், குழுவினர் நாதநாமக்கிரியா கம்பதாசன்
"ஓம் நமசிவாயம் எனவே தினமும் உச்சரித்தால்" கே. ஆர். ராமசாமி மதுரை மாரியப்ப சுவாமிகள் 02:58
"காலம் வீண்போகுதே காதலனே குகா" யூ. ஆர். ஜீவரத்தினம் சிந்துபைரவி 02:47
"ஓம் நமசிவாய எனும் நாமம்" கே. ஆர். ராமசாமி பியாக் கம்பதாசன்
"தென்னடுடைய சிவனே ... காணிக்கையாய் ஏற்றுக் கொண்டனையே" யூ. ஆர். ஜீவரத்தினம் தாவகாந்தாரி மதுரை மாரியப்ப சுவாமிகள் 02:50
"நானென்றாணவம் தோணுங்கால்" கே. ஆர். ராமசாமி சிந்துபைரவி கம்பதாசன்
"மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு" கானட திருஞானசம்பந்தர் 00:36
"ஆடிடும் மென்மலர்ப்பாதா" யூ. ஆர். ஜீவரத்தினம் காம்போதி மதுரை மாரியப்ப சுவாமிகள் 03:20
"போதும் போதும் இந்த ஜன்மம்" சிவரஞ்சனி மதுரை மாரியப்ப சுவாமிகள் 03:00
"குளிர்ந்ததுதான் நிஜமானால் உடலா உளமா" அசரீரி பைரவி கம்பதாசன்
"சிவமதே முதன்மையான தெய்வம்" கே. ஆர். ராமசாமி பியாக்
"மட்டிட்ட புலையங்கானன்" பிம்பிளாஸ்
"சிவசிவ சிவ சங்கரனே" கே. ஆர். ராமசாமி, யூ. ஆர். ஜீவரத்தினம், குழுவினர் பிருந்தாவன சாரங்கா
"என்மேலதேனும் கோபமா" டி. ஏ. மதுரம்
"மோனத்திலே வரும் ஞானம்" யூ. ஆர். ஜீவரத்தினம் மதுரை மாரியப்ப சுவாமிகள் 03:05

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

பூம்பாவை 1944 ஆகத்து 11 அன்று சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியானது.[3] ஒரு வாரத்திற்குப் பிறகு மிகுதியான திரையரங்குகளில் வெளியானது.[4] இந்த படம் கோயம்புத்தூரில் கந்தன் & கோ, சென்னையில் ஸ்ரீ சாயா & கோ, பெங்களூரில் மைசூர் பிலிம் கார்ப்பரேஷன் ஆகியவற்றால் விநியோகிக்கப்பட்டது.[5] வணிகரீதியாக வெற்றி பெற்றது.[2] தி இந்தியன் எக்ஸ்பிரசின் கே யெஸ் என் படத்தை நேர்மறையாக விமர்ச்சித்தார் செய்தார், ஆனால் படத்தின் நீளத்தை விமர்சித்தார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Poompavai (பாட்டுப் புத்தகம்). Mount Road, Madras: Rangam Bros. 1944. Archived from the original on 6 June 2020. Retrieved 6 June 2020.
  2. 2.0 2.1 2.2 Randor Guy (16 August 2014). "Poompaavai 1944". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170102151826/http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-1944-tamil-classic-movie-poompaavai/article6324272.ece. 
  3. "Poompavai". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 11 August 1944 இம் மூலத்தில் இருந்து 6 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200606042300/https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19440811&printsec=frontpage&hl=en. 
  4. "Poompavai". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 18 August 1944 இம் மூலத்தில் இருந்து 19 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240519093117/https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19440818&printsec=frontpage&hl=en. 
  5. "Poompavai". இந்தியன் எக்சுபிரசு: pp. 6. 4 August 1944 இம் மூலத்தில் இருந்து 3 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220603110629/https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19440804&printsec=frontpage&hl=en. 
  6. Kay Yess Enn (19 August 1944). "Poompavai". இந்தியன் எக்சுபிரசு: pp. 8 இம் மூலத்தில் இருந்து 19 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240519093122/https://news.google.com/newspapers?id=9Is-AAAAIBAJ&pg=2160%2C2517612. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்பாவை_(திரைப்படம்)&oldid=4329215" இலிருந்து மீள்விக்கப்பட்டது