திரைப்படத் தயாரிப்பாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தயாரிப்பாளர் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திரைப்படத் தயாரிப்பாளர் என்பவர் திரைப்படத் தயாரிப்பை[1] மேற்பார்வையிடும் நபர் ஆகும். இவரின் பணி ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.[2]

படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வதில் இயக்குநருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார். பெரும்பாலும் தயாரிப்பாளர்கள், இயக்குநராகவோ, திரைக்கதை ஆசிரியராகவோ அல்லது திரைப்பட விநியோகிஸ்தவர்களாகவோ அல்லது நடிகர்களாகவோ இருப்பார். சில வெளியாட்களும், அரசியல்வாதிகளும் திரைப்படம் தயாரிப்பதும் உண்டு.

பல்வேறு காரணங்களுக்காக தயாரிப்பாளர் எப்போதும் அனைத்து தயாரிப்புகளையும் மேற்பார்வையிட முடியாது. இதன் காரணமாக முக்கிய தயாரிப்பாளர் அல்லது நிர்வாக தயாரிப்பாளர், உதவி தயாரிப்பாளர்கள், வரி தயாரிப்பாளர்கள் அல்லது உற்பத்தி மேலாளர்களை போன்ற பல பிரிவுகளின் கீழ் பலரை பணி அமர்த்தப்படுகின்றது.[3]

தொழில் செயல்முறை[தொகு]

திரைப்பட தயாரிப்பாளராக மாற பல வழிகள் உள்ளன. ஸ்டான்லி கிராமர் என்பவர் ஆரம்பத்தில் ஒரு திரைப்படத் தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளராகத் தொடங்கினார், மற்ற தயாரிப்பாளர்கள் நடிகர்கள் அல்லது இயக்குநர்களாகத் தொடங்கினர்.[4] இருப்பினும் பல தயாரிப்பாளர்கள் ஒரு கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது திரைப்படப் பள்ளியில் முறையாக பயறிற்று விட்டு தயாரிப்புத் துறைக்கு அறிமுகமாகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]