உள்ளடக்கத்துக்குச் செல்

பெற்றால்தான் பிள்ளையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெற்றால்தான் பிள்ளையா
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புகே. கே. வாசு
ஸ்ரீ முத்துக்குமாரன் பிக்சர்ஸ்
திரைக்கதைஆரூர்தாஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
வெளியீடுதிசம்பர் 9, 1966
நீளம்4572 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெற்றால்தான் பிள்ளையா[a] என்பது 1966 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய இப்படத்திற்கு திரைக்கதை, உரையாடலை ஆரூர்தாஸ் எழுதினார். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1921 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கத் திரைப்படமான தி கிட் என்ற படத்தை இது அடிப்படையாக கொண்டது.

பெற்றால்தான் பிள்ளையா 9 திசம்பர் 1966 அன்று வெளியானது. இப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது, திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இது மலையாளத்தில் அஷ்டமிரோகினி (1975) என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[4]

கதை

[தொகு]

கிராமத்தைச் சேர்ந்த ஜீவா (சௌகார் ஜானகி) என்ற பெண்ணை பணக்காரரான சேகர் (அசோகன்) காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது. இந்நிலையில் சேகர் மனைவியையும், மகனையும் பிரிந்து நகரத்துக்கு வந்துவிடுகிறார். நகரில் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்துவருகிறார். அதை அறிந்த ஜீவா கைக்குழந்தையுடன் நகரத்துக்கு வந்து சேகரிடம் நியாயம் கேட்கிறாள். சேகர் அவளை ஏற்க மறுத்து விரட்டிவிடுகிறார். வாழ்கையை வெறுத்த ஜீவா தன் குழந்தையை ஒரு கோயிலி்ல் விட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்ள செல்கிறாள். கோயிலில் அனாதையாக உள்ள குழந்தையை ஆனந்தன் (எம்.ஜி.ஆர்) எடுத்து வந்து அதற்கு கண்ணன் என்று பெயரிட்டு வளர்க்கிறார். அதேசமயம் தற்கொலைக்கு முயலும் ஜீவா காப்பாற்றப்படுகிறாள். அவளுக்கு பஞ்சவர்ணம் (தங்கவேலு) அடைக்கலம் கொடுக்கிறார்.

ஒரு சமயம் சேகருக்கு நேரிடும் விபத்தில் காலை இழக்கிறார். பின்னர் ஜீவாவை மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். தன் குழந்தையை தேடிவரும் ஜீவாவுக்கு அது ஆனந்தனிடம் வளர்வது தெரியவருகிறது. ஜீவா அந்தக் குழந்தையை ஆனந்தனிடம் வந்து கேட்கும்போது அவர் அதைக் கொடுக்க மறுத்துவிடுகிறார். இந்த விவாகாரம் நீதிமன்றத்துக்குச் செல்கிறது. குழந்தையை பெற்றவளிடமே ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஆனந்தனும், ஆனந்தன் இல்லாத ஏக்கத்தில் குழந்தையும் தவிக்கிறது. இறுதியில் என்ன நடந்தது எப்பதே கதை.

நடிப்பு

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

பெற்றால்தான் பிள்ளையா படம் 1921 ஆம் ஆண்டு சார்லி சாப்ளினின் தி கிட் என்ற அமெரிக்கத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.[1] இக்கதையை முதலில் சிவாஜி கணேசனிடம் சொன்னார் எழுத்தாளர் ஆரூர்தாஸ், ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் கதையை அவர் எம். ஜி. ராமச்சந்திரனிடம் சொல்ல அவர் ஒப்புக்கொண்டார்.[5] கிருஷ்ணன்-பஞ்சு (ஆர். கிருஷ்ணன் மற்றும் எஸ். பஞ்சு) இரட்டையர்கள் படத்தை இயக்கினர். எஸ். பஞ்சாபி என்ற பெயரில் பஞ்சு படத்தைத் தொகுப்பைச் செய்தார். ஸ்ரீ முத்துக்குமரன் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் கே. கே. வாசுவால் இப்படம் தயாரிக்கப்பட்டது. பி. என். சுந்தரம் ஒளிப்பதிவு செய்தார்.[6] எம். ஆர். ராதா ₹100,000 (2023 இல் ₹7.3 மில்லியன் அல்லது US$88,000) வாசுவிடம் கொடுத்து, பணம் வாங்கிக் கொள்ளாமல் படத்தில் நடித்தார். முதன்மை படப்பிடிப்பு 1964 ஜூனில் தொடங்கியது. வாசு தயாரித்த ஒரே படம் பெற்றால்தான் பிள்ளையா.[7]

இசை

[தொகு]

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.[8][9] "நல்ல நல்ல பிள்ளைகளை" பாடல் வரிகளில் சி. என். அண்ணாதுரையைக் குறிப்பிடுவதாக "மேடையிலே முழங்கும் அறிஞர் அண்ணாப் போல்" என்ற பாடல் வரிக்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பாடல் வரிகளை "மேடையிலே முழங்கும் திரு வி. க. போல்" என மாற்றியமைக்க வேண்டியதாயிற்று.[10][11]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சக்கரக்கட்டி என் சீமாட்டி"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:23
2. "செல்லக்கிளியே மெல்லப் பேசு"  டி. எம். சௌந்தரராஜன் 3:15
3. "செல்லக்கிளியே" (சோகம்)பி. சுசீலா 2:43
4. "கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 5:27
5. "நல்லா நல்ல பிள்ளைகளை நம்பி"  பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன் 6:26
6. "நல்லா நல்ல பிள்ளைகளை நம்பி" (தனியாக)டி. எம். சௌந்தரராஜன் 3:26
மொத்த நீளம்:
24:40

வெளியீடும் வரவேற்ப்பும்

[தொகு]

பெற்றால்தான் பிள்ளையா 9 திசம்பர் 1966 அன்று வெளியானது.[12][13] குழந்தைகளிடம் அன்பை விட பாசத்தை விரும்புவோருக்கு படம் கண்டிப்பாக பிடித்ததாக இருக்கும் என்று கல்கி கூறியது.[14] திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது, திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.[6]

குறிப்புகள்

[தொகு]
  1. There is no direct translation for the film's title in English; Sachi Sri Kantha's attempted translation is "Should one give birth to own a child?",[1] writer R. Kannan says it means "Is only a biological child a child",[2] and T. G. Vaidyanathan of the magazine Film World says it means that "somebody can be your son even if you haven't given birth to him".[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sri Kantha, Sachi (16 March 2016). "MGR Remembered – Part 34 | 1966 and Prelude to the M.R. Radha shooting incident". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 25 May 2016. பார்க்கப்பட்ட நாள் 5 June 2018.
  2. Kannan 2017, ப. 91.
  3. Vaidyanathan, T. G. (1974). "M. G. R. Charisma". Film World. Vol. 10. p. 87. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  4. "தமிழ் டூ மலையாளம் உண்டல்லோ?" (in ta). புதிய தலைமுறை (இதழ்): pp. 12. 16 July 2015. 
  5. Krishnamachari, Suganthy (23 February 2012). "'Star' Wordsmith". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210330065238/https://www.thehindu.com/features/cinema/star-wordsmith/article2923705.ece. 
  6. 6.0 6.1 Randor Guy (7 May 2016). "Petraalthan Pillaiya (1966)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170604094149/http://www.thehindu.com/features/cinema/petraalthan-pillaiya-1966-starring-mgr-saroja-devi-and-sowcar-janaki/article8570034.ece. 
  7. Sri Kantha, Sachi (25 April 2017). "MGR Remembered – Part 38 | Testimony of producer K.N. Vasu". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 23 October 2021. பார்க்கப்பட்ட நாள் 15 November 2022.
  8. பெற்றால்தான் பிள்ளையா (PDF) (பாட்டுப் புத்தகம்). Sri Muthukumaran Pictures. 1966. பார்க்கப்பட்ட நாள் 6 July 2022 – via இணைய ஆவணகம்.
  9. "Petralthan Pillaya (1966)". Raaga.com. Archived from the original on 16 August 2014. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
  10. சுவாமிநாதன், ஸ்ரீதர் (7 April 2016). "எம்ஜிஆர் 100 | 38 - நினைத்ததை முடிப்பவர்!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 20 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191120093632/https://www.hindutamil.in/news/blogs/77455-100-38.html. 
  11. Kannan 2017, ப. 99.
  12. "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). Ilankai Tamil Sangam. Archived (PDF) from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  13. "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.
  14. "பெற்றால்தான் பிள்ளையா?". Kalki. 25 December 1966. p. 17. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெற்றால்தான்_பிள்ளையா&oldid=4161833" இலிருந்து மீள்விக்கப்பட்டது