உமையாள்புரம்
உமையாள்புரம் | |||||
— கிராமம் — | |||||
அமைவிடம் | 10°57′12″N 79°16′42″E / 10.953447°N 79.278411°E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ. ஆ. ப [3] | ||||
மக்கள் தொகை | 4,697 (2011[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • உயரம் |
• 39 மீட்டர்கள் (128 ft) | ||||
குறியீடுகள்
|
உமையாள்புரம் (Umayalpuram or Umaiyalpuram) என்பது இந்தியா, தமிழ் நாடு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள 120 வருவாய் கிராமங்களில் ஒன்றாகும்.[4][கு 1]
அமைவிடம்[தொகு]
கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் வழியில் கும்பகோணத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. மாவட்டத் தலைநகர் தஞ்சாவூரிலிருந்து வடக்கே 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கே கும்பகோணம், வலங்கைமான் வட்டங்களும், தெற்கே அம்மாப்பேட்டை வட்டமும், மேற்கே திருமானூர் வட்டமும், வடக்கே அரியலூர் வட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை, திருவாரூர், இலால்குடி என்பன அண்மையிலுள்ள நகரங்களாகும்.
பாபநாசம், சுந்தரப்பெருமாள் கோவில் ஆகிய தொடர்வண்டி நிலையங்கள் அண்மையிலுள்ளன. ஆயினும் விரைவு வண்டிகளில் செல்வோர் தஞ்சாவூர் நிலையத்தில் இறங்கிச் செல்ல வேண்டும்.
நிருவாக தகவல்[தொகு]
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ் நாடு
மாவட்டம்: தஞ்சாவூர்
வட்டம்: பாபநாசம்
பஞ்சாயத்து: உமையாள்புரம் II
மக்கள் தொகை: 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1117 குடும்பங்களைச் சேர்ந்த 4697 நபர்கள் (2383 ஆண்கள், 2314 பெண்கள்)[5]
அஞ்சலகம்: உமையாள்புரம் (அஞ்சல் பட்டுவாடா உள்ள கிளை அலுவலகம்)
அஞ்சல் குறியீடு: 614203 [6]
தொலைபேசி குறியீடு: 04374
ஊர் சிறப்புகள்[தொகு]
கோவில்கள்[தொகு]
500-1000 வருடங்களுக்கு பழமை வாய்ந்த குங்குமசுந்தரி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயம் [7]
முருகப் பெருமானிடம் உபதேசம் பெறுவதற்காக சுவாமிமலைக்கு புறப்பட்ட ஈசன், தன்னுடன் வந்த உமையவளை, 'நீ இங்கேயே நிரந்தரமாக இரு!' என்று அமர வைத்து விட்டுச் சென்ற இடம்தான் உமையாள்புரம் என்கின்றன புராணங்கள்.. . .[8]
அண்மையிலுள்ள தலங்கள்[தொகு]
உமையாள்புரத்திற்கு அண்மையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை, நவக்கிரக தலங்கள், தாராசுரத்தில் திராவிட கட்டிட கலைச் சிறப்பை எடுத்துக்காட்டும் ஐராவத சிவன் கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகியவை உள்ளன.
பிரபல நபர்கள்[தொகு]
- உமையாள்புரம் கே. சிவராமன் - மிருதங்க வாத்திய கலைஞர்
- உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் - கருநாடக இசைக் கலைஞர்
- இயக்குனர் ஷங்கர் - திரைப்படம் இயக்குனர்
- உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர் (சற்குரு தியாகராஜரின் சீடர். உமையாள்புரம் சுவாமிநாத ஐயர் இவரின் சீடர்)[கு 2]
- உமையாள்புரம் சுந்தர பாகவதர்[கு 3]
- உமையாள்புரம் சுந்தரம் ஐயர்[கு 4]
- உமையாள்புரம் விசுவ ஐயர் - கடம் கலைஞர் [கு 5]
- உமையாள்புரம் கோதண்டராம ஐயர் மிருதங்க வாத்திய கலைஞர் [கு 6]
- உமையாள்புரம் மாலி - மிருதங்க வாத்திய கலைஞர் [9]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Umayalpuram". 2009-04-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Population Details
- ↑ Find in a minute
- ↑ அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
- ↑ உமையவள் அமர்ந்த உமையாள்புரம்
- ↑ http://www.dinamani.com/specials/kannottam/article833484.ece ஹார்வர்டில் உமையாள்புரம்!]
குறிப்புகள்[தொகு]
- ↑ தமிழ் நாட்டில் குறைந்தது நான்கு கிராமங்கள் உமையாள்புரம் என்ற பெயருடன் உள்ளன.
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிரி வட்டம்
- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம்
- சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம்
- ↑ பார்க்க: தியாகராஜர்
- ↑ பார்க்க: தியாகராஜர்
- ↑ பார்க்க: திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர்
- ↑ 1974-75 கலைமாமணி விருது பெற்ற கடம் கலைஞர்
- ↑ பார்க்க: டி. ஆர். மகாலிங்கம் (புல்லாங்குழல் கலைஞர்)